வெள்ளியங்காட்டான் படைப்புகளில் திராவிடக் கருத்தியல் Dravidian Ideology in Veliangatan Works

Authors

  • Raja Rajendiran Research Scholar

Keywords:

வெள்ளியங்காட்டான், திராவிடக் கருத்தியல், ஆரியம் X திராவிடம், திராவிட இலக்கியம்.

Abstract

ஆய்வுச்சுருக்கம்:

வெள்ளியங்காட்டான் (1904 – 1991) கொங்கு வட்டாரத்தில் வாழ்ந்த கவிஞர். இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் (1942) எழுதத் தொடங்கிய அவர், தமிழுக்குப் பல படைப்புகளைக் கொடுத்துள்ளார். அவற்றின் உள்ளடக்கம் சார்ந்த ஆய்வுகள் மிகுதியாக வெளிவரவில்லை. குறிப்பாக, அவர் படைப்புகளில் காணப்படும் செய்திகளைக் கருத்தியல் அடிப்படையில் பகுத்து ஆராயும் முயற்சி மேற்கொள்ளப் பெறவில்லை. இந்திய/ தமிழக அரசியல் பொருளாதாரம் மற்றும் கலை இலக்கியத் துறைகளில் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் செல்வாக்குப் பெற்ற கருத்தியல்களான இந்திய தேசியம், பொதுவுடைமைத் தத்துவம், திராவிட இயக்கம் போன்றவற்றுள் வெள்ளியங்காட்டானிடம் எது மிகுதியான செல்வாக்கைச் செலுத்தியுள்ளது என்பதை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது. கவிஞன் (1967), அறிஞன் (1977), தமிழன் (1979) ஆகிய மூன்று படைப்புகளைக் களமாகக் கொண்டு இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தென்னிந்தியாவின் பூர்வ குடிகள் திராவிடர்கள் என்பதையும், அவர்களின் அரசியல், பண்பாடு, மொழி, கலை இலக்கியங்களின் மீது ஆரியர்கள் நெடுங்காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பதையும் அடைப்படையாகக் கொண்டு திராவிடக் கருத்தியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் தாக்கம், வெள்ளியங்காட்டான் படைப்புகளில் எந்தெந்த வகைகளில் வெளிப்படுகிறது என்பதை இக்கட்டுரை இனங்காட்டுகிறது. இதன்மூலம் இதுவரை திராவிட இயக்கக் கவிஞர்களாக இனங்காணப்பட்டோர் வரிசையில் வெள்ளியங்காட்டனும் சேர்கிறார். மேலும், அத்தகையோர் படைப்புகளில் வெளிப்படும் திராவிட இயக்கக் கருத்துகளுடன், வெள்ளியங்காட்டானையும் விரிவாக ஒப்பிட்டு ஆய்வு செய்யும் வாய்ப்பினை இக்கட்டுரை ஏற்படுத்தித் தருகிறது.

Abstract:

Velliyankattaan (1904 – 1991) was a poet who lived in the Kongu region. He started writing in the mid-twentieth century (1942) and has given many works to Tamil. There have not been many studies on the content of his works. In particular, there has been no attempt to analyze the messages found in his works based on ideology. This article attempts to examine which of the ideologies that gained influence in the mid-twentieth century in the fields of Indian/Tamil Nadu politics, economics, and art and literature, such as Indian nationalism, communism, and the Dravidian movement, had the greatest influence on Velliyankattaan. This effort is undertaken with three works, namely “Kavignar” (1967), “Arignan” (1977), and “Tamilan” (1979). The Dravidian ideology is built on the basis that the original inhabitants of South India are Dravidians and that the Aryans have been dominating their politics, culture, language, art, and literature for a long time. This article identifies the ways in which its impact is reflected in Velliyankattaan’s works. Through this, Velliyankattaan also joins the ranks of those who have been identified as Dravidian movement poets so far. Additionally, this article provides the opportunity to examine Velliyankattaan in detail in comparison with the Dravidian movement ideas that appear in the works of such people.

 

References

வெள்ளியங்காட்டான். 1967. கவிஞன். கோவை: குமணன் பதிப்பகம்.

வெள்ளியங்காட்டான். 1977. அறிஞன். கோவை: குமணன் பதிப்பகம்.

வெள்ளியங்காட்டான். 1979. தமிழன். கோவை: குமணன் பதிப்பகம்.

வேங்கடசாமி. சீனி, மயிலை. 2001. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம். சிதம்பரம்: மெய்யப்பன் தமிழாய்வகம்.

Published

27.02.2024

How to Cite

வெள்ளியங்காட்டான் படைப்புகளில் திராவிடக் கருத்தியல் Dravidian Ideology in Veliangatan Works. (2024). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 9(37), 1-12. https://inamtamil.com/index.php/journal/article/view/260

Similar Articles

1-10 of 195

You may also start an advanced similarity search for this article.