இணையவழிக் கல்விச் செயல்பாட்டில் மொழியாசிரியர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

Solutions for Problems Faced by the Language Teachers in Online Education

Authors

  • முனைவர் மு.புஷ்ப ரெஜினா | Dr.M.Pushpa Regina உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பிஷப் ஹீபர் கல்லூரி, (தன்னாட்சி), திருச்சி-17. (Assistant Professor, Department of Tamil, Bishop Heber College, Trichy-17) [email protected]

Keywords:

கல்வி, கல்விமுறை, குருகுலக்கல்வி, இணையவழிக்கல்வி, ஆசிரியர்கள், மாணாக்கர் நிலை

Abstract

ஆய்வுச்சுருக்கம்

ஆதிமனிதன் தொடங்கி இன்று வரை கற்றல், கற்பித்தல் செயல்பாடு மனித வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளமையைக் காண முடிகிறது. அவ்வாறு கற்கும் மனிதன் தன் வாழ்வில் தான் கற்றவற்றைச் செயல்படுத்திப் பார்க்கும்போதே அவன் நாகரிகம் பெற்றவனாகிறான். குறிப்பாக நெருப்பு, போர்க்கருவிகள், உழவுத்தொழில் போன்றவை மனிதன் கற்றறிந்தவை என்பதைக் காட்டிலும் பட்டறிவின் வெளிப்பாடே எனலாம்.

“கோடல் மரபே கூறுங் காலைப்

பொழுதொடு சென்று, வழிபடல் முனியான்,

குணத்தொடு பழகி, அவன் குறிப் பின்சார்ந்து,

‘இரு’ என இருந்து, ‘சொல்’ எனச் சொல்லிப்

பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச்

செவிவா யாக, நெஞ்சுகள னாகக்,

கேட்டவை கேட்டவை விடாதுஉளத்து அமைத்துப்

’போ’ எனப் போதல் என்மனார் புலவர்” (நன். பாயிர.40)

என்ற நன்னூலார் கூற்றுப்படி, பண்டைய காலங்களில் ஆசானைத் தேடிச் சென்று கல்வி பயின்ற குருகுலக்கல்வியாக இருந்த நிலை காலப்போக்கில் மாற்றம் பெற்றது.  மாணாக்கரைத் தேடிச் செல்லும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற நிறுவனங்கள் வளர்ச்சி பெற்றதோடு, மீண்டுமாகப் பழைய குருகுலக் கல்விமுறையும் நம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை அறிய முடிகின்றது. அந்த வகையில் அடுத்த கட்டமாக மாணவர்கள் தானே கற்றல் என்ற முறையில் இணையம் வழியாகக் கற்கும் நிலையும் உருவாகிவிட்டது.

கொரோனா எனும் இப்பெருந்தொற்றுக் காலமானது, இணையவழிக்கல்வி எனும் எட்டாக்கனியைப் பலருக்கும் எட்டச் செய்துள்ளது என்றே கூறலாம். இணையம் வழிக் கற்றல் செயல்பாட்டில் மொழி கற்பிக்கும் ஆசிரியர்களும், பயிலும் மாணாக்கரும் தொழில்நுட்ப ரீதியாகவும், புரிதல் அடிப்படையிலும் சந்திக்கும் இடர்ப்பாடுகளை ஆய்ந்து அவற்றுக்கான தீர்வினை முன்வைப்பதே இவ்ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

Abstract

From the earliest times to the present day the learning and teaching process can be seen to be ambiguous in human life. The man who learns in this way becomes civilized when he seeks to apply what he has learned in his life. Fire, ammunition, and plowing, in particular, are more an expression of workshop than what man has learned.

“கோடல் மரபே கூறுங் காலைப்

பொழுதொடு சென்று, வழிபடல் முனியான்,

குணத்தொடு பழகி, அவன் குறிப் பின்சார்ந்து,

‘இரு’ என இருந்து, ‘சொல்’ எனச் சொல்லிப்

பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகிச்

செவிவா யாக, நெஞ்சுகள னாகக்,

கேட்டவை கேட்டவை விடாதுஉளத்து அமைத்துப்

’போ’ எனப் போதல் என்மனார் புலவர்” (நன். பாயிர.40)

According to the epistemology, in ancient times the status of a guru who went in search of a teacher and was educated changed over time. Institutions like schools and colleges have developed in search of students and we can see that the old curriculum system is being implemented in our country again. The next step in that direction is the self-learning of students through the Internet.

It is safe to say that eCommerce, the epicenter of corona, has reached many. The purpose of this research paper is to explore the technical and comprehension challenges faced by language teachers and students in the process of learning through the Internet and to present solutions to them.

References

திருமலை, மா.சு.,(1998), தமிழ் கற்பித்தல், சென்னை, மணிவாசகர் பதிப்பகம்

கணேசன் அம்பேத்கர்., (2010), மொழியறிதிறன் வகைப்பாடும் வழிமுறையும், சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

கோவிந்தராஜன், எம்., (2016), மொழியாசிரியர் பண்புகளும் மொழிப்பயிற்சியும், சென்னை, பார்த்திபன் பப்ளிகேஷன்ஸ்

மாணிக்கம்,அ., (1994) நன்னூல் (காண்டிகையுரை), சென்னை, முல்லை நிலையம்.

Vijayarani, K., (November 2016), A study on attitude towards computer and internet education among highschool students, International Research Journal of India, (ISSN:2454-8707), Vol.2, Issue 3, pp.100-103.

Mohamed Shazny, S. H. (2021). இடைநிலைப் பாடசாலைகளில் கற்றலில் ஆபத்து விளிம்பிலுள்ள மாணவர்களும் அவர்களை மீட்டெடுப்பதற்கான வகுப்பறை மட்டச் செயற்பாடுகளும்: இலங்கையின் கற்பிட்டி கல்வி வலயத்தின் தமிழ்மொழி மூல பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டது: Students at Risk in the Learning process and the recovering classroom activities: With Special reference to the Tamil medium secondary schools in Katpitiya Education Zone of Sri Lanka. இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies), 7 (27), 4–14.

கலைஞர் செய்திகள் (2020, செப்டம்பர் 01), ஆன்லைன் வகுப்பால் தொடரும் உயிர்பலி, கலைஞர் செய்திகள் வலைத்தளத்திலிருந்து பெறப்பட்டது. https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/09/01/kallakurichi-student-committed-suicide-in-a-dispute-with-sisters-who-were-using-the-same-cell-phone-for-an-online-class

அப்டேட் நியூஸ்360 (2021, ஜூலை 14), செல்போன் வாங்கித் தர முடியாத கூலித்தொழிலாளி.. பாதித்த படிப்பு : விரக்தியில் தற்கொலை செய்த மகன்!! அப்டேட் நியூஸ்360 வலைத்தளத்திலிருந்து பெறப்பட்டது, https://www.updatenews360.com/tamilnadu/mercenary-who-could-not-afford-a-cell-phone-affected-study-son-who-committed-suicide-in-despair-140721/

விகடன்.காம் செய்திகள் (2020, ஜூன் 24), ஆன்லைன் வகுப்பு: `மொபைல் இல்லை; மன உளைச்சல்’- 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை, விகடன்.காம் வலைத்தளத்திலிருந்து பெறப்பட்டது, https://www.vikatan.com/news/india/a-boy-committed-suicied-because-he-has-no-mobile-to-attend-online-class

https://tamonews.com/education/12660/

https://ta.wikipedia.org/wiki/கல்வி

https://ta.vikaspedia.in/education/கல்வியின்முக்கியத்துவம்/இந்தியக் கல்விமுறை/கல்வியின் நோக்கங்கள்

Published

26.02.2022

How to Cite

இணையவழிக் கல்விச் செயல்பாட்டில் மொழியாசிரியர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளும் அவற்றுக்கான தீர்வுகளும்: Solutions for Problems Faced by the Language Teachers in Online Education. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(29), 180-196. https://inamtamil.com/index.php/journal/article/view/70

Similar Articles

1-10 of 194

You may also start an advanced similarity search for this article.