கற்றல்/கற்பித்தல் பாங்கு அணுகுமுறையில் தொல்காப்பியச் செய்யுளியல் ஆராய்ச்சி Tholkaappiya Ceyyulyal Araichi in Learning/Teaching Style Approach

Authors

  • முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி | Dr. Sathiyaraj Thangasamy தமிழ் உதவிப்பேராசிரியர், ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641 042 Assistant Professor in Tamil, Sri Krishna Adithya College of Arts and Science, Coimbatore - 641 042 https://orcid.org/0000-0002-6754-9095

Keywords:

அடிகளாசிரியர், கற்றல், கற்பித்தல், தொல்காப்பியம், செய்யுளியல், இலக்கணவியல்,

Abstract

ஆய்வுச்சுருக்கம்

அடிகளாசிரியர் எழுதிய தொல்காப்பியச் செய்யுளியல் ஆராய்ச்சி எனும் நூல் கற்றல்/கற்பித்தலில் அடிப்படையில் எழுதப்பட்ட நூலாகும். இந்த நூல் தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியச் செய்யுளியலின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் செய்யுளியலை அறிந்தவர்கள் அல்லது அறியாதவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கவும் எழுதப்பட்டுள்ளது. தொல்காப்பியர் எழுதிய செய்யுளியல் பகுதி கற்றுக்கொள்ள வேண்டிய/கற்பிக்க வேண்டிய முக்கியமான பகுதி என அடிகளாசிரியர் வலியுறுத்துகிறார். செய்யுளியல் தன்மைகளை அறியாதவரால் செய்யுள் பாடப்பகுதியை முழுமையாகக் கற்கவும் கற்பிக்கவும் முடியாது. ஆகையால் அந்தப் பகுதியில் கற்றல், கற்பித்தல் முறைமைகளைத் தான் எழுதியுள்ள தொல்காப்பியச் செய்யுளியல் ஆராய்ச்சி எனும் நூலுள் வெளிப்படுத்தியுள்ளார். ஆகையால் எந்தவொரு படைப்பும் ’கற்றல்/கற்பித்தல் பாங்கு’ எனும் மீக்கருத்தியல் வாய்ப்பாட்டிற்குள் அடங்கும் தன்மை உடையது என்பதை உணரலாம். எனவே, இக்கட்டுரை தொல்காப்பியச் செய்யுளியலில் ஆராய்ச்சி எனும் நூலுள் பொதிந்திருக்கும் ’கற்றல்/கற்பித்தல் பாங்கு’ எனும் மீக்கருத்தியல் வாய்ப்பாட்டை அடையாளம் காண முயல்கின்றது.

கற்றல், கற்பித்தல் செயல்பாடானது இயல்பாகவே அமைந்து கிடக்கும் தன்மையே ஆகும். அதனை மீக்கருத்தியலாக சு.இராசாராம் உருவாக்கியுள்ளார். இந்த மீக்கருத்தியல் ஒரு படைப்பாளருக்குள் இருக்கும் பொதுத்தன்மையை அடையாளம் காட்டுவதாகும். இதனை அவர் மரபிலக்கண வாசிப்பிற்காகவே உருவாக்கியுள்ளார். ஆனாலும் அந்த மீக்கோட்பாட்டை எழுத்தாளர் அனைவருக்கும் பொருத்திப் பார்க்க முடியும் என முந்தைய சில ஆய்வுகளில் எடுத்துரைக்கப்பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்த ஆய்வும் அமைகின்றது இதற்கு முன்பு சூலை, 2023இல் எழுதப்பெற்ற தொல்காப்பியச் செய்யுளியல் ஆராய்ச்சி: கற்றல் / கற்பித்தல் பாங்கு எனும் தலைப்பிலான ஆய்வில், விதி + விளக்கம் + சான்று + கருத்து, விளக்கம் + விதி + காரணம் கற்பித்தல் + மதிப்பீடு, தொகுத்து உரைத்தல், பகுப்புமுறைக் கற்பித்தல், வினாவிடை ஆகிய கற்றல்/கற்பித்தல் முறைகள் அமைந்துள்ளமையைச் சுட்டிக் காண்பிக்கப் பெற்றுள்ளன.

இந்த ஆய்வு அதன் தொடர்ச்சியாக அமைந்து மேற்சொன்ன முறைகளைத் தவிர்த்து, ஒப்பீட்டுமுறைக் கற்பித்தல், உடன்பாடு + மறுப்பு = தொகுத்தல், கருத்து மாறுபாடு - தொகுப்பும் தீர்வுத் தூண்டலும், அமைதி கூறல், புலப்படாதன காட்டுதல், சிந்திக்கத் தூண்டும் கற்பித்தல், கணக்கியல்முறைக் கற்பித்தல், வலிந்து கற்பித்தல் ஆகிய கற்றல், கற்பித்தல் முறைகள் விளக்கப்பெற்றுள்ளன.

இந்த ஆய்வு, கற்றல் / கற்பித்தல் பாங்கு எனும் மீக்கருத்தியல் வாய்ப்பாட்டைப் புரிந்துகொள்வதற்கான பல்வேறு சூழல்களைத் திறந்துவிடுகின்றது எனலாம். அதாவது, ஒருவர் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் இருக்கக் கூடிய வழிமுறைகளை அடையாளப்படுத்துகின்றது எனப் புரிந்துகொள்ளலாம். இந்தச் சட்டகங்களின் மேல் உள்ள மீவரைச் சட்டகமே கற்றல் / கற்பித்தல் பாங்கு எனும் மீக்கருத்தியல் வாய்பாடாகும். அதனை மதிப்பீடு செய்வதே இவ்வாய்வின் முதன்மை நோக்கமாகும்.

Abstract

The book written by the author titled Tholkaapiya Ceyyuliyal Araichi is a book based on learning/teaching. This book is written by Tolkappiyar to convey the importance of Tolkaappiya Ceyuliyal and to explain it to those who know or do not know Ceyyuliyal. The author emphasizes that Ceyyulial is an important part to be learned/taught by Tholkaappiar. A person who doesn't know the fundamentals of Ceyyulial cannot fully learn and teach the subject of Ceyyulial. Therefore, he has revealed the learning and teaching methods of that area in his book called Tholkaapiya Ceyyuliyal Araichi. Therefore, it can be felt that any work can fall under the re-conceptualization of 'learning/teaching style'. Therefore, this article seeks to identify the reconceptualization of the 'learning/teaching style' embodied in Research in Tholkaapiya Ceyyuliyal Araichi.

The human teaching and learning process is inherently situated. It has been developed Meta_Concept conceptually by S.Rajaram. This reconstruction is to identify the commonality within a creator. He created it for genealogy reading. However, it has been highlighted in some previous studies that the concept can be applied to all writers. This study is a continuation of the previous study written in Chulalongkorn, 2023 titled Tolkappiya Grammatical Research: Learning / Teaching Method, rule + explanation + evidence + opinion, explanation + rule + reason teaching + evaluation, summarizing, classification teaching, quiz learning/ Pedagogical methods have been characterized by location.

This study is a continuation of the above-mentioned methods, learning and teaching methods such as comparative teaching, agreement + disagreement = grouping, difference of opinion - grouping and solution stimulation, silence, showing the invisible, thought-provoking teaching, accounting teaching, pain teaching are explained.

This study opens up different contexts for understanding the reconceptualization of learning/teaching style. That is, it can be understood as identifying the means by which one can learn and teach. Overlying these frames is a conceptual framework for learning/teaching style. The primary objective of this study is to evaluate it.

References

குறிப்புநூல்கள்

இராசாராம் சு., இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும். காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், முதல் பதிப்பு - 2010.

சத்தியராஜ் த., Meta Theory Concept in Dravidian First Grammars (மீக்கோட்பாட்டாய்வு நோக்கில் திராவிட மொழிகளின் முதல் இலக்கண நூல்கள்), N0.F.6892/16(SERO/UGC), March 2017. ஒப்படைப்பு - பிப்ரவரி 2020.

சத்தியராஜ் த., இலக்கணவியல் ஒப்பியல் (தொல்காப்பியமும் பாலவியாகரணமும்), இனம் பதிப்பகம், கோயமுத்தூர், முதல் பதிப்பு - 2019.

சத்தியராஜ் த., உயிர்மெய்: வரலாற்றுநிலை – சமகாலநிலை (Uyirmei Ezhuthu: History and the contemporary state), Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), DOI: https://doi.org/10.22452/JTP.vol7no2.11, 2018-12-30

சத்தியராஜ் த., ஒப்பியல் - மீக்கோட்பாடு - ஆய்வியல் மீக்கோட்பாடு (மரபிலக்கணங்கள், ஆய்வுரைகளை முன்வைத்து), இனம் பதிப்பகம், கோயமுத்தூர், முதல் பதிப்பு - 2020.

சத்தியராஜ் த., ஒப்பும் மீக்கருத்தியலும் (தமிழ் – தெலுங்கு இலக்கணப் பனுவல்களின் இரண்டாம் வேற்றுமை கருத்தியல்களை முன்வைத்து) - Oppum Mīkkaruttiyalum (Tamiḻ - Teluṅku Ilakkaṇap Paṉuvalkaḷiṉ Iraṇṭām Vēṟṟumai Karuttiyalkaḷai Muṉvaittu), IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.5, Issue 19, நவம்பர் 2019.

சத்தியராஜ் த., திராவிட மொழிகளின் முதல் இலக்கண நூல்கள் : இலக்கணவியல், குறுந்திட்ட ஆய்வு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை, 2017

சத்தியராஜ் த., மீக்கோட்பாடு (தொல்காப்பிய மூலமும் உரைகளும்), இனம் பதிப்பகம், கோயமுத்தூர், முதல் பதிப்பு - 2018.

சத்தியராஜ் த., மொழி, ஓர் அமைப்பொழுங்கு அணுகுமுறையில் தொல்காப்பிய எழுத்ததிகார நூன்மரபு: Ilakkaṇaviyal aṇukumuṟaiyil tolkāppiya eḻuttatikāra nūṉmarapu, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 28., 24 நவம்பர் 2021.

சிவபெருமான் அ. (பதி.), தொல்காப்பியச் செய்யுளியல் ஆராய்ச்சி. திருவருள் நிலைய வெளியீட்டகம், விழுப்புரம், 2008.

திண்ணப்பன் சுப., கற்பித்தல் கோட்பாடுகளும் மொழிகற்பித்தலும். தமிழ் கற்றல் (Language of Tamil Learning), 1993

முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி / Dr. Sathiyaraj Thangasamy. (2023). தொல்காப்பியச் செய்யுளியல் ஆராய்ச்சி: கற்றல் / கற்பித்தல் பாங்கு Tolkappiya Grammatical Research: Learning / Teaching Method. IJTLLS, Volume 6(Issue 1), 11–25. https://doi.org/10.5281/zenodo.8199229

வேல்முருகன் இரா. (தே.இ). மொழி கற்றல் கற்பித்தலில் சிந்தனைத் திறனின் பங்கு. 278-279.

References

Dhinappan Supa., Pedagogical Principles and Language Teaching. Language of Tamil Learning, 1993

Rajaram S., Ilakkanaviyal Miikkotpadum Kotpadukalum, Kalacchuvadu Pathippagam, Nagercoil, First Edition - 2010.

Sathiyaraj T., “Index of Research in Tolka:ppiyam”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 25., February 2021 .

Sathiyaraj T., First Grammars in Dravidian Languages - A Comparative Study, Minor project, Central Institute of Classical Tamil Studies, Chennai, 2017

Sathiyaraj T., Ilakkaṇaviyal aṇukumuṟaiyil tolkāppiya eḻuttatikāra nūṉmarapu, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.6, Issue 28., 24 November 2021 .

Sathiyaraj T., Ilakkaṇaviyal oppiyal (Tolkappiyam and Balavyayakarana), Inam Pathippagam, Coimbatore, First Edition - 2019.

Sathiyaraj T., Meta Theory Concept in Dravidian First Grammars, N0.F.6892/16(SERO/UGC), March 2017. Submission - February 2020.

Sathiyaraj T., Miikkodpadu (Theological Sources and Texts), Inam Pathippagam, Coimbatore, First Edition - 2018.

Sathiyaraj T., Oppiyal - mīkkōṭpāṭu - āyviyal mīkkōṭpāṭu (marapilakkaṇaṅkaḷ, āyvuraikaḷai muṉvaittu), Inam Pathippagam, Coimbatore, First Edition - 2020.

Sathiyaraj T., Oppum Mīkkaruttiyalum (Tamiḻ - Teluṅku Ilakkaṇap Paṉuvalkaḷiṉ Iraṇṭām Vēṟṟumai Karuttiyalkaḷai Muṉvaittu), IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531 ), Vol.5, Issue 19, November 2019.

Sathiyaraj T., Uyirmei: History and the contemporary state, Journal of Tamil Peraivu, DOI: https://doi.org/10.22452/JTP.vol7no2.11, 2018- 12-30

Sivaperuman A. (Ed.), Tholkappiyach Cheyyuliyal Araicchi. Thiruvarul Station Publishing House, Villupuram, 2008.

Velmurugan Ira. (Te.E). The role of thinking skills in teaching language learning. 278-279.

முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி / Dr. Sathiyaraj Thangasamy. (2023). தொல்காப்பியச் செய்யுளியல் ஆராய்ச்சி: கற்றல் / கற்பித்தல் பாங்கு Tolkappiya Grammatical Research: Learning / Teaching Method. IJTLLS, Volume 6(Issue 1), 11–25. https://doi.org/10.5281/zenodo.8199229

Published

30.08.2023

How to Cite

கற்றல்/கற்பித்தல் பாங்கு அணுகுமுறையில் தொல்காப்பியச் செய்யுளியல் ஆராய்ச்சி Tholkaappiya Ceyyulyal Araichi in Learning/Teaching Style Approach. (2023). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 9(35), 5-12. https://inamtamil.com/index.php/journal/article/view/244

Similar Articles

1-10 of 195

You may also start an advanced similarity search for this article.