ஆப்பிரிக்க ஒறேச்சரும் ஈழத்துத் தமிழ் கட்டுப்பாடல் மரபும் : ஒப்பியல் நோக்கு

African Orature and Sri Lankan Tamil Ballad Songs tradition: A Comparative Study

Authors

  • கலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரம் / Dr. Sinnathamby Santhirasegaram தலைவர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

Keywords:

Orature, Ballad Songs, Hybrid literature, performance, Catharsis, ஒறேச்சர், கட்டுப் பாடல்கள், கலப்பு இலக்கியம், அளிக்கை, உள அமைதி

Abstract

ஆய்வுச் சுருக்கம்

ஆப்பிரிக்க ஒறேச்சர், தமிழ் கட்டுப் பாடல்கள் என்பன 'எழுதப்பட்ட வாய்மொழி இலக்கிய' வடிவங்களாக அமைந்துள்ளன. இவை பாமர மக்களுடைய பாடல்களாகவும் அவர்களுடைய வாழ்க்கையில் வேரூன்றியவையாகவும் அமைந்துள்ளன. இந்த இலக்கியங்கள் வாய்மொழி, எழுத்து, பாட்டு, நடிப்பு, இசை, கதை முதலான கலை வடிவங்களின் ஒருங்கிணைப்பினைக் கொண்டு 'கலப்பு இலக்கிய' வடிவங்களாக அமைந்துள்ளன.

அளிக்கை என்பது இரு மரபுகளினதும் மையமாக அமைகின்றது. அளிக்கையிலேயே அவை நிறைவுறுகின்றன. அளிக்கையின் ஊடாக மக்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டுவதும் அறிவூட்டலை - பண்பாட்டு நடத்தைகளை வழங்குவதும் மட்டுமன்றி 'உள அமைதி' என்ற அழகியல் அனுபவத்தை வழங்குவதும் இவற்றின் நோக்கங்களாக அமைந்துள்ளன. அத்தோடு அரசியல் வன்முறைகளுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் எதிரான கோபம், சமூக அநீதிகளுக்கு எதிரான விமர்சனம், ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரல் என்பனவற்றை உணர்ச்சித் துடிப்புடன் வெளிப்படுத்தும் எதிர்ப்பிலக்கியங்களாகவும் அமைந்துள்ளன.

Abstract:

African Orature and Sri Lankan Tamil Ballad Songs (Kaddup paadalkal) tradition were written oral literary forms. These are the songs of the laity and rooted in their lives. These literatures are ‘Hybrid literary forms’ that combine art forms such as oral, written, Song, acting, music and story etc.

Performance is the central to the both traditions. They end with the performance. Their purposes are not only to make people happy through the performance and to provide enlightening cultural behaviours, but also to provide an aesthetic experience of 'Catharsis’. Further, these are as the antagonism literature that express with emotional pulse of anger against political violence and the ruling class, criticism of social injustices and the voice of the oppressed.

References

• Ngugi, W.T.O., (2007), Notes towards a Performance Theory of Orature, www.africabib. org/guery- P.PhP.PG

• Ngugi, W.T.O., (1986), Decolonising the Mind – The Politics of Language in African Literature, London: James Currey Ltd.

• …………..., (1998), Penpoints, Gunpoints, and Dreams: Towards a Critical Theory of the Arts and the State in Africa, Oxford: Oxford University Press.

• Kabore, Andre, (2007), Pacere as the Demiurge of Orature, www.the freelibrary.com/ pacere+ as +the+demiurge+of +orature, 10.04

• Caroline, Sinavaiana Gabbard, 2001, From Speaking to Writing in Oceanic Literature, http://www.babelguides.Com/view/Work,

• Mugo, n.d., Orature and Oral Literature, https://lic.ned.univie.ac.at/en/node/6321

• சிவத்தம்பி.கா., (2002), 'தமிழில் கவனிக்கப்படாத ஒரு இலக்கிய வகை- எழுத்து நிலைபெற்ற

• வாய்மொழிப் பாடல் (Semi Oral) மரபு', யோகராசா,செ. (தொகு.), ஈழத்து வாய்மொழிப் பாடல் மரபு, திருகோணமலை: பண்பாட்டுத் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத் துறை இளைஞர் விவகார அமைச்சு.

• சுரேஸ், கனகராசா, (1993), 'வாய்மொழி மரபும், எழுத்தறி மரபும் - சமகால தமிழ்க் கவிதை.

• பற்றிய மூன்றாம் உலக இலக்கிய கண்ணோட்டம்', 'பண்பாடு', மலர் 3, இதழ் 1, கொழும்பு: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.

Published

10.11.2020

How to Cite

Dr. Sinnathamby Santhirasegaram, S. S. (2020). ஆப்பிரிக்க ஒறேச்சரும் ஈழத்துத் தமிழ் கட்டுப்பாடல் மரபும் : ஒப்பியல் நோக்கு: African Orature and Sri Lankan Tamil Ballad Songs tradition: A Comparative Study. இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies), 6(24), 28–38. Retrieved from https://inamtamil.com/journal/article/view/179