திருமுருகாற்றுப்படைத் தனி வெண்பாக்களின் முதல் உரையாசிரியர் யார்?

Who is the Commentator of special Songs of Thirumurukatrupadai?

Authors

  • முனைவர் ஆ.மணி | Dr. A. Mani துணைப்பேராசிரியர் – தமிழ் & இணைத் தேர்வாணையர், பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி, புதுச்சேரி – 605 003, பேச: 9443927141, 8248417530

Keywords:

Paththupattu, Thirumurukatruppadai, special Songs, பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, தனி வெண்பாக்கள்

Abstract

உரைக்களம்

            பத்துப்பாட்டில் ஒவ்வொரு நூலுக்கும் பல்வேறு காலங்களில் பாடப்பட்ட;  பாடியவர் யார் என அறியப்படாத வெண்பாக்கள் பல உள்ளன. ”இதுவரை வந்துள்ள பதிப்புக்களில் வெண்பாக்களுக்கு ஒருவரும் உரை தரவில்லை. இப்பதிப்பில் வெண்பாக்களுக்கும் உரை தரப்பெற்றுள்ளது” (ச.வே. சுப்பிரமணியன் 2003: 84) என்பர். இதன்மூலம், 2003ஆம் ஆண்டுவரை பத்துப்பாட்டு  வெண்பாக்களுக்கு யாரும் உரையெழுதவில்லை என்பதும், ச.வே. சுப்பிரமணியன் உரையில் தான் முதன்முறையாக உரையெழுதப்பட்டுள்ளது என்பதும் புலனாகின்றன. இவ்வுரை குறிப்பாகப் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றாகிய திருமுருகாற்றுப்படையின் வெண்பா உரைகள் பற்றிக் கவனம் செலுத்துகின்றது.

            கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது (கையெழுத்தில் உள்ள இலக்குமணன் பதிப்பை நீக்கிவிட்டுப் பார்த்தால்) 1853இல் வந்த ஆறுமுக நாவலர் பதிப்பில்தான் (அச்சில்) முதன்முறையாக வெண்பாக்கள் இடம்பெறுகின்றன என்பதை அறிய முடிகின்றது. அப்பதிப்பிலும், இலக்குமணன் பதிப்பில் உள்ள அதே ஏழு வெண்பாக்களே உள்ளன என்பதும் நினையத்தகும். (விரிவுக்கு: ஆ. மணி பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பதிப்புக்களில் திருமுருகாற்றுப்படைத் தனி வெண்பாக்கள், கட்டுரைப்படி). ஆக, 150 ஆண்டுகளுக்கும் மேலாகத் திருமுருகாற்றுப்படை வெண்பாக்களுக்கு யாரும் உரையெழுதவில்லை என்று கூறுவது வியப்பை ஏற்படுத்துகின்றது. எனவே, இக்கருத்தின் பொருத்தத்தை அறிவதோடு, திருமுருகாற்றுப்படைப் பதிப்புக்களில் தரப்பட்டுள்ள தனி வெண்பாக்களுக்கு முதன்முதலில் உரையெழுதியவர் யார்? என்பதை அறிவதும், திருமுருகாற்றுப்படைத் தனி வெண்பாக்களுக்கு உரையெழுதியவர்களைக் காலவரிசையில் தொகுத்துக் காட்டுவதும்; அதன்வழித் திருமுருகாற்றுப்படைத் தனிவெண்பாக்களின் பதிப்பு வரலாற்றை உணர்த்துவதும்  இவ்வுரையின் நோக்கமாகும். இம்முயற்சிக்குத் திருமுருகாற்றுப்படைப் பதிப்புக்களும், பத்துப்பாட்டுப் பதிப்புக்களும் அவை பற்றிய ஆய்வுகளும் துணைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன.

Abstract

            Sung at different times for each book in the Paththupattu; There are a number of special Songs that are not known who the sung is. "None of the editions so far have given text to the special Songs of Paththupattu. In this edition, the text is also standardized for special Songs of Paththupattu” (S.V. Subramanian 2003: 84). Thus, until 2003, there is no commentator of the special songs of paththupattu. It is also clear that S.V.S. who is the first commentator of special songs of paththupattu. This discourse focuses specifically on the commentaries of special songs of Thirumurukatruppadai. 

            It amazes us to say that no one has written for Thirumurukatruppadai Venpas for more than 150 years. So, knowing the relevance of this idea, who was the first to write the text for the individual verses given in the Thirumurukaruppadi editions? Knowing that, and chronologically compiling the authors of the Thirumurukatruppadai individual venpas; the purpose of this discourse is to convey the history of the edition of the Thirumurukatruppadai individual venpas.

References

துணைநூல்கள் - திருமுருகாற்றுப்படைப் பதிப்புக்கள்

• அநவரத விநாயகமூர்த்தி. வை. 1978 (முதல் பதிப்பு). நக்கீரர் தந்த நன்முருகாற்றுப்படை. கொழும்பு: கல்வி அமைச்சு இந்து மன்றம்.

• ஆசிரியர் குழு (பதி.). 1983 (இரண்டாம் பதிப்பு). பத்துப்பாட்டு. சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

• ஆறுமுக நாவலர் (உ.ஆ.). 1853 (பிரமாதீச: ஐப்பசி – முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை. --: வித்தியாநுபாலன யந்திரசாலை.

• ஆறுமுக நாவலர் (உ.ஆ.). 1873 (ஆங்கிரஸ: பங்குனி - மூன்றாம் பதிப்பு). திருமுருகாற்றுப்படை. சென்னப்பட்டணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை.

• ஆறுமுக நாவலர் (உ.ஆ.). 1886 (விய: ஆனி - ஐந்தாம் பதிப்பு). திருமுருகாற்றுப்படை. சதாசிவப்பிள்ளை (பதி.ஆ.). சென்னப்பட்டணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை.

• ஆறுமுக நாவலர் (உ.ஆ.). 1917 இல் (பிங்கள: மார்கழி - 11ஆம் பதிப்பு). திருமுருகாற்றுப்படை. பொன்னம்பலப்பிள்ளை (பதி.ஆ.). சென்னப்பட்டணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை.

• ஆறுமுக நாவலர் (உ.ஆ.). 1971 (முதல் பதிப்பு). நக்கீரதேவநாயனார் அருளிச்செய்த திருமுருகாற்றுப்படை மூலமும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் உரையும். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம்.

• ஆறுமுக நாவலர் (உ.ஆ.). 2011 (20ஆம் பதிப்பு). திருமுருகாற்றுப்படை மூலமும் யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் நச்சினார்க்கினியர் உரைக்கருத்தைத் தழுவிச்செய்த புத்துரையும். கனடா: வல்வை வரலாற்று ஆவணக் காப்பகம்.

• ஆறுமுக நாவலர் (ப.ஆ.). சுக்கில - வைகாசி (1870). பதினோராந் திருமுறை. சென்னபட்டணம்: வர்த்தமான தரங்கிணி சாகை யச்சுக்கூடம்.

• ஆறுமுகநாவலர் (உ.ஆ.). 2003 (மறு பதிப்பு). திருமுருகாற்றுப்படை விளக்கத்துடன். சென்னை: முல்லை நிலையம்.

• ஆறுமுகம் பிள்ளை. எம். 1927. திருமுருகாற்றுப்படை சிற்றாராய்ச்சி. தஞ்சை: லாலி எலெக்டிரிக் அச்சுக்கூடம்.

• இரத்தினவேலு முதலியார். வாடாவூர். (பதி.ஆ.). 1885 (பார்த்திப மேட ரவி). திருமுருகாற்றுப்படை உரையாளர் பரிமேலழகருரை. சென்னை: ஜீவ ரக்‌ஷாமிர்த அச்சுக்கூடம்.

• இராசேந்திரன். ப. (உ.ஆ.). 2010 (முதல் பதிப்பு). சங்க இலக்கியம் பத்துப்பாட்டு திருமுருகாற்றுப்படை. சென்னை: கங்கை புத்தக நிலையம்.

• இராஜேந்திரக் குருக்கள். சு. (உ.ஆ,). 1988 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை விளக்கவுரை. நீர்வேலி: அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானம்.

• கதிர்முருகு (உ.ஆ.). 2009 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு – திருமுருகாற்றுப்படை – பொருநராற்றுப்படை - மூலமும் உரையும். சென்னை: சாரதா பதிப்பகம்.

• கந்தையா. ந.சி. (உ.ஆ.). 2008 (முதல் பதிப்பு). செவ்விலக்கியக் கருவூலம் – பத்துப்பாட்டு. சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.

• கந்தையாபிள்ளை. ந.சி.. 1935 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு வசனம். மதராஸ்: ஒற்றுமை ஆபிஸ்.

• காஞ்சி நாகலிங்க முனிவர் (ப.ஆ.). 1934. திருமுருகாற்றுப்படை (இலவச வெளியீடு). துறைசை ஆதினம்: ஸ்ரீ நமச்சிவாய தேசிக மூர்த்திகள்.

• கிருஷ்ணமூர்த்தி. காவூரி ஆர். (உ.ஆ.). 2014 (முதல் பதிப்பு). துன்பங்கள் நீக்கும் திருமுருகாற்றுப்படை (மூலமும் எளிய தமிழ் விளக்கமும்). சென்னை: நர்மதா பதிப்பகம்.

• குமாரசாமித் தம்பிரான். கயிலை. (பதி.ஆ.). 1999 (நான்காம் பதிப்பு). திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து. திருப்பனந்தாள்: காசித்திருமடம்.

• சண்முகம் பிள்ளை. மு. (ப.ஆ.). 1981 (முதல் பதிப்பு). தெ.பொ.மீ. பத்துப்பாட்டு ஆய்வு (புறம்). மதுரை: சர்வோதய இலக்கியப் பண்ணை.

• சண்முகனார் சுந்தர. (உ.ஆ.). ?. திருமுருகாற்றுப்படை தெளிவுரை. .. .. : புதுவை சிங்கார - குமரேசனாரின் மணிவிழா வெளியீடு.

• சரவணப் பெருமாளையர் (ப.ஆ.). 1834 (சய – ஆவணி). திருமுருகாற்றுப்படை மூலபாடம். சென்னப்பட்டணம்: கல்வி விளக்க அச்சுக்கூடம்.

• சாது சிதம்பரம் சுவாமி (உ.ஆ.). 2001 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை மூலமும் உரையும் (தெளிபொருள்). சென்னை: சாது சிதம்பரம் சுவாமி.

• சாமிநாதையர். உ.வே. (ப.ஆ.). 1974 (ஏழாம் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரையும். சென்னை: உ.வே.சா. நூல்நிலையம்.

• சாமிநாதையர். உ.வே. (ப.ஆ.). 1986 (நிழற்படப் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும். தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.

• சாமிநாதையர். உ.வே.(ப.ஆ.). 1889 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும். சென்னை: திராவிட ரத்நாகர அச்சுக்கூடம்.

• சாமிநாதையர். உ.வே.(ப.ஆ.). 1918 (இரண்டாம் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும். சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம்.

• சாமிநாதையர். உ.வே.(ப.ஆ.). 1931 (மூன்றாம் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும். சென்னை: கேஸரி அச்சுக்கூடம்.

• சாமிநாதையர். உ.வே.(ப.ஆ.). 1993 (இரண்டாம் பதிப்பு). பத்துப்பாட்டு மூலம். சென்னை: உ.வே.சா. நூல்நிலையம்.

• சிவஞானம். சாமி. (ப.ஆ.). 2003 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை உரை. தஞ்சாவூர்: சரசுவதி மகால் நூலகம்.

• சீனிவாசன். ம.பெ. (உ.ஆ.). 2009 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை உரைவிளக்கம். மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.

• சுதாகர். ம.வீ. (உ.ஆ.). 1990 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் தெளிவுரையும். சென்னை: வர்த்தமானன் பதிப்பகம்.

• சுந்தரமூர்த்தி. இ. (பொ.ப.ஆ.). 2001 (முதல் பதிப்பு). பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பதிப்பித்த சிற்றிலக்கியத் திரட்டு. சென்னை: சென்னைப் பல்கலைக் கழகம்.

• சுப்பிரமணியன். ச.வே. (உ.ஆ.). 2003 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு மக்கள் பதிப்பு. கோவிலூர் : கோவிலூர் மடாலயம்.

• சுப்பிரமணியன். ச.வே. (உ.ஆ.). 2010 (இரண்டாம் பதிப்பு). சங்க இலக்கியம் – பத்துப்பாட்டு – முழுவதும் – தெளிவுரை. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

• சுப்பிரமணியன். ச.வே. (ப.ஆ.). 2000 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு மூலம் (சுவடி வேறுபாடுகளுடன்). சிதம்பரம்: மெய்யப்பன் தமிழாய்வகம்.

• சுப்பிரமணியன். ச.வே. (ப.ஆ.). 2008 (முதல் பதிப்பு). தமிழ்ச்செவ்வியல் நூல்கள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

• சைவ சித்தாந்த மகாசமாஜம் (ப.ஆ.). 1940 (முதல் பதிப்பு). சங்க இலக்கியம் – எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும். சென்னை: சாது அச்சுக்கூடம்.

• சோமசுந்தரனார். பொ.வே. (உ.ஆ.). 1956 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் உரையும் (முதல் பகுதி). சென்னை: கழகம்.

• துரை அரங்கசாமி. மொ.அ., 1966 (மூன்றாம் பதிப்பு). அன்புநெறியே தமிழர்நெறி. மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.

• துரைசாமி. எஸ். (உ.ஆ.). 1920 (முதல் பதிப்பு). நற்கீரதேவர் திருவாய்மலர்ந்தருளிய திருமுருகாற்றுப்படை பொழிப்புரையும் அரும்பதவிளக்கமும். சென்னை: மனோன்மணி விலாச அச்சுக்கூடம்.

• நக்கீரதேவர். 1922 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை. சென்னை: பூமகள் விலாச அச்சுக்கூடம்.

• நடராசன். பி.ரா. (தொ.ஆ.). 2016 (முதல் பதிப்பு). நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை உரைவளம் (நச்சினார்க்கினியர், இளம்பூரணார் (உரையாசிரியர்), பரிமேலழகர், கவிப்பெருமாள், பரிதியார்). சென்னை: சாரதா பதிப்பகம்.

• நமச்சிவாய இராஜயோகியார். சை.ந.. 1938 (இரண்டாம் பதிப்பு). திருமுருகாற்றுப்படை மூலமும் பரிமேலழகர் உரையும். சென்னை: சற்குரு புத்தக சாலை.

• நரசிம்மன். வை. மு. (ப.ஆ.). 1961 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு - ஸ்ரீ. உ. வே. வை. மு. கோபால கிருஷ்ண மாசாரியரும் அவர் மாணாக்கர் சி. ஜெகநாதாசாரியரும் இயற்றிய ஆராய்ச்சியுரையுடன். சென்னை: வை.மு. கோபால கிருஷ்ணமாசாரியர் கம்பெனி.

• நாராயணசாமி. மு. (ப.ஆ). 1969 (நான்காம் பதிப்பு). முருகன் முந்நூல் மூலமும் உரையும். சென்னை: சைவ சித்தாந்த சமாஜம்.

• நாராயணவேலுப்பிள்ளை. எம். (உ.ஆ.). 1995 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு மூலமும் தெளிவுரையும் – முதற் பகுதி. சென்னை: முல்லை நிலையம்.

• நாராயணவேலுப்பிள்ளை. எம். (உ.ஆ.). 2011 (முதல் பதிப்பு). சங்க இலக்கியம் வழங்கும் பத்துப்பாட்டு. சென்னை: நர்மதா பதிப்பகம்.

• பசுபதி. ம.வே. (ப.ஆ.). 2010 (முதல் பதிப்பு). செம்மொழித் தமிழ் – இலக்கண இலக்கியங்கள். தஞ்சாவூர் : தமிழ்ப் பல்கலைக்கழகம்.

• பசுபதி. ம.வே. 2003 (முதல் பதிப்பு). பத்துப்பாட்டு எளிய உரைநடை. சென்னை: அல்லயன்ஸ்.

• பத்மபிரியா. மா. (உ.ஆ.). 2014 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை. சென்னை: கலைஞன் பதிப்பகம்.

• பார்த்தசாரதி. கோ. (உ.ஆ.). 1992 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை. சென்னை: அநுராகம் வெளியீடு.

• புலியூர்க்கேசிகன் (உ.ஆ.). 2013 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை (உதயசூரியன்). எஸ். கௌமாரீஸ்வரி (ப.ஆ.). சென்னை: சாரதா பதிப்பகம்.

• பூமகள் விலாச அச்சுக்கூடம் (பதி.ஆ.). 1922. திருமுருகாற்றுப்படை. சென்னபட்டணம்: பூமகள் விலாச அச்சுக்கூடம்.

• மணி.ஆ. (பதி.ஆ.). 2018 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை மூலமும் ஆறுமுக நாவலர் உரையும். புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.

• மணி.ஆ. (பதி.ஆ.). 2019 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை புத்துரைக் கொத்து. புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.

• மணி.ஆ. (பதி.ஆ.). 2020 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை உரைத்தொகை. புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.

• மணி.ஆ. 2014 (முதல் பதிப்பு). மலைபடுகடாம் – பதிப்பு வரலாறு (1889 – 2013). சென்னை: காவ்யா பதிப்பகம்.

• மனோன்மணி விலாச அச்சுக்கூடம் (பதி.ஆ.). 1910. திருமுருகாற்றுப்படை மூலபாடம். சென்னை: மனோன்மணி விலாச அச்சுக்கூடம்.

• மாணிக்கவாசகன். ஞா. (உ.ஆ.). 2010 (நான்காம் பதிப்பு). பத்துப்பாட்டு மூலம் – விளக்க உரையுடன். சென்னை: உமா பதிப்பகம்.

• மாணிக்கனார். அ. (உ.ஆ.). 1999 (முதல் பதிப்பு). சங்க இலக்கியம் பத்துப்பாட்டு மூலமும் உரையும் – முதல் பாகம். சென்னை: வர்த்தமானன் பதிப்பகம்.

• மீனாட்சி சுந்தரம்பிள்ளை. ஆர். (உ.ஆ.). 1933. திருமுருகாற்றுப்படை - விருத்தியுரையுடன். சென்னை: பூமகள் விலாச அச்சுக்கூடம்.

• முருகேசன். கதி. (உ.ஆ.). 2017 (ஆறாம் பதிப்பு). சங்க இலக்கியம் – பத்துப்பாட்டு மூலமும் உரையும். சென்னை: சாரதா பதிப்பகம்.

• வையாபுரிப் பிள்ளை. எஸ். (தொ.ஆ. & ப.ஆ.). 1967 (இரண்டாம் பதிப்பு). சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) தொகுதி - 1. சென்னை: பாரி நிலையம்.

• வையாபுரிப்பிள்ளை. எஸ். (உ..ஆ.). 1946 (நான்காம் பதிப்பு). திருமுருகாற்றுப்படை மூலமும் உரையும். சென்னை: சைவ சித்தாந்த மகா சமாஜம்.

• ஜகந்நாதன். கி.வா. (உ.ஆ.). 1949 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை திரு. கி.வா. ஜகந்நாதன் அவர்கள் எழுதிய பொழிப்புரையுடன். சென்னை: சைவசமய பக்த ஜனசபை வெளியீடு.

• ஜகந்நாதன். கி.வா. (உ.ஆ.). 1978 (இரண்டாம் பதிப்பு). திருமுருகாற்றுப்படை விளக்கம். சென்னை: அமுத நிலையம்.

• ஜகந்நாதன். கி.வா. (உ.ஆ.). 2004 (ஏழாம் பதிப்பு). வழிகாட்டி. சென்னை: அல்லயன்ஸ் கம்பெனி.

• ஜமதக்னி (உ.ஆ.). 1960?. திருமுருகாற்றுப்படை பொருள்விளக்கமும் விருத்தியுரையும். சென்னை: பி. இரத்தின நாயகர் ஸன்ஸ்.

• ஜெகத்ரட்சகன். எஸ். (உ.ஆ.). 2016 (முதல் பதிப்பு). திருமுருகாற்றுப்படை. சென்னை: ஆழ்வார்கள் ஆய்வு மையம்.

துணைநூல்கள் (பிற)

• அமிர்தலிங்கம்.சு. 2000 (முதல் பதிப்பு). சங்க இலக்கியக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்யப்பன் தமிழாய்வகம்.

• அய்யப்பன். கா.. 2009 (முதல் பதிப்பு). செம்மொழித் தமிழ் நூல்களின் பதிப்புரைத் தொகுப்பு. சென்னை: காவ்யா.

• அரவிந்தன். மு.வை.. 2008 (இரண்டாம் பதிப்பு). உரையாசிரியர்கள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

• இலக்குமணன் (பதி.ஆ.). பதிப்பு விவரம் கிடைக்கவில்லை.

• இளங்குமரன். இரா. 1991 (முதல் பதிப்பு). சுவடிக்கலை. சேலம் : அரிமாப் பதிப்பகம்.

• இளங்குமரன். இரா.. 2001. சுவடிப் பதிப்பியல் வரலாறு. சிதம்பரம்: மெய்யப்பன் தமிழாய்வகம்.

• கைலாசபிள்ளை த.. 1919 (காலயுத்தி - தை). ஆறுமுக நாவலர் சரித்திரம். சென்னபட்டணம்: வித்தியாநுபாலன யந்திரசாலை.

• சிவகாமி. ச. (பதி.ஆ.). 2009 (முதல் பதிப்பு). சங்க இலக்கியம் பதிப்பும் பதிப்பாளரும். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

• சுப்பராயச் செட்டியார் (பதி.ஆ.). பதிப்பு விவரம் கிடைக்கவில்லை.

• மணி.ஆ. (க.ஆ.). 2017. தமிழ் முத்து. சென்னை: ஆர் அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம்.

• முத்துச்செல்வன். ஆ. (க.ஆ.) 2008 (முதல் பதிப்பு). ஆறுமுக நாவலர். கரு. அழ. குணசேகரன் & த. பூமிநாதன் (பதி.ஆ.). சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

• விசாலாட்சி. ந. 1990 (முதல் பதிப்பு). பழந்தமிழ்ப் பதிப்புகள். சென்னை: சரஸ்வதி பதிப்பகம்.

• வேங்கடசாமி. மயிலை.சீனி. 2012 (முதல் பதிப்பு). பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம். சென்னை: பரிசல் புத்தக நிலையம்.

• ஜானகி. இரா. (தொகு.ஆ.). 2011 (இரண்டாம் பதிப்பு). சங்க இலக்கியப் பதிப்புரைகள். சென்னை: பாரதி புத்தகாலயம்.

Published

10.11.2020

How to Cite

திருமுருகாற்றுப்படைத் தனி வெண்பாக்களின் முதல் உரையாசிரியர் யார்? Who is the Commentator of special Songs of Thirumurukatrupadai?. (2020). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 6(24), 4-27. https://inamtamil.com/index.php/journal/article/view/178

Similar Articles

1-10 of 195

You may also start an advanced similarity search for this article.