வெள்ளியங்காட்டானின் வாழ்வும் இலக்கியப் பணியும்

Life and Literary Work of Velliyankattan

Authors

  • இர. ஜோதிமீனா | R. Jothi meena முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த் துறை, அரசு கலைக்கல்லூரி, கோயம்புத்தூர் - 18

Keywords:

இலக்கியப் பணி, இலக்கிய, வாழ்வு, வெள்ளியங்காட்டான்

Abstract

கோவையில் வாழ்ந்த முதுபெரும் மரபுக்கவிஞர் வெள்ளியங்காட்டான். எளிய விவசாயக் குடிமகனான இவர், பாவலராகவும், பகுத்தறிவாளராகவும், சிறிதுகாலம் ஆசிரியராகவும், தையல் கலைஞராகவும், மெய்ப்புத் திருத்துநராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பல தளங்களில் பயணித்திருக்கிறார். தமக்கென வீடோ, நிலமோ எதுவும் சேர்த்துக் கொள்ளாதவர். வறுமையிலும் செந்நெறி பிறழாதவர். எளியவர்பால் மிகுந்த அன்பு கொண்டவர்.

கவிஞர் வெள்ளியங்காட்டான் கோவையின் தாகம் தணிக்கும் பில்லூர் அணைக்குச் செல்லும் வழியில் உள்ள வெள்ளியங்காடு என்ற அழகிய கிராமத்தில், திரு.நாராயணசாமி், காவேரிஅம்மாள் அவர்களின் மகனாக 21.8.1904 இல் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் மூத்தமகனாகப் பிறந்த இவருக்கு, உடன்பிறந்தவர்கள் பத்துச் சகோதரிகள் ஆவர். இராமசாமி என்பது இவரது இயற்பெயர். தான் பிறந்த கிராமத்தின் எழில் கொஞ்சும் இயற்கை அழகும், அங்குள்ள மக்களின் உழைப்பும், அன்பும் இவரைக் கவர்ந்ததால், அவ்வூரின் பெயரையே தமதாக்கிக் கொண்டார்.

References

கவிஞன் 1967

அறிஞர் 1977

தமிழன் 1979

பரிசு 1980

புரவலன் 1984

தலைவர்

துணைவி

துறவி கை எழுத்துப் பிரதி

Published

10.11.2016

How to Cite

வெள்ளியங்காட்டானின் வாழ்வும் இலக்கியப் பணியும்: Life and Literary Work of Velliyankattan. (2016). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 2(7), 9-24. https://inamtamil.com/index.php/journal/article/view/158

Similar Articles

51-60 of 193

You may also start an advanced similarity search for this article.