கிராமப்புற மாணவர்களிடையே மொழி கற்றல் கற்பித்தலில் உள்ள சிக்கல்கள்
Impediments in Teaching and Learning Language among Rural students
Keywords:
திறவுச்சொற்கள் - கிராமப்புற மாணவர் - வாழ்வியல் சூழல் - விழிப்புணர்வு - மொழிஅறிவு - பயணநேரம் - மனச்சோர்வு - அறிவியல் மாணவர்கள் - நகர்புற மாணவர்கள் - தீர்வுகள் Keywords Rureal students - Biological environment - Awareness Language knowledge - Travel Time -Depression - Science students - Urban students - SolutionsAbstract
ஆய்வுச்சுருக்கம்
‘கிராமப்புற மாணவர்கள்’ மொழிப்பாடம் தேர்வு செய்தலில் தொடங்கி, அவர்களின் குடும்பப் பின்ணனி, வாழ்வியல் சூழல், கற்றலுக்கான சூழல், கல்விசார் விழிப்புணர்வுகளில் அவர்களுக்கான ஈடுபாடு போன்றவை மொழி கற்றலுக்கு அடிப்படையாக அமைகின்றன. அறிவியல் பாடத்தினைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கும் மொழி படிக்கும் மாணவர்களுக்கும் இடையே கல்வி கற்றலில் இருக்கும் வேறுபாடு. அதற்கான காரணங்கள் ஆராயப்படுகின்றன. களத்தில் மாணவர்களிடையே சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படுகிறது.
செவ்விலக்கிய மொழிநடையைப் பேசுவதில், வகுப்பெடுப்பதில் ஏற்படுகின்ற இடப்ர்பாடுகள், மொழியைக் கற்பிப்பதில் மேற்கொள்ளப்படும் புதிய உத்திகள், மனச்சோர்வு அடையா வண்ணம் ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், மொழியை உச்சரிக்கவும், வாசிக்கவும், பிழையின்றி எழுதவும் செய்முறைக் கூடங்களை உருவாக்குதல். செய்முறைக் கூடங்களில் பயிற்சிகளை அளித்தல் தொடர்பான விதிமுறைகள். மொழியைக் கற்கும் மாணவர்களிடையே மொழியைக் கற்றல் மற்றும் இலக்கியங்களை உருவாக்கும் திறனை மேம்படுத்துதல். இணைய வழி மொழி வகுப்புகள் மூலம் உலக நாடுகளில் உள்ள மாணவர்களை அறிமுகம் செய்தல். அவர்களின் கற்றல் ஆர்வத்தினை அவர்கள் வாயிலாகவே கேட்டறியச் செய்தல்.
இலக்கியக் கற்றலின் இன்றியமையாமையைத் தெளிவுபடுத்துதல். புழங்கு தமிழிலிருந்து செந்தமிழ் நடையைக் கற்கத் தேவையான உளவியல் மற்றும் வகுப்பறைச் சூழலைச் சரிசெய்தல். இலக்கியம் கற்றலின் இடர்ப்பாடுகளைக் களைந்து மொழித்திறனை மேம்படச் செய்தல் போன்றவை இந்த ஆய்வின்வழிக் கண்டறியப்பட்டு முடிவுகள் கொடுக்கப்படுகின்றன. கிராமப்புற மாணவர்கள் இலக்கியம் கற்றலில் வளர்நிலை அடைய இந்த ஆய்வின் முடிவுகள் உறுதுணையாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Abstract
Language learning is not ‘a cup of tea’ for the students of rural background. Teaching and learning language to rural students is influenced by multiple factors such as their social and family background, their awareness and involvement in the field of education etc. The research proposes to do a statistical study of the difference in the learning capability of science and arts major students and also tries to analyze the reasons behind it. Limitations in speaking and understanding the classical Tamil in language classes has also been taken into consideration for research. The students must be made to understand the latest pedagogy of language teaching with ease. The learning capacity of the students with regard to the use of four skills of the language must be enhanced with the usage of language labs. A few decades before the concept of pen friends was rampant among youngsters. The same concept of introducing new students. Each student must have a discussion with a foreign student of his/ her age, about the latest learning methods. This would help to develop interest in language learning. Thus, the researcher proposes to find out new pedagogic methods to enhance the language learning capability of the rural students. These new methods would surely develop the interest among the rural students in learning a language.
References
களஆய்வின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட செய்திகள் - ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
இராஜேந்திரன் என்.எஸ் (2006), “தமிழ் கற்றல் கற்பித்தலில் சவால்களும், பரிந்துரைகளும்”, ஏழாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு - மாநாட்டு ஆய்வடங்கல்.
மன்னர்மன்னன் ம., (2011) “உயர்கல்விக் கூடங்களில் தமிழ் : மெய்ம்மையும் சவால்களும்” மலேசியப் பன்மொழிச் சூழலில் தமிழ், மலாய் பல்கலைக்கழக வெளியீடு.
Clawson G.S. James And Haskins E.Mark, (2016), Teaching Management, Cambridge University Press, New Delhi.
Downloads
Published
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.