தமிழிலக்கிய மரபுகளை வெளிப்படுத்துவதில் சீறாப்புராணத்தின் வகிபங்கு (இரசனைமுறைத் திறனாய்வு நோக்கினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)

Cīṟāppurāṇattiṉ vakipaṅku (iracaṉaimuṟait tiṟaṉāyvu nōkkiṉai aṭippaṭaiyākak koṇṭa āyvu)

Authors

  • முருகையா சதீஸ் | Murukaiya Sathees தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை

Keywords:

சீறாப்புராணம், தமிழிலக்கிய மரபு, இரசனைமுறை, திறனாய்வு, Seerapuranam, Traditions of old literature, Aesthetic approach, Criticism

Abstract

ஆய்வுச் சுருக்கம்

இலக்கியம் பற்றிய புரிந்து கொள்ளலில் இலக்கியத் திறனாய்வின் பங்கு மிக முக்கியமானது. அழகியல் பற்றி அறிவதற்கு இரசனையுடைய ஈடுபாடே முக்கியமானதாகும். இதுவே இரசனைமுறைத் திறனாய்விற்கு அடிப்படையாகும். உமறுப்புலவரால் இயற்றப்பட்ட சீறாப்புராணம், தான் பேச எடுத்துக்கொண்ட இஸ்லாமியக் கொள்கைப் பொருளால் நிலைபெற்றாலும், தனக்கு முந்தைய இலக்கிய மரபுகளையும் சொல்லால், பொருளால் மரபு வழுவாது பின்பற்றியுள்ளது. அத்தகைய இலக்கிய மரபுகளைப் பின்பற்றுவதில் சிறந்து நின்றதோடு மட்டுமல்லாமல் காப்பிய நோக்கத்தினை நிலைநாட்டுவதிலும் வெற்றி பெற்றுள்ளது. சீறாப்புராணக் காப்பியப் புலவர் உமறு தனக்கு வழிகாட்டிய காப்பியக் கவிஞர்களான திருத்தக்கதேவரையும், கம்பரையும், சேக்கிழாரையும் யாப்பால், நடையால், பாட்டோசையால், சொல்லாட்சித் திறத்தால், மரபுவழி வர்ணனைகளால் பெரிதும் பின்பற்றித் தான் ஒரு மரபு வழிப்பட்ட காப்பியக் கவிஞர் என்பதையும் உறுதிசெய்துள்ளார். ஆகையால் தமிழிலக்கிய மரபுகளின் பிரதிபலிப்புகள், இஸ்லாமியத் தமிழ்க் காப்பியமாகிய சீறாப்புராணத்தில் எவ்விதம் பயிலப்பட்டு வந்துள்ளன என்பதை அடையாளப்படுத்தும் நோக்கில், ரசனைமுறைத் திறனாய்வு அணுகுமுறையினூடாக  இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாய்விற்கு முதலாம் நிலைத் தரவாகச் சீறாப்புராணம்  பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இரண்டாம் நிலைத் தரவுகளாக திறனாய்வு நூல்கள், கட்டுரை நூல்கள், இதழ்கள், மின்னூடகக் கருத்துக்கள் போன்றவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Abstract

Literary criticism is playing a major role in understanding Literature and it is very important too.  In the process of learning Aesthetics, tasteful involvement is important and this is the basis of Literary criticism. Seerapuranam is a book written by Umarupulawar, even if it is sustainably constructed with the meaning of Islamic policy, it has followed the traditions of old literature with the words and meanings. The author of the book Umarupulawar has followed the poetry works done by poets Thiruthakkadevar, kambar and Sekkilar to prove that he was also a traditional poet too. So this criticism is made to show the relationship between the Islamic poetry and Tamil poetry. Seerapuranam is used as the first level data and Performance texts, Essay texts, Magazines and Electronics datas are used as second level datas in this study.

References

சிவத்தம்பி. கா, (1982), விமர்சனச் சிந்தனைகள், மக்கள் வெளியீடு, சென்னை.

நடராசன் தி.சு, (2003), திறனாய்வுக்கலை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

உவைஸ். ம.மு, (1984), இஸ்லாம் வளர்த்த தமிழ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

உவைஸ். ம.மு, (1990), இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு, தொகுதி இரண்டு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

உவைஸ். ம.மு, அஜ்மல்கான். பீ.மு, (1990), இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு, தொகுதி மூன்று, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

செய்குத்தம்பிப் பாவலர். கே.பி, (1999), சீறாப்புராணம் மூலமும் பொழிப்புரையும், இரண்டாம் பாகம், முகைதீன் ஆண்டகை குருபீடம், தமிழ்நாடு.

நயினார் முகமது. சி, (2001), உமறுப்புலவர், சாகித்திய அக்காதெமி, புதுதில்லி.

http://www.tamilvu.org/ta/library-l4410-html-l4410con-141975l

http://www.tamilvu.org/ta/courses-degree-a011-a0113-html-a01134l1-5613

https://www.commonfolks.in/books/d/seeraappuraanam-moolamum-uraiyum

http://nellaipayaga.blogspot.com/2016/09/blog-post_32.html

Published

22.08.2021

How to Cite

தமிழிலக்கிய மரபுகளை வெளிப்படுத்துவதில் சீறாப்புராணத்தின் வகிபங்கு (இரசனைமுறைத் திறனாய்வு நோக்கினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு): Cīṟāppurāṇattiṉ vakipaṅku (iracaṉaimuṟait tiṟaṉāyvu nōkkiṉai aṭippaṭaiyākak koṇṭa āyvu). (2021). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(27), 40-50. https://inamtamil.com/index.php/journal/article/view/11

Similar Articles

1-10 of 196

You may also start an advanced similarity search for this article.