விசேடதேவையுடைய மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிப்பதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலய கோறளைப்பற்று வடக்குகக் கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கனிஷ்ட இடைநிலை வகுப்புப் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அளவை நிலை ஆய்வுChallenges faced by teachers in increasing the achievement level of students with special needs : A Survey study based on selected junior secondary schools in North section of Kalkudah education zone, Batticaloa District
Keywords:
உள்ளடங்கற் கல்வி, விசேட கல்வித் தேவைகள், கனிஷ்ட இடைநிலை, அடைவுமட்டம், சவால்கள்Abstract
உள்ளடங்கற்கல்வி(IE) என்பது அனைவரும் அடையப் பாடுபட வேண்டிய ஓர் உயர்ந்த இலக்காகும். 1994க்குப் பின்னரான கல்விக் கொள்கைகளுக்கு இணங்க, IE மற்றும் அதனுடன் தொடர்புடைய அணுகுமுறைகளைச் செயற்படுத்துவது வளர்ந்து வரும் இலங்கை போன்ற நாடுகளில் சவாலாக உள்ளது. கற்றலில் விசேட தேவையுடையவர்களை(SNE) உள்வாங்கிப் புதுமையான கொள்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி நிலையான எதிர்காலத்திற்காகப் பாடுபடுவதில் ஆசிரியர்களின் கற்பித்தலானது மிகவும்; முக்கியமானது. இந்த ஆய்வானது குறிப்பாக மட்டக்களப்பு பிரதேசத்தில் கற்றல்- கற்பித்தல் செயற்பாட்டில் சாதாரண மாணவர்களைப் போலவே விசேட தேவையுடைய மாணவர்களது இடர்பாடுகளைஅகற்றி வகுப்பறைச் செயற்பாட்டிற்குள் உள்வாங்குவதை நோக்கமாகக் கொண்டது. “விசேட தேவையுடைய மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிப்பதில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்” எனும் தலைப்பில் அமைந்த இவ்வாய்வானது, உள்ளடங்கற்; கல்வியை அமுல்படுத்தும் பாடசாலைகளில் விசேட தேவையுடைய மாணவர்களுக்குச் சிறந்த அணுகுமுறையுடன் புதுமையான கற்பித்தலை எதிர்காலத்தில் மேம்படுத்துவதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இருப்பினும், ஆசிரியர்களின் போதிய செயற்பாடுகளின்றி இது சாத்தியமில்லை. கல்வியில் நிலைபேறான புதிய தொழிநுட்பத்தையும், கற்பித்தலையும் வெற்றிகரமாகச் செயற்படுத்துவது அவசியமாகும். இந்தப் பின்னணியில் ஆசிரியர்கள் அனுபவிக்கும் சவால்கள் குடும்பம், பாடசாலை, சமூகம் எனத் தொடர்ந்தாலும் வகுப்பறைக் கற்பித்தலில் ஆசிரியர்களால் வகுப்பறை நுட்பங்கள், கற்பித்தல் முறைகள், கற்பித்தல் சாதனங்கள், கணிப்பீடு, மதிப்பீடு சார்ந்து பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. SNE மாணவர்களது தேவைகளைப் புரிந்து கொள்ளல், கற்பித்தல் சூழலில் ஆசிரியர்கள் அனுபவிக்கும் சவால்களைக் கண்டறிதல், அனைவருக்கும் கல்வி என்ற சிந்தனையை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்கான வழிமுறைகளை முன்வைத்தல் இவ்வாய்வில் முக்கியமானதாகும். ஆசிரியர்களின் சவால்களை ஆராய்ந்து வகுப்பறைக் கற்பித்தலுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு அளவைநிலை ஆய்வாகும். கல்குடா வலயத்தில் 05 பாடசாலைகள் நோக்க மாதிரி அடிப்படையிலும், எழுமாற்று மாதிரி அடிப்படையில் விசேட தேவை சிறப்புக்கல்விக்கான ஆலோசகர்கள் (ISA/ADS) 02 பேரும், 05 அதிபர்களும், 90 ஆசிரியர்களும், 30 பெற்றோர்களும், படையாக்கப்பட்ட எழுமாற்று மாதிரி முறையில் 120 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து தகவல்களைப் பெறும் வகையில் தரவு சேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, குழுக் கலந்துரையாடல், நேர்காணல், ஆவணங்கள் ஆகியன பயன்படுத்தப்பட்டன. தெரிவு செய்யப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றின் மூலமாகப் பெறப்பட்ட அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகள் பொருத்தமான மென்பொருள் முறைகளினூடாக வகைப்படுத்தல், வியாக்கியானம், கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டன. இருப்பினும், IE நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் பாடசாலை மட்டத்தில் IE அணுகுமுறையுடனான துணைக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாய்வின் படி கற்பித்தல் தொடர்பில் பூரண விளக்கமின்மை, வளப்பற்றாக்குறை, மாணவர்களின் அடைவுமட்ட வீழ்ச்சிக்கான காரணங்கள், பெற்றோரின் அக்கறையின்மை, ஆசிரியர்களின் வாண்மைவிருத்திக் குறைவு, ஆசிரியர்களின் நேரப்பற்றாக்குறை, மாணவர் வரவின்மை என்பன கண்டறியப்பட்டன. எனவே, விசேட தேவையுடைய மாணவர்களை அணுகும் வகையில் ஒவ்வொரு ஆசிரியரும் பாடசாலையில் IE அணுகுமுறைகளை மேம்படுத்தல், ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டங்களை அரசு ஏற்பாடு செய்யும் விதப்புரைகளும் இடம்பெறுவதோடு, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கான ஆலோசனைகளாக IE உம் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பமும், SNE மாணவர்களது வன், மென் திறன்களின்; பயன்பாடு, தரமான IE பாடசாலையும் வளமுகாமையும், 21ம் நூற்றாண்டும் IE யின் முக்கியத்துவமும் முதலான விடயங்களை மையப்படுத்தியதாக ஆய்வாளனால் முன்வைக்கப்பட்டன.
Inclusive Education (IE) is a lofty goal to strive for all. Implementing IE and related approaches in line with post-1994 education policies is a challenge in developing countries like Sri Lanka. Teachers' pedagogy is more about integrating people with special learning needs (SNE) and successfully implementing innovative policies to strive for a sustainable future and important goals. This study aims to remove the barriers of students with special needs in the learning-teaching process especially in Batticaloa area like normal students and integrate them into classroom activities. The study titled “Challenges faced by teachers in increasing the achievement level of students with special needs” includes; The future development of innovative pedagogy with a better approach to SNE in implementing education is based on schools. However, this is not possible without adequate efforts of teachers. Successful implementation of sustainable new technology and teaching in education is essential. In this context, the challenges experienced by teachers continue to be family, school and society, but in classroom teaching, teachers have to face many challenges depending on classroom techniques, teaching methods, teaching devices, calculation and evaluation. Understanding the needs of SNE students, identifying the challenges faced by teachers in the teaching environment, and proposing ways to successfully implement the concept of education for all is important in this study. It is a quantitative study that explores the challenges of teachers and prioritizes classroom teaching. In Kalkudah zone, 05 schools were selected on the basis of purposive sampling, 02 Special needs education consultants (ISA), 05 principals, 90 teachers, 30 parents and 120 students were selected on the basis of random sampling. Questionnaire, group discussion, interview and documents were used as data collection tools to get information from them. All the selected schools were observed. Quantitative and qualitative data obtained through these were incorporated into the process of classification, interpretation and discussion through appropriate software methods. However, sub-committees with an IE approach should be formed at the school level to facilitate IE practices. According to this study, it was found that there is a complete lack of explanation about teaching, lack of resources, the reasons for the decline in students' achievement, parents' apathy, teachers' lack of intellectual development, teachers' lack of time, and student absenteeism. In addition to suggestions for teachers, suggestions for future research include IE and Information communication technology (ICT), SNE students' hard and soft skills; Application, quality IE school and resource camp, importance of 21st century and UN were presented by the researcher.
References
தேசிய கல்வி நிறுவகம், (1991). விசேட தேவையுடைய மாணவர்கள், பாகம் -1. மகரகம:பட்டப்பின் ஆசிரியர் கல்வித்துறை, தேசிய கல்வி நிறுவகம்.
சின்னத்தம்பி, மா.(2004). ஆசிரியர்களின் வகிபங்கும் அந்தஸ்தும், அகவிழி-(01). கொழும்பு: டொறின்டன். அகவிழி வெளியீடு.
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்,(2007). விசேட நிலைமைகள் மற்றும் கற்றல் தேவைக்கான அறிமுகம். நாவல நுகேகொட:கல்விபீடம், இடைநிலை, மூன்றாம் நிலைக் கல்வித் துறை பட்டமேற்கல்வி நிகழ்ச்சித்திட்டம்.
சிவகுமார்,த.(2007). விசேட கல்வி அறிமுகமும் பிரயோகங்களும். திருநெல்வேலி: குரு பிறிண்டர்ஸ்.
Abbas, K. D. A. (2021). Factors influencing students reading comprehension difficulties amidst the use of modular distance learning approach in Mindanao State University Sulu - Senior High School. Open Access Indonesia Journal of Social Sciences, 4(6), 447.
Forlin, C.(2004). Promoting special needs students in Western Australian school, International Journal of Special Education, 8,183-200
Salomi,D.(2018) Includive-causes, problems&solutions, International journal of management technology and engineering, 8(2249-7455).
Abeywickrama, S. P., Jayasinghe, I. K. & Sumanasena, S. P. (2013). Excluded in inclusive schools: Experiences of children with disabilities, their families and teachers in Sri Lanka. Journal of Disability, CBR & Inclusive Development, 24(1)
UNICEF.(2013). Examples of inclusive education of SriLanka. Retrieved from: http://www.unicef.org/rosa/inclusiveSlk.pdf
Mag, A. G., Sinfield, S., & Burns, T.(2017). The benefits of inclusive education: new challenges for university teachers. In MATEC web of conferences (Vol. 121). EDP Sciences.
Hettiarachchi, S. & Das, A.(2014). Perceptions of “ special needs” and perceived preparedness among school teachers in Srilanka. Journal of Teaching and Teacher Education, 43,143.
Ministry of social welfare.(2003). National policy on disability for Srilanka; Sethsiripaya Battaramulla SriLanka. Retrieved from: http://www.unicef.org/srilanka/disablitypolicy(1).pdf
LIST OF ABBREVIATION: SNE-Special Needs Education, ISA-In -Service Advisors, IEP-Individualized Educational Project, IE-Inclusive Education, IDEA-Individuals with Disabilities Education Act
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2025 இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies)

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.