மகாபாரதப் படைப்பின்வழி விதுரரின் குணநலன்

Authors

  • த.மகேஸ்வரி உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மதுரைக் கல்லூரி, மதுரை - 11.

Keywords:

உபதேசங்கள், மன்னர்களின் வரலாறுகள், உபகதைகள்

Abstract

இலக்கியங்கள் ஒரு நாட்டின் மொழிவளம் மற்றும் மக்களின் மனவளத்தைக் காட்டும் காலக்கண்ணாடியாக விளங்குகின்றன. இராமாயணமும் மகாபாரதமும் பாரத நாட்டின் இருபெரும் இதிகாசச் செல்வங்களாகும். மனிதன் எப்படி வாழவேண்டும், மனித வாழ்வு எந்த இலட்சியத்துக்காக முற்பட வேண்டும் என்பவற்றை  எடுத்தியம்புவதில் இவ்விரண்டு இதிகாச நூல்களும் தனித்தன்மை வாய்ந்தவை.இதில் மகாபாரதம் மகரிசிகளின் உபதேசங்கள், மன்னர்களின் வரலாறுகள்,உபகதைகள் மற்றும் மனித வாழ்க்கை முறைகளை (சூதின் தீமை,சகோதரர்களுக்கிடையே ஏற்படும் போரின் கொடுமை, பொறாமையால் மனித மனங்கள் அடையும் புன்மைகள்) எடுத்துக்காட்டும் ஊடகமாகஅமைந்துள்ளது.

      மகாபாரதம்பரத வம்சத்தின் வழிவந்த குரு வம்சத்தினரான கௌரவ மற்றும் பாண்டவ குலத்தாரிடையே நடந்த பெரும் போரைத் தழுவியதாகும். அதனாலேயே அது மகாபாரதம் என்று அழைக்கப்பட்டது. வடமொழியான சமசுகிருதத்தில் வேதவியாசரால் மகாபாரதம் முதலில் இயற்றப்பட்டது. மகாபாரதத்தின் கதையை விரும்பாதவர் இலர். ஏனென்றால், அது பெண்மையைக் காக்கும் அடையாளமாக உள்ளது. பெண்மைக்கு மதிப்புக் கொடுக்கும் விதமாகவும் பெண்விடுதலையைப் போற்றும் விதமாகவும் எழுதப்பட்டதே வில்லிபுத்தூராரின்வில்லிபாரதம் ஆகும். வில்லிபாரதத்தில் வரும் கதைமாந்தர்கள் அனைவரும் நல்ல மற்றும் தீய பண்புகளின் அடையாளங்களாகக் காட்டப்பட்டுள்ளனர். மனிதன் முக்குணங்களுக்கு உட்பட்டவன் ஆவான். அது சாத்வீகம், இராசசம் மற்றும் தாமச குணமாகும்.வேதங்கள் பரம் மற்றும் இகத்தைப் பற்றிப் தெளிவாகப் பேசுகின்றன. அவை பரத கண்டத்தின் சமயமான இந்து சமயத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். மும்மூர்த்திகளான அயன், அரி, அரன் ஆகிய மூவரும் முக்குணங்களின் அடையாளமாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றனர். அவைதனில் அயன் சாத்வீக குணமாகவும் (படைத்தல்)  அரி இராசச குணமாகவும் (காத்தல்) அரன் தாமச குணத்தின் (அழித்தல்) வெளிப்பாடாகவும் உள்ளனர். இவ்அடிப்படைக் குணங்களைக் கொண்டு மகாபாரதத்தில் இடம்பெறும் முதன்மை கதாபாத்திரமான விதுரரின் பாத்திரப்படைப்பை  ஆராய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

References

கோபாலகிருஷ்ணமாச்சாரியார்வை.மு. (உ.ஆ.), மகாபாரதம், உமாபதிப்பகம், சென்னை, 2013.

கோயந்தகா, ஸ்ரீஜயதயால், மஹாபாரதத்தில் முக்கிய பாத்திரங்கள், கீதா பதிப்பகம், கோரக்பூர், 2013.

பிஹாரி த்விவேதி, ஸாந்தனு, மஹாத்மா விதுரர். கீதா பதிப்பகம், கோரக்பூர், 2010.

Published

10.08.2017

How to Cite

த.மகேஸ்வரி த. (2017). மகாபாரதப் படைப்பின்வழி விதுரரின் குணநலன். இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies), 3(10), 26–29. Retrieved from https://inamtamil.com/journal/article/view/191