அகநானூற்றில் தலைவனின் பரத்தமை ஒழுக்கம் - உளவியல் நோக்கும் தீர்வும்

Agananootril Thalaivanin Parathamai Ozhukkam – Ulaviyal Nokum Thirvum

Authors

  • ரா. வனிதா | R. Vanitha உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அரசுக்கல்லூரி, மூணாறு - 658612. கேரளா

Keywords:

Keynotes: பரத்தமை ஒழுக்கம், கற்பு வாழ்வு, பரத்தை வயிற்பிரிவு, அலர், புனல் ஆட்டம், பரத்தையர் இல்லம், வாயில்மறுத்தல் (Prostitution, Chastity, Prostitutiondetachment, Alarm, Funneldance, Whorehouse, Denial of mouth)

Abstract

ஆய்வுச்சுருக்கம்

“இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்“ – (பிங்கல நிகண்டு, பாகம்-4, சூத்திரம் 3610) 

என்று புகழப்படும் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்ப்பது தமிழர்களின் படைப்பேயாகும். அதிலும், தமிழெனப்படுவது சங்கத்தமிழே (சங்க இலக்கியம்) என்பது தமிழ் மந்திரம். இச்சங்கத்தமிழானது (சங்க இலக்கியம்) இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்கள் வாழ்வையும் மனப்பண்புகளையும் நோக்கியதாக அமைக்கப்பட்ட ஒரு பெருங்கடல் எனலாம். உளவியல் என்பது அண்மையில் தோன்றிய ஒரு புதுக்கடல் எனலாம். இவ்விரு கடல்களும் சங்கமிக்கும் வகையில், சங்கப்பாடல்களின் கவிதை உணர்வையும், உளவியல் கருத்தையும் (ஏற்புடைய வகையில்) இணைத்துக் காணும் பாங்கில், சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானுற்றின் மருதத்திணையில் தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தினை உளவியல் அடிப்படையில்  ஆராயவுள்ளது இக்கட்டுரை.

ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்கள், தோல்விகள், போராட்டங்கள் அவர்களின் உள்ளத்தைப் பாதிக்கின்றன. அதனோடு உள்ளத்தின் நடுநிலை அமைதியையும் குலைக்கின்றன. இந்நிலையில் உள்ளம் தன்னைத்தானே பாதுகாக்கச் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எத்தகைய இடர்ப்பாடுகள் நேரிடினும் அத்தகைய சூழ்நிலைகளில் உள்ளத்தின் வீழ்ச்சியை உள்ளத்தின் போக்கே தடுத்து நிறுத்த வேண்டும் அல்லது பிறரின் அறிவுரையை ஏற்றுத் தன் வாழ்க்கையைச் சரிப்படுத்த வேண்டும் என்பதை  உணர்த்தும் வகையில் தலைவனின் நடத்தைப் போக்கும், தலைவியின் உள, தற்காப்பு இயங்குமுறையும் அமைந்திருப்பதால், உளவியல் நோக்கில் ஆராய்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்னும் காரணத்தால் அகநானூறு மருதத்திணைப் பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Abstract

It is the work of the Tamils ​​to add pride to our Tamil language which is hailed as "sweet and fluid Tamil". After all, what is called Tamil is Sangath Tamil (Sangam literature) is the Tamil mantra. This Sangam Tamil (Sangam literature) is an ocean set towards the life and attitudes of the people two thousand years ago. Psychology is the recent emergence of a new ocean of intelligence. As the two seas converge, I seek to explore, from a psychological point of view, the psychological basis of the leader's prostitution in the medical field of one of the Sangam literatures, in a way that combines (appropriately) the poetic sense and psychological concept of the Sangam songs. The disappointments, failures, and struggles that each person experiences in his or her life affect their psyche, as well as the neutral peace of the soul. In this case, the soul must make some effort to protect itself. I have selected over a hundred medical songs because they are an opportunity to explore psychologically, as the leader's behavioral mechanism is such that the leader's behavior is such that he or she must stop the downfall of the soul in such situations directly or by accepting the advice of others and adjusting his or her life.

References

Dr.C.Sethuraman. (2012). Agananooru unarthum arangal. yarl.com , 1-2.

Dr.M.Pazhaniyapppan. (2018). Semmozhi illakkiyangalil parathai azhaippu muraigal. siragu.com , 1-2.

Dr.R.Kumar. (2009). Agananooru kattum parathamai. tamil parks.50 web.com , 1-2.

ILAMPURANAAR. (2001). THOLKAPPIYAM. CHENNAI: THIRUNELVELI SAIVA SITHANTHA NOORPATHIPPUKKAZHAGAM.

Nunaviloor.ka.visayarathinam. (2017). pazhanthamil noolgalil parathamai. pathivigal , 1-2.

PINGALAMUNIVAR. (1917). PINGALANTHAI(PINGALANIGANDU). CHENNAI: MATHARAAS RIPPAN ACHIYANTHARASALAI, 87,THAMBUCHETTI VITHI.

SOMASUNDHAR, M. (1981). MANOTHATHUVA MARUTHUVAM. CHENNAI: NARMADHAPATHIPPAGAM.

SOMASUNDHARANAR, P. (1955). KURUNTHOGAI. CHENNAI: THIRUNELVELI SAIVA SITHANTHA NOORPATHIPPUKKAZHAGAM.

Su.A.Annaiyappan. (2016). Thozhiyin manithaniya panpugal. keetru.com , 1-2.

VENGADASAMINADAR, N. (1965). AGANANOORU. CHENNAI: THIRUNELVELI SAIVA SITHANTHA NOORPATHIPPUKKAZHAGAM.

Published

26.02.2022

How to Cite

RAJAN, V. (2022). அகநானூற்றில் தலைவனின் பரத்தமை ஒழுக்கம் - உளவியல் நோக்கும் தீர்வும்: Agananootril Thalaivanin Parathamai Ozhukkam – Ulaviyal Nokum Thirvum. இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies), 7(29), 208–227. Retrieved from https://inamtamil.com/journal/article/view/63