Archives
-
மலர் : 10, இதழ் : 40 நவம்பர் (November) 2024
Vol. 10 No. 40 (2024)பன்னாட்டுத் தரநிலை ஆய்விதழ்கள் பின்பற்றும் மதிப்பீட்டு முறைமைகள்10.5281/zenodo.14173301
இனம் பல்துறைப் பன்னாட்டுத் தமிழாய்விதழ், தொடர்ந்து பன்னாட்டுத் தரத்திலான ஆய்வுமுறைமைகளில் கவனம் செலுத்தி வருவதை அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக இந்தப் பதிப்பில் ஆய்வுக்கட்டுரைகளை மதிப்பிடும் முறைமைகள் குறித்து அறியப்படுத்த விரும்புகின்றோம். இனம் ஆய்விதழின் மதிப்பீட்டறிஞர்கள், மதிப்பிட விரும்பும் அறிஞர்கள் பின்வரும் அளவுகோல்களைக் கொண்டு மதிப்பிடுவார்கள் என்பதையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். அவை,
*தலைப்பு (Title), ஆய்வுச்சுருக்கம் (Abstract) and அறிமுகம் (Introduction) – மதிப்பீடு (overall evaluation)- மிகச் சிறப்பு (Outstanding)
- சிறப்பு (Sound)
- சிறிய அல்லது குறைவான திருத்தங்களுடன் மறு ஒப்படைப்புச் செய்யலாம் (Sound with minor or moderate revisions)
- சிறப்பில்லை அல்லது அடிப்படைப் பிழை உள்ளது (Unsound or fundamentally flawed)
- பொருந்தாத ஆய்வு (Not applicable)
- மிகச் சிறப்பு (Outstanding)
- சிறப்பு (Sound)
- சிறிய அல்லது குறைவான திருத்தங்களுடன் மறு ஒப்படைப்புச் செய்யலாம் (Sound with minor or moderate revisions)
- சிறப்பில்லை அல்லது அடிப்படைப் பிழை உள்ளது (Unsound or fundamentally flawed)
- பொருந்தாத ஆய்வு (Not applicable)
- மிகச் சிறப்பு (Outstanding)
- சிறப்பு (Sound)
- சிறிய அல்லது குறைவான திருத்தங்களுடன் மறு ஒப்படைப்புச் செய்யலாம் (Sound with minor or moderate revisions)
- சிறப்பில்லை அல்லது அடிப்படைப் பிழை உள்ளது (Unsound or fundamentally flawed)
- பொருந்தாத ஆய்வு (Not applicable)
- மிகச் சிறப்பு (Outstanding)
- சிறப்பு (Sound)
- சிறிய அல்லது குறைவான திருத்தங்களுடன் மறு ஒப்படைப்புச் செய்யலாம் (Sound with minor or moderate revisions)
- சிறப்பில்லை அல்லது அடிப்படைப் பிழை உள்ளது (Unsound or fundamentally flawed)
- பொருந்தாத ஆய்வு (Not applicable)
- மிகச் சிறப்பு (Outstanding)
- சிறப்பு (Sound)
- சிறிய அல்லது குறைவான திருத்தங்களுடன் மறு ஒப்படைப்புச் செய்யலாம் (Sound with minor or moderate revisions)
- சிறப்பில்லை அல்லது அடிப்படைப் பிழை உள்ளது (Unsound or fundamentally flawed)
- பொருந்தாத ஆய்வு (Not applicable)
- மிகச் சிறப்பு (Outstanding)
- சிறப்பு (Sound)
- சிறிய அல்லது குறைவான திருத்தங்களுடன் மறு ஒப்படைப்புச் செய்யலாம் (Sound with minor or moderate revisions)
- சிறப்பில்லை அல்லது அடிப்படைப் பிழை உள்ளது (Unsound or fundamentally flawed)
- பொருந்தாத ஆய்வு (Not applicable)
- மிகச் சிறப்பு (Outstanding)
- சிறப்பு (Sound)
- சிறிய அல்லது குறைவான திருத்தங்களுடன் மறு ஒப்படைப்புச் செய்யலாம் (Sound with minor or moderate revisions)
- சிறப்பில்லை அல்லது அடிப்படைப் பிழை உள்ளது (Unsound or fundamentally flawed)
- பொருந்தாத ஆய்வு (Not applicable)
- மிகச் சிறப்பு (Outstanding)
- சிறப்பு (Sound)
- சிறிய அல்லது குறைவான திருத்தங்களுடன் மறு ஒப்படைப்புச் செய்யலாம் (Sound with minor or moderate revisions)
- சிறப்பில்லை அல்லது அடிப்படைப் பிழை உள்ளது (Unsound or fundamentally flawed)
- பொருந்தாத ஆய்வு (Not applicable)
- மிகச் சிறப்பு (Outstanding)
- சிறப்பு (Sound)
- சிறிய அல்லது குறைவான திருத்தங்களுடன் மறு ஒப்படைப்புச் செய்யலாம் (Sound with minor or moderate revisions)
- சிறப்பில்லை அல்லது அடிப்படைப் பிழை உள்ளது (Unsound or fundamentally flawed)
- பொருந்தாத ஆய்வு (Not applicable)
- மிகச் சிறப்பு (Outstanding)
- சிறப்பு (Sound)
- சிறிய அல்லது குறைவான திருத்தங்களுடன் மறு ஒப்படைப்புச் செய்யலாம் (Sound with minor or moderate revisions)
- சிறப்பில்லை அல்லது அடிப்படைப் பிழை உள்ளது (Unsound or fundamentally flawed)
- பொருந்தாத ஆய்வு (Not applicable)
- மிகச் சிறப்பு (Outstanding)
- சிறப்பு (Sound)
- சிறிய அல்லது குறைவான திருத்தங்களுடன் மறு ஒப்படைப்புச் செய்யலாம் (Sound with minor or moderate revisions)
- சிறப்பில்லை அல்லது அடிப்படைப் பிழை உள்ளது (Unsound or fundamentally flawed)
- பொருந்தாத ஆய்வு (Not applicable)
என்பனவாகும். இந்த அடிப்படையில்தான் மதிப்பீட்டறிஞர்கள் தங்களின் மதிப்புரைகளை வழங்குவர். அதன் மாதிரி மதிப்பீட்டுக் கருத்துரைகள் பின்வருமாறு அமையும்.
*தலைப்பு (Title), ஆய்வுச்சுருக்கம் (Abstract) and அறிமுகம் (Introduction) – மதிப்பீடு (overall evaluation)- Clear and informative; aligns well with the study’s content.
- Could be more concise/more engaging to highlight core findings.
- தெளிவும் தகவலும்; ஆய்வின் உள்ளடக்கத்துடன் நன்கு ஒத்துப்போகிறது.
- மையக் கண்டுபிடிப்புகளை முன்னிலைப்படுத்தும் வகையில் சுருக்கமாகவோ / ஈர்க்கக்கூடியதாகவோ இருக்கலாம்.
- Methodology is robust and replicable.
- Needs more clarity/detail on certain procedures for full reproducibility.
- முறையியல் வலுவானதும் மீளுருவாக்கக்கூடியதுமாகவும் அமைந்துள்ளது.
- முழுமையான மீளுருவாக்கத்திற்குச் சில நடைமுறைகளில் அதிக தெளிவு/விவரம் தேவை.
- Objectives and hypotheses are clearly defined and relevant.
- Some refinement needed for clarity and focus.
- நோக்கங்களும் கருதுகோள்களும் தெளிவாக வரையறுக்கப்பட்ட அளவில் பொருத்தமானவையா என அறிந்து கருத்துரைக்கப்படும்.
- தெளிவு, கவனம் செலுத்துவதற்குச் சில சீரமைப்புத் தேவைகளைக் கண்டறிந்து எடுத்துரைக்கப்படும்.
- Well-organized and visually effective; supports data.
- Improvements needed in labeling/clarity for better comprehension.
- நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதனை உறுதி செய்தல். அது காட்சிப்படுத்தல் மூலமாக இந்த ஆய்வு பயனுள்ளதா, படமும் அட்டவணையும் தரவினை ஆதரிக்கின்றதா எனவும் கண்டறிந்து கூறப்படும்.
- சிறந்த புரிதலுக்கான துல்லியம்/தெளிவு மேம்படுத்தப்பட வேண்டும் எனல்.
- Results are comprehensive and statistically sound.
- Analysis could benefit from further explanation/additional statistical tests.
- முடிவுகள் விரிவானவையா, புள்ளியியல் அடிப்படையில் சரியானவையா எனவும் கண்டறிந்து விளக்கப்படும்.
- மேலும் விளக்கம்/கூடுதல் புள்ளியியல் சோதனைகள் மூலம் பகுப்பாய்வுப் பயனடையலாம்.
- Insightful and aligns with objectives; highlights key findings.
- Requires a deeper analysis to fully explore implications.
- ஆய்வுரை நுண்ணறிவுமிக்க கருத்துக்கள் நோக்கங்களுடன் ஒத்துப்போகின்றதா; முதன்மையான கண்டுபிடிப்புகளை முன்னிலைப்படுத்துகின்றதா எனவும் கண்டறிவதாக அமையும்.
- விளைவுகளை முழுமையாக ஆராய்வதற்கு ஆழமான பகுப்பாய்வு தேவை. அவற்றை ஆய்வுக்கட்டுரை பின்பற்றியுள்ளதா எனவும் நோக்கப்படும்.
- Conclusions are well-supported by the data.
- Needs refinement to clearly connect to study objectives.
- முடிவுகள் தரவுகளால் நன்கு ஆதரிக்கப்படுகின்றனவா எனப் பார்க்கப்படும்.
- ஆய்வுநோக்கங்களுடன் தெளிவாக இணைந்த சீரமைப்பு உள்ளதா இல்லையா என்பதும் நோக்கப்படும்.
- Thorough and relevant; supports the study context.
- Some references are outdated/missing; verify for accuracy and completeness.
- விரிவான, பொருத்தமான ஆய்வுச்சூழலுடன் பொருந்தும் துணைநின்ற குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளனவா எனப் பார்க்கப்படும்.
- சில குறிப்புகள் காலாவதியானவையா / விடுபட்டுள்ளனவா, துல்லியமான குறிப்புகளா என முழுமையாகச் சரிபார்க்கப்படும்.
- Fully compliant; ethical considerations well addressed.
- Requires additional details on consent or data protection protocols.
- செல்நெறியில் முழுமையாக இணங்குகிறதா; நெறிமுறைக் கருத்துக்கள் நன்கு கையாளப்படுகின்றனவா எனப் பார்க்கப்படும்.
- கூடுதல் தெளிவு அல்லது தரவுப் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த கூடுதல் விவரங்கள் தேவையா எனப் பார்க்கப்படும்.
- Clear and professional language; well-structured.
- Minor language/editing improvements needed for clarity.
- தெளிவான நடைதானா, தொழில்முறை மொழிநடைதான எனப் பார்க்கப்படும்.
- தெளிவுக்காகச் சிறிய மொழி/பதிப்புத் திருத்தங்கள் தேவையா எனப் பார்க்கப்படும்.
- Useful additional data provided, enhances study.
- Could be organized for easier reference; some data may overlap.
- பயனுள்ள கூடுதல் தரவு வழங்கப்பட்டுள்ளதா, ஆய்வை வளமாக மேம்படுத்துகிறதா எனப் பார்க்கப்படும்.
- எளிதான குறிப்புக்காக ஒழுங்கமைக்கப்படலாமா, சில தரவுகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளதா எனப் பார்க்கப்படும்.
இதனை மையமிட்ட குறிப்புகளை வைத்துத்தான் இனிவரும் காலங்களில் ஆய்வுக்கட்டுரை ஏற்கப்பெற்றதாகக் கொண்டு வெளியிடப்படும் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றோம். இதன் ஆய்வு முன்னோட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகள் நெகிழ்வுத் தன்மையுடன் பின்பற்றப்படும். அதன்பின்பு முறையான அல்லது புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் ஆய்வுகளை மட்டுமே இனம் ஆய்விதழ் வெளியிடும்.
மகிழ்வுடன்,
மு. முனீஸ்மூர்த்தி
சத்தியராஜ் தங்கச்சாமி
முதன்மைப் பதிப்பாசிரியர்கள்
-
மலர் : 10, இதழ் : 39 ஆகஸ்ட் (August) 2024
Vol. 10 No. 39 (2024)தமிழ் ஆய்வாளர்கள் பன்னாட்டுத் தரநிலையில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவதில் தயக்கம் ஏன்?இனம் பல்துறைப் பன்னாட்டு ஆய்விதழ், பல்வேறு முயற்சிகளைக் கடந்த காலங்களில் செயல்வடிவங்களுக்குக் கொண்டுவந்தது; இப்பொழுது கொண்டு வருவதிலும் முனைப்புக்காட்டி வருகின்றது என்பதைத் தொடர்ந்து இனத்துடன் பயணிப்பவர்கள் அறிவர். தமிழ் ஆய்வுகள் பன்னாட்டுத் தரத்திலான ஆய்வுமுறைகளைக் கடைப்பிடித்து எழுதுவதில் பின்தங்கியே உள்ளன. அதனால் என்னவோ புதிய ஆய்வுச் சிந்தனைகளைக் காண்பது அரிதாகவே உள்ளது. ஆய்வேடுகள் எழுதுவதுபோன்றே ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவது என்ற எண்ணம் இன்று அருகியே உள்ளது. ஒரு தலைப்பினை எடுத்துக்கொண்டு அதற்கு முன்பு அந்தத் தலைப்பில் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளனவா என்ற புரிதல் இல்லாமல் அத்தலைப்பிற்குரிய விளக்கவுரையாகப் பெரும்பான்மையான ஆய்வுகள் குவிந்துள்ளன என்றால் மிகையில்லை. அவற்றை ஆய்வுகள் என்பதா அல்லது பொதுக்கட்டுரை என்பதா?
ஆகையால், இனம் இதழானது கடந்த பத்தாண்டுகள் கண்ட படிப்பினைகளுள் அதுவும் ஒன்று. எனவே, இனம் பதினோராம் ஆண்டில் தடம் பதிக்கும்பொழுது பன்னாட்டுத்தர நிலையில் அறிவியல்சார் ஆய்வுகள் பின்பற்றிவரும் அமைப்புமுறையைத் தமிழ் ஆய்வாளர்தம் சிந்தையிலும் கொண்டு வந்து, புதுப்பொலிவுடன் இன்னும் சில அளவுகோல்களை வரையறுத்து ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட முனைகின்றது. அதன் முதற்கட்ட முயற்சியாக, அந்த ஆய்வுக்கட்டமைப்பின் அடிப்படையிலான ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்குரிய வழிகாட்டல் குறிப்புகளை இதன்வழி வழங்குகின்றது; பின்பு அதுகுறித்த பயிற்சிகளையும் வழங்குவது எனத் திட்டமிட்டு வருகின்றது. அதனடிப்படையில் உருவானதே இந்த எழுத்தாக்கமாகும். அதாவது அறிவியல்முறையைப் பின்பற்றும் (முதலிரு) முன்னணி ஆய்விதழ்களின் அமைப்புமுறையை இதன்மூலம் இங்குக் கவனப்பபடுத்த முனைகின்றது இனம். இதில் ஆய்வுச்சுருக்கம், திறவுச்சொற்கள், அறிமுகம், ஆய்வுமுறைகள், முடிவுகள், கலந்துரையாடல், முடிவுரை, மேற்கோள், துணைநூற்பட்டியல், கட்டுரைத் தகுதி ஆகியன அமைய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தலையங்கமாக இந்தப் பதிப்பில் இடம்பெறுகின்றது.
தமிழ் ஆராய்ச்சியாளர்கள் எதிர்வரும் பதிப்புகளில் இனம் பதிப்பு நெறிமுறையைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை எழுதி ஒப்படைப்புச் செய்யுங்கள்.
மாதிரிக்குப் பின்வரும் கட்டுரையின் அடிப்படை அமைப்பினைப் பாருங்கள்...
அறிவுசார் சொத்துக்களின் பதிப்புரிமையைப் பெறுவதற்கான தேவையும் வழிமுறையும் Requirement and Method of Obtaining Copyright of Intellectual Property(தலைப்பின் எழுத்துரு அளவு 14 இருத்தல் வேண்டும்)
ந.இராஜேந்திரன் | N.Rajendran2ORCID , பா.கவிதா | P.Kavitha2ORCID(ஆசிரியர் பெயரின் எழுத்துரு அளவு 12 இருத்தல் வேண்டும்)
1 Assistant Professor, Department of Tamil, PSG College of Arts and Science, Coimbatore – 641 014. n[email protected] Ph.No - 9597536324.
2 Assitant Professor Of Tamil, PSGR Krishnammal College for Women, Coimbatore. [email protected].
DOI: 10.5281/zenodo.13294453
(ஆசிரியரின் குறிப்புகள் எழுத்துரு அளவு 11 இருத்தல் வேண்டும்)
ஆய்வுச்சுருக்கம் (Abstract)
அறிவுசார் சொத்துக்களைப் பயன்படுத்த அப்படைப்பாளரின் அனுமதியைப் பெறுவது அவசியமாகும். அப்படைப்பாளரின் அனுமதியைப் பெறாமல் கருத்தையோ, ஆய்வையோ அல்லது எழுத்தையோ நகலெடுத்துத் தன்னுடைய சொந்த முயற்சியில் உருவானதுபோல் திருட்டுத்தனமாகப் பயன்படுத்தினால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். பணம், பொன், பொருள்களைத் திருடுவது மட்டும்தான் திருட்டு என்பது அல்ல. பிறருடைய கருத்துக்களைத் திருடுவதும் திருட்டுதான். அவ்வகையில் தற்காலத்தில் கல்வி சார்ந்த எழுத்துத் துறைகளில் கருத்துத்திருட்டு பரவலாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இத்திருட்டைத் தவிர்ப்பதற்குப் படைப்பாளர்கள் தமது படைப்புகளைப் பதிப்புரிமை (Copyright) செய்து கொள்ள வேண்டும். ஒருவரது எண்ணத்தில் உருவாகும் அறிவுசார் சொத்துக்களைப் பிறர் எளிமையாகத் திருடி அவருடைய கருத்தைப் போல் பதிவுசெய்துவிடுகிறார்கள் என்பதை அறிந்துகொண்ட இந்திய அரசு இக்குற்றத்தைக் களைவதற்காகவே தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையை (Copyright Division, Department For Promotion of Industry and Internal Trade) உருவாக்கியுள்ளது. இத்துறை 19 வகையான பிரிவுகளைக் கொண்டுள்ளது.
It is necessary to obtain the permission of the Creator to use the intellectual property. It is a punishable offense to copy an opinion, study, or writing without obtaining the author's permission and using it as if it were one's initiative. Theft is not only about stealing money, gold, and things. Stealing other people's ideas is also plagiarism. In this way, there is widespread disinformation in the field of academic, writing these days. To avoid this mistake, creators should copyright their works. The Government of India has created the Department for Promotion of Industry and Internal Trade (Copyright Division, Department for Promotion of Industry and Internal Trade) to eliminate this crime after knowing that others simply steal the intellectual property created in one's mind and register it as his idea. The department consists of 19 different divisions.
திறவுச்சொற்கள் (Keywords): ந.இராஜேந்திரன், பா.கவிதா, அறிவுசார் சொத்து, பதிப்புரிமை, அறிவுத் திருட்டு, ஒழுக்க மீறல்.
(ஆய்வுச்சுருக்கத்தின் எழுத்துரு அளவு 9 இருத்தல் வேண்டும்)
முன்னுரை
பதிப்புரிமை (Copyright) என்பது ஒரு தனிநபரின் இலக்கியம், கலை, இசை, நாடகம், கணினி மென்பொருள், வடிவமைப்புகள், வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் சின்னங்கள், பெயர்கள், படங்கள் ஒலிப்பதிவு மற்றும் திரைப்படம் உள்ளிட்ட படைப்புகளின் எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ மற்றும் உரிமையாளருக்கோ அவர்களது தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கும் அங்கீகரிக்கப்பட்ட சட்டமாகும். பதிப்புரிமையில் மேற்குறிப்பிட்ட பல பிரிவுகள் இருப்பினும், எழுத்துத்துறையில் அறிவுசார் சொத்துக்களை ஏன் பதிப்புரிமை செய்ய வேண்டும்? செய்வதற்கான தேவை என்ன? பதிப்புரிமை செய்வதற்கான வழிமுறை என்ன? என்பது பற்றி ஆராய்ந்து விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
(கட்டுரைப் பகுதியின் எழுத்துரு அளவு 10 இருத்தல் வேண்டும்)
துணைநூற்பட்டியல்
(துணைநூற்பட்டியலின் எழுத்துரு அளவு 9 இருத்தல் வேண்டும்)
தமிழ் ஆய்வுகளை உலகத்தரத்திற்கு எடுத்துச்செல்ல முன்வருவீர்களாக....
-
மலர் : 10, இதழ் : 38 மே (May) 2024
Vol. 10 No. 38 (2024)பத்தாம் ஆண்டுப் பயணத்தில் ‘இனம்’
2015இல் தொடக்கம். தமிழியலில் அச்சு இதழ்கள் பரவலாகக் கவனம் பெற்றிருந்த காலம் அது. கோயமுத்தூரிலிருந்து, தொலைபேசி உரையாடலினூடாக “நாம் இருவரும் சேர்ந்து இதழ் ஒன்று தொடங்குவோமா?” என்று செய்தி வந்து விழுந்தது. எதிர்முனை திருச்சிராப்பள்ளியில். “இதழ் தொடங்குவதென்றால் பொருளாதாரம் அதிகம் தேவைப்படுமே? நாம் இருவருமே சுயநிதிப் பிரிவில் சில ஆயிரங்கள் ஊதியம் பெற்றுக்கொண்டு எவ்வாறு சாத்தியம்? எனும் இரு வினாக்கள் எதிர்முனையிலிருந்து. அப்படியெனில் மின்னிதழ் தொடங்குவோமே! எனும் நேர்மறைத் தகவல் மறுமுனையிலிருந்து. “இதழுக்குரிய பெயரையும் நீங்களே முடிவு செய்து கூறுங்கள்” எனும் கூடுதல் பொறுப்பும் வந்தது. இப்போது பெயர் குறித்த சிந்தனையில்.
ஒற்றைச்சொல்லாகத் திகழ வேண்டும்; சிறுசொல்லாகத் திகழ வேண்டும்; குறிப்பாக, பன்மை அடையாளத்தை உணர்த்த வேண்டும் எனும் தொலைநோக்கோடு சிந்தித்த பெயரே ‘இனம்’.
எங்கள்மீது நன்மதிப்பும் ஆய்வில் தொடர் ஈடுபாடும் கொண்ட அறிஞர் பெருமக்களையும், இளம் ஆய்வாளர்களையும் தொடக்கத்தில் அணுகி, முன்ஒப்புதல் பெற்று, ஆலோசனைக் குழுவிலும் ஆசிரியர் குழுவிலும் இடம்பெறச் செய்தோம். அன்னாருள் பலரின் ஒத்துழைப்பு (நன்கொடை எனும் பெயரில், இதழ்க் கட்டுரை மதிப்பீடு எனும் பெயரில், பணிபுரியும் நிறுவனத்துடன் இணைந்து கருத்தரங்கினை ஒருங்கிணைத்தல், அவ்வப்போது தகுதியான ஆய்வுக்கட்டுரை வழங்குதல், என) தொடர்ந்து கிடைத்து வருகின்றது. அதனால்தான் இதழானது பத்தாண்டு மைல்கல்லை எட்டியுள்ளது. மகிழ்ச்சியும் நன்றியும்!
இடைப்பட்ட காலத்தில், இதழ் நிருவாக மேலாண்மைக்காக, உதவிக்காகப் பதிப்பகமும் தொடங்கப்பட்டது தனி நிகழ்வு.
2017-2018வரை பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்புநிலை, GOOGLE SCHOLAR, ISSN, JOURNAL FACTOR, IIJIF, COSMOS, CITE FACTOR, SCIENTIFIC JOURNAL IMPACT FACTOR, JIFACTOR, ZENODO DOI, ARCHIVES என இதழின் பல்வேறு தள அடையாளங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இன்னும் இனம் போன்ற தமிழ் ஆய்விதழ்கள் உருவாக வழிகாட்டிய இனிமையும் உண்டு. இனம் ஆய்விதழில் வெளியிடப்பெறும் ஆய்வுகள் தரப்புள்ளிகள் (H index, I index போன்ற) பெறும் களங்களையும் ஆய்து வருகின்றது. இப்படி வளர்ச்சியை நோக்கிச் செல்லும் இனம் இடையில் சில மாதங்கள், தமிழர்க்கேயுரிய ‘புகைமை மனவுணர்வு’ காரணமாக இணையப் பக்கம் முடக்கம் எனும் எதிர்நிலையினூடாகவே இதழ் நடந்து வந்தது.
தமிழ்நாட்டிலிருந்து தற்போதைய காலம் வரைக்கும், ஆய்வு நெறிமுறைகளைக் கவனத்திற் கொள்ளாத சில கட்டுரைகளும் வந்து சேர்கின்றன எனும் கசப்பான உண்மையையும், அயலகத்திலிருந்து (குறிப்பாக, இலங்கை, சிங்கப்பூரிலிருந்து) வரும் கட்டுரைகள் முறையான தரவுகளோடும் உரிய அணுகுமுறைகளைப் பின்பற்றியும் வந்து சேர்கின்றன எனும் இனிப்பான உண்மையையும் சொல்லியே ஆக வேண்டும்.
சமகால இதழ் வெளியீடுகளில் 95 விழுக்காடு மொழிப்பிழைகளின்றி வெளிவரும் ஆய்விதழ் எனும் பெயரைப் புறமதிப்பீட்டாளர்களால் பெற்ற தகுதிப்பாடு உடையது எனும் பெயரோடு, ஆய்வு முறையியலையும் கவனத்திற் கொண்டு, முன்னோக்கி நடைபோடுகின்றது ‘இனம்’.
மகிழ்வுடன்,
மு. முனீஸ்மூர்த்தி
சத்தியராஜ் தங்கச்சாமி
முதன்மைப் பதிப்பாசிரியர்கள்
*************
-
மலர் : 9, இதழ் : 34 மே (May) 2023
Vol. 9 No. 34 (2023)