ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கணித செய்கையில் வழுக்கள் Mathematical Errors in Primary schools’ children

Authors

  • இராசையா தேவேந்திரன் | Rassaiah Devendran ஆசிரியர், மமா/வ/அருணோதயா இந்து கல்லூரி, குருந்தோயா, கந்தபளை, இலங்கை. Teacher, CP/W/Arunodhaya Hindu College, Kurundhoya, Kandapola, Sri Lanka.

Keywords:

ஆரம்பப்பிரிவு, மாணவர், கணிதம், செய்கை, வழுக்கள், Mathematical Errors, Primary, school, children,

Abstract

ஆய்வுச்சுருக்கம்

இலங்கையின் 04, 05ஆம் தர மாணவர்களின் கணித செய்கைசார் செயற்பாடுகள் திருப்திகரமானதாகக் காணப்படுவதில்லை. குறிப்பாக கணித செய்கைசார் வழுக்கள் (கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல்) அதிகமாக இடம்பெறுவதனை அவதானிக்க முடிகிறது. இதனால் கணித செயற்பாடுகளுடன் கூடிய மாணவர்களின் எதிர்கால இலக்கு வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதற்காக தெரிவு செய்யப்பட்ட கல்வி வலயத்தின் 15 பாடசாலைகளின் 314 மாணவர்களுக்கு, நான்கு பிரதான கணித செய்கைகளை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள் கையளிக்கப்படுகிறது. இதில் வழுக்களில் அடையாளங் காணப்பட்ட 100 மாணவர்களின் வினாத்தாள்கள் தெரிவு செய்யப்பட்டு அம்மாணவர்களில் அடையாளங் காணப்பட்ட பிரச்சினை தொடர்பாக ஆய்வு முன்னெடுக்கப் படுகிறது.

“ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கணித செய்கையில் வழுக்கள் காணப்படுதலை அறிதல்” தொடர்பான பிரதான நோக்கத்துடன் ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி இனங்காணப்பட்ட மாணவர்களில் வழுக்களாக கவனயீனமான வழுக்கள், எழுமாறான வழுக்கள், அமைப்புசார் வழுக்கள், எண்ணக்கருசார் வழுக்கள் என அடையாளப்படுத்தப்பட்டாலும் அமைப்புசார் கணித வழுக்கள் அதிகமாக இனங்காணப்பட்டன. இவற்றுடன் நினைவுபடுத்தல் வழுக்கள், திசைப்படுத்தல் தொடர்பான வழுக்கள், அடையாளம் காணல் தொடர்பான வழுக்கள், பூச்சியம் தொடர்பான வழுக்கள் என்பனவும் அடையாளப்படுத்தப்படுகின்றன.

இப்படியான வழுக்கள் மாணவர்கள் கணித செயற்பாடுகளை முழுமையாகப் பாதிப்பதனை அடையாளப்படுத்தலாம். இப்படியான வழுக்கள் இனங்காணப்பட்டு பகுப்பாய்வின் ஊடாக அவை உறுதிப்படுத்தப்படுகின்றன. எனவே இவ்வாறான வழுக்கள் ஏற்படும்போது அவற்றினை நிவர்த்தி செய்யும் வiயிலான கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. ஆசிரியர்கள் தங்களது கறபித்தல் முறைகளை மாற்றிமைத்தல், நவீனமயப்படுத்தப்பட்ட கற்பித்தல் முறைகளில் ஈடுபடல், கற்பித்தல் கருவிகளைப் பயன்படுத்தி (கணினித்திரை, அபாகஸ், இலக்க அட்டைகள்) கற்பித்தல் மற்றும் தொடர்ந்தேர்ச்சியான மதிப்பிடல், மேற்பார்வை மாணவர்களின் கணித செய்கைசார் வழுக்களை குறைப்பதற்கான வழிவகைகளாக அமையும்.

Abstract

The mathematical performance of grade 04 and 05 students in Sri Lanka is not found to be satisfactory. In particular, it can be observed that mathematical errors (addition, subtraction, multiplication, division) occur more frequently. This significantly affects the future goals of students with mathematical activities. For this purpose, 314 students of 15 schools of the selected educational zonal will be given a model question paper covering four main mathematical functions. In this, the question papers of 100 students identified in the errors are selected and the study is carried out regarding the problem identified in these students.

 

The study is carried out with the main objective “To find out the gaps found in mathematics performance of elementary students”. According to this, among the students who were identified as careless errors, systematic errors, systematic errors and arithmetic errors. But systematic maths errors were identified more. These are also identified as recall errors, orientation errors, identification errors and zero errors.

Such errors may indicate that students are completely impaired in their maths skills. Such errors are identified and confirmed through analysis. Therefore, the role of teachers in learning and teaching activities is very important to address such errors when they occur. Teachers can modify their teaching methods, engage in modernized teaching methods, use teaching aids (computer desk, campus, number cards) and continuous assessment and supervision as ways to reduce students' mathematical errors.

References

உசாத்துணை

சந்திரசேகரன் இசோ.(2008). சமகாலக் கல்வி முறைகளின் சில பரிமாணங்கள், சேமமடு பதிப்பகம்.

Cox, L.S. (1975) Diagnosing and remediating systematic errors in addition and subtraction

computations. The Arithmetic Teacher. 22(2).

Cox, L.S. (1975) Systematic errors in the four vertical algorithms in normal and

handicapped populations. Journal of research in Mathematics

Drews, D.(2005). Children‟s mathematical errors and misconceptions: perspectives and the

teacher‟s role.in Alice Hansen (Eds.) Children‟s Errors in Mathematics Understanding

Common Misconceptions in Primary Schools, London: Learning matters

Fischbein, E., Deri, M., Nello, M. S., & Merino, M. S. (1985). The role of implicit models

in solving verbal problems in multiplication and division. Journal for Research in

Mathematics Education, 16, 3-17.

Greer, B. (1992). Multiplication and division as models of situations. In D. Grouws (Ed.),

Handbook of research on mathematics teaching and learning (pp. 276-295). New York:

Macmilan

Herholdt. R., & Sapire. I. (2014). An error analysis in the early grades mathematics: A

learning opportunity. South African Journal of Childhood Education.

Hodaňová ,J.and D. Nocar,D. (2016) “MathematicsImportanceinOur Life”.

INTED2016Proc.,vol.1.

Hurst, C., & Hurrell, D. (2016). Investigating Children‟s Multiplicative Thinking:

Ketterlin-Geller, R L and Yovanoff P 2009 Diagnostic Assessments in Mathematics to

Support Instructional Decision Making Pract. Assessment.

Kouba, V. L. (1989). Children's solution strategies for equivalent set multiplication and

division word problems. Journal for Research in Mathematics Education.

Mastropieri, M. A., & Scruggs, T. E. (2002). Effective instruction for special education

(3rd ed.). Austin, TX: Pro-Ed

Mukunthan,T. (2013). A Study on Students‟ Errors in Word problem International Journal

of management, IT and Engineering

Muthukrishnan, P., Kee, M. S., & Sidhu, G. K. (2019). Addition error patterns among the

preschool children. International Journal of Instruction

Nanayakkara, G.L.S. (1992) Assessment of Pupil Achievement in Primary Mathematics

with Special Reference to Analysis of Pupil Errors – Sri Lanka, unpublished D.Phil.

thesis, University of Sussex, Falmer.

Nesher, P. (1987) Towards an Instructional Theory: The Role of Student‟s Misconceptions,

For the Learning of Mathematics

Published

30.08.2023

How to Cite

ஆரம்பப்பிரிவு மாணவர்களின் கணித செய்கையில் வழுக்கள் Mathematical Errors in Primary schools’ children. (2023). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 9(35), 21-30. https://inamtamil.com/index.php/journal/article/view/234

Similar Articles

1-10 of 186

You may also start an advanced similarity search for this article.