இடைநிலைப் பாடசாலைகளில் கற்றலில் ஆபத்து விளிம்பிலுள்ள மாணவர்களும் அவர்களை மீட்டெடுப்பதற்கான வகுப்பறை மட்டச் செயற்பாடுகளும்: இலங்கையின் கற்பிட்டி கல்வி வலயத்தின் தமிழ்மொழி மூல பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டது

Students at Risk in the Learning process and the recovering classroom activities: With Special reference to the Tamil medium secondary schools in Katpitiya Education Zone of Sri Lanka

Authors

  • சாஹூல் ஹமீட் மொஹமட் சஸ்னி | Shahul Hameed Mohamed Shazny Department of Secondary and Tertiary Education, Faculty of Education, The Open University of Sri Lanka

Keywords:

Learning Opportunities, Risk in learning, Secondary Schools, கற்றல் வாய்ப்புகள், இடைநிலைப் பாடசாலைகள் கற்றலில் ஆபத்து விளிம்பிலுள்ளோர்

Abstract

ஆய்வுச் சுருக்கம்

பொதுவாக ஒரு வகுப்பறையிலுள்ள மாணவர்கள் அனைவரும் கல்விசார் செயற்பாடுகளின் போது ஒரே மாதிரியான அடைவு மட்டத்தினை வெளிப்படுத்துவதில்லை. அந்த வகையில் மாணவர்கள் கற்றலில் பன்முகத்தன்மை கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். மேலும் சில மாணவர்கள் கற்றலில் எதிர்கொள்கின்ற பல்வேறான சவால்களினால் ஆபத்து விளிம்பிற்குச் செல்கின்றனர். அவ்வாறான மாணவர்கள் தொடர்பில் ஆசிரியர்கள் மிகவும் குறைவான கவனத்தையே கொண்டுள்ளதுடன் அத்தகைய மாணவர்களை இனங்கண்டு பல்வேறான கற்றல் வாய்ப்புக்களை வகுப்பறை மட்டத்தில் முன்னெடுத்துச் செல்வது என்பது அரிதான ஒரு விடயமாகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக இத்தகைய மாணவர்கள் கல்வியில் தங்களது சாதனைகளை நிலை நாட்டுவதென்பது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது. எனவே இத்தகைய மாணவர்களை இனங்கண்டு வகுப்பறை மட்டத்தில் பொருத்தமான கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளையும், பொருத்தமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதனூடாக ஆபத்து விளிம்பிலிருந்து மீட்டெடுத்து புனர்வாழ்வளிக்க ஆசிரியர்கள் முன்வருதல் வேண்டும். இன்றைய இயந்திரமயமான உலகில் கற்றலில் ஆபத்து விளிம்பிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.  இந்த வகையில் இலங்கையின் ‘கற்பிட்டி’ கல்வி வலயத்தில் உள்ள தமிழ் மொழி மூல இடைநிலைப் பாடசாலைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 05 பாடசாலைளைச் சேர்ந்த 50 மாணவர்கள் மற்றும் 20 ஆசிரியர்கள் மீது இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் நோக்கத்தை அடைவதற்கு ஐந்து ஆராய்ச்சிக் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிக்க வினாத்தாள், அவதானிப்பு, நேர்காணல் போன்ற ஆராய்ச்சிக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகள், அட்டவணைகள் என்பன பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் கண்டறியப்பட்டன. இந்த வகையில் கற்றலில் ஆபத்து விளிம்பிலுள்ள மாணவர்கள் வகுப்பறைக் கற்றல் நடவடிக்கைகளில் பின்தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. எனவே ஆசிரியர்கள் கற்றலில் சிரமங்களை எதிர் கொள்கின்ற ஆபத்து விளிம்பிலுள்ள மாணவர்களைப் பற்றி அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும், கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபாட்டினை அதிகரித்து உறுதிப்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது.

Abstract

Not all students in a classroom are seen to exhibit the same amount of response in their learning. Students are diverse in their learning.  Some students go to the brink of danger as they face various problems in the learning. Teachers rarely pay attention to such students and lack of providing necessary learning opportunities according to their diverse needs in learning in the classroom. As a result, the level of achievement in education of these students is relatively low. Teachers need to come forward to rehabilitate such students from the brink of disaster in order to accommodate such students and carry out appropriate activities for them at the classroom level. In today's world there is a growing need for such students. The present study was based on the activities of students who are at risk of learning to recover from it. The study was conducted on 50 students and 20 teachers from 05 selected Tamil medium secondary schools in the Kalpitiya Education Zone of Sri Lanka. Five research questions were posed to achieve the purpose of the study. Research tools such as questionnaires, observations and interviews had been used to collect information needed for this study. Collected data was analyzed using percentage and other descriptive methods. It was found that considerable no of students was at risk in their learning. It is therefore recommended that teachers take more care of students who were experiencing learning difficulties and ensure increased involvement in learning activities.

References

Anas, P. L., & Nawastheen, F. M. (2019). Teachers’ perception towards fulfilling diverse learners' needs in the classroom teaching-learning process. South Eastern University International Arts Research Symposium -2019, http://ir.lib.seu.ac.lk/handle/123456789/4170

UNESCO(1994). The Salamanca Statement and Framework for Action on Special Needs

Education(Online).Paris:UNESCO.Availableform:http://www.unesco.org/education/pdf/SALAMA E PDF (accessed on 5 December 2011).

Jayarasa, Saba. (2008). Aapathhu Vizimbilulla Katpor. Colombo: Chemamadu Printers.

Sinnaththambi, K. (2007). Kalvi Aayviyal. Colombo: Jeya International Publication.

Nawastheen, F. M., Jazeel, M. I. M., Sifani, K. R., & Ponniah, K. (2020). Teachers ‘roles in Developing Self-Regulated Learning Strategies Among Students of Puttalam Division in Sri Lanka. Journal of Critical Reviews, 7(19), 5076-5084. Doi: 10.31838/jcr.07.19.600

Jayarasa, Saba. (2006). Kalviyiyal Putiya Seerthiruththangal. Colombo: Chemamadu Printers.

Chandarasegaram, S. (2008). Samakala Kalvimuraihalin Sila Parimanangal. Colombo:

Chemamadu Printers.

Chandarasegaram, S. (2004). Kalvi Oru panmuha Nokku, Uma Printers.

Paramanantham, S. (2007). Utpaduththal Kalvi, Ahavizi. Colombo: Chemamadu Publication.

Chandarasegaram, S. (2005). Kalviyiyal Katturaihal. Colombo: Poobalasingam Book Depot.

Sinnaththambi, M. (2008). Paadasalaiyum Samoohamum. Colombo: Kumaran Puththaha Illam.

Selvaraja, M. (2005). Kalviyiyal Adippadai Ennakkarukkal, Evergreen Printers.

Krishnapillai, Vimala. (2009). Vazikattalum Aalosaniyum. Colombo: Chemamadu Printers.

Logeswaren, R. (2008). Kattralai Pathikkum Karanihalum Aasiriyarum, Ahavizi. Colombo: Chemamadu Publication.

Mahesan, A. (2009). Vazikattal Aalosanai Sevai, Eastern University of Sri Lanka, Chengaladi, Sri Lanka.

Thanapalan, P. (2003). Kattpikkum kalai puthiya piravesangal. Jaffna: Kattpaha Vinayagar Printers.

Janareththanam, K. (2005). Vetriharamana katpiththalukkukku Paadaththai Thittamidal, Ahavizi. Colombo: Chemamadu Publication.

Thanaraj, T. (2005). Seyalvazi Aayvu Or Arimuham.Colombo: Kumaran Book Shop.

Pakeer Jaufar, P.K. (2009). Manavarin Vahupparai Nadaththai. Colombo: Kumaran Puththaha Illam.

Niththilavannan, A. (2008). Ilankaiyin Naveena Kalviyal Pokuhal. Jaffna: Tharsana Publishers.

Weethupaltlkandage Darshani Thusarika, Nawastheen,F.M. (2019). School based assessment practices: how students and teachers perceived. South Eastern University International Arts Research Symposium -2019.

Darling-Hammond,L, Zielezinski,M.B.,& Goldman,S. (2014). Using technology to support at-risk student’s Learning.

Washington,DC: Alliance for Excellent Education, 2014.

Published

22.08.2021

How to Cite

இடைநிலைப் பாடசாலைகளில் கற்றலில் ஆபத்து விளிம்பிலுள்ள மாணவர்களும் அவர்களை மீட்டெடுப்பதற்கான வகுப்பறை மட்டச் செயற்பாடுகளும்: இலங்கையின் கற்பிட்டி கல்வி வலயத்தின் தமிழ்மொழி மூல பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டது: Students at Risk in the Learning process and the recovering classroom activities: With Special reference to the Tamil medium secondary schools in Katpitiya Education Zone of Sri Lanka. (2021). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(27), 4-14. https://inamtamil.com/index.php/journal/article/view/2

Similar Articles

1-10 of 186

You may also start an advanced similarity search for this article.