மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதில் பெற்றோரின் பங்களிப்பு The involvement of parents in enhancing the knowledge of students who excel in learning

பட்டிருப்பு வலய, மண்முனை தென் எருவில் பற்றுக் கோட்ட 1 AB, 1C, வகை - 2 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அளவை நிலை ஆய்வு

Authors

  • ஒய். அகல்யா | Y.Ahalya Department of Education & Childcare, Faculty of Arts & Culture, Eastern University, Sri Lanka
  • பி.சோபா | B.Soba Lecturer in Education, Department of Education & Childcare, Faculty of Arts & Culture, Eastern University, Sri Lanka

Keywords:

மெல்லக் கற்கும் மாணவர்கள், கற்றல் மேம்பாடு, பெற்றோர் பங்களிப்பு

Abstract

ஆய்வுச்சுருக்கம்

“மெல்லக்கற்கும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதில் பெற்றோரின் பங்களிப்பு” எனும் தலைப்பில் அமைந்த இவ் அளவை நிலை ஆய்வின் முக்கிய நோக்கம் மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றலில் பெற்றோர் பங்களிப்பிலுள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான விதந்துரைப்புக்களை முன்மொழிவதாகும். இக்கோட்டத்தின் பட்டிருப்பு வலயத்திலுள்ள 37 பாடசாலைகளிலிருந்து வசதி மாதிரி எடுப்பின் மூலம் பத்துப் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. இவற்றில் 1AB பாடசாலை ஒன்றும் 1C பாடசாலைகள் ஐந்தும் வகை-2 பாடசாலைகள் நான்கும் உள்ளடங்குகின்றன. நோக்க மாதிரியின் அடிப்படையில் பத்து அதிபர்களும் படையாக்க மாதிரி முறையின் அடிப்படையில் 5:1 எனும் விகிதத்தில் 51 ஆசிரியர்களும் 3:1 எனும் விகிதத்தில் 103 மெல்லக் கற்கும் மாணவர்களும் இம் மாணவர்களை அடிப்படையாகக்கொண்டு 2:1 எனும் விகிதத்தில் 52 பெற்றோர்களும் மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டு அவர்களிடம் வினாக்கொத்து, நேர்காணல், அவதானம், ஆவணம் போன்ற ஆய்வுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் தரவுகள், தகவல்கள் பெறப்பட்டு அவை பண்பு ரீதியாக மற்றும் அளவு ரீதியாக Microsoft Excel படி முறைகளினூடாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, வியாக்கியானமும் கலந்துரையாடலும் இடம்பெறுகின்றது. தரவுப்பகுப்பாய்வு முறை மூலம் பெறப்பட்ட ஆய்வு முடிவுகளாக பெற்றோரின் கவனயீனம், ஒத்துழையாமை, வேலைக்கு அமர்த்துதல், தண்டனை வழங்குதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் இனங்காணப்பட்டன. அதன்படி மெல்லக் கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளது கற்றலில் அர்ப்பணிப்பின்றி செயற்படும் நிலை அதிகமாக இடம்பெறுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பெற்றோரின் பங்களிப்பிலுள்ள குறைபாடுகளை குறைக்கும் நோக்கில் விதந்துரைப்புக்களும் இவ்வாய்வினூடாக முன்வைக்கப்பட்டுள்ளன.

Abstract: Literary works, defined as moral literature through poetry, flourished during the Kalaprara period. These writings often embraced Jain and Buddhist ideologies, prominently featuring the theory of impermanence. Within these texts, there is a distinct condemnation of sexual activities, portraying the feeling of love, known as Kama, as an instrument of evil. In contrast to Sangam literature, which revered Kama as a deity (Kaman), this literature deemed it as Kama and rejected it outright. There is a notable aversion even to natural sexual activities. Unlike Sangam literature, which extensively explored the myth of 'Kaman,' the literature of this period has dealt with it sparingly, particularly in the context of moral teachings.

Author Biography

  • ஒய். அகல்யா | Y.Ahalya, Department of Education & Childcare, Faculty of Arts & Culture, Eastern University, Sri Lanka

References

அருள்மொழி, செ. 2017. கற்பித்தலுக்கான உளவியல், துர்க்கா அச்சகம், மட்டக்களப்பு.

மகேசன், ஏ. 2010. விசேட கல்வியும் ஆலோசனை வழங்கலும், ஹிரா அச்சகம், மட்டக்களப்பு.

சந்திரசேகரம், சோ. 2007. சமகால கல்வி முறைகளில் சில பரிமாணங்கள், சேமமடு பதிப்பகம், கொழும்பு,

Appaji korikana.(2020). Slow Lerners a universal problem & providing Educational opportunities to them to be a successful learner, International journals of social, Vol: 6.

Hartini,A.(2017). Learning Strategies for slow learners using the project based learning model in school, journals pendikan Inklusi, Vol:1.

Kalpana,M.(2018). Role of teachers & parents in honing their hidden talent of slow learners, International journal of advanced Research in Education & Technology, Vol: 5.

Vidya,S.(2014). A study of parent child relationship Among slow learners in higher secondary schools in Tiruchirapali city, journal of social science, Vol: 4.

Appana,R. (2018). Role of teacher & parents in education slow learners, International journals of Advanced research in education, Vol: 5.

Dalia zahanika. (2021). challenges facting family caregivers of children with Disability during covid-19 Pendamic in Palestinians, journal of primary care and community health, vol: 12.

Christine, P.( 2011). Slow learners: their psychology & educational programs Ronald press, vol: 8.

Published

30.11.2023

How to Cite

மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதில் பெற்றோரின் பங்களிப்பு The involvement of parents in enhancing the knowledge of students who excel in learning: பட்டிருப்பு வலய, மண்முனை தென் எருவில் பற்றுக் கோட்ட 1 AB, 1C, வகை - 2 பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அளவை நிலை ஆய்வு. (2023). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 9(36), 11-22. https://inamtamil.com/index.php/journal/article/view/250

Similar Articles

1-10 of 195

You may also start an advanced similarity search for this article.