காப்பியங்கள் : கற்றலும் கற்பித்தலும்

Epics : Learn and Educate

Authors

  • முனைவர் ம. ஷீலா | Dr. M. Sheila உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரி, செங்கல்பட்டு.

Keywords:

திறவு சொற்கள் காப்பியங்கள், கற்றல் , கற்பித்தல் , நிலையாமை, அரிச்சந்திரன், கேசி, சுவை, உற்றுழி, வருணனை.

Abstract

ஆய்வுச்சுருக்கம்

மனித வாழ்வியலைப் பற்றிப் பேசுவன இலக்கியங்கள். நாம் வாழும் வாழ்க்கையை எடைபோடும் தராசு என்றும் இலக்கியங்கள். அவற்றுள், பொருள்தொடராய் அமையும் காப்பியங்கள் விளக்கமாய், விரிவாய் வாழ்க்கைக்குத் தேவையான பண்புகளையும்,  நிகழ்வுகளில் எங்ஙனம் செயலாற்றினால் என்னென்ன விளைவுகள்  ஏற்படும்  என்பன பற்றியும் காட்சிப் படமாகக்  காட்டுகின்றன. வள்ளுவர் கூறும்,

"செய்தக்க அல்ல செயக் கெடும்

செய்தக்க செய்யாமை யானும் கெடும்"(466)

என்பதற்கு இலக்கியமாக அமைவதால் வாழ்வின் வழிகாட்டியாகவும் அமைகின்றன.

நாம் காப்பியங்களைக் கற்கும்போது ஆரம்பத்தில் நம் உணர்வுகளுக்கு வடிகாலாய்,  இன்பத் துய்ப்பிற்காகத்தான் கற்க ஆரம்பிக்கின்றோம். ஆனால் அது துன்ப மறப்பிற்கான தாங்குவதற்கான ஊன்றுகோலாக அமைகின்றது. வழக்கில் ஒன்று கூறுவார்கள் - சீதை, சந்திரமதி அனுபவிக்காத துன்பங்களா...? பாஞ்சாலி படாத பாடா..? பெண்ணிய நோக்கில் பார்க்கும்போது அடிமைத்தனத்தை ஊக்குவிப்பது போல் தோன்றினாலும், துயர்கள் இல்லாத வாழ்க்கை இல்லை; 'இடுக்கண் வருங்கால் நகுக' என்றாற் போல் துயர்களில் சோர்ந்து செயலற்று விடாமல் அதிலிருந்து மீள முயல வேண்டும்; முயற்சியே உயிர்ப்பு; வாழ்க்கை என்பதை உணர்த்தும்  பாங்காகக் கொள்ள வேண்டும்.

காப்பியங்கள் அறம், பொருள், இன்பம் வீடெனும் நாற்பொருள்கள் பற்றிப் பேசுவதால் பெரும்பாலும் முழுவாழ்க்கை பற்றிய சித்திரமாக அவை அமைகின்றன. கதை வடிவில் வாழ்வியலை உணர்த்துவதால் சுவையுடன் படிக்க,  கேட்கச் செய்வதுடன் செயல்படவும் தூண்டுகின்றன. பாத்திரங்கள் பெரும்பாலும் அடிக்கடி வருவதால் அவர்களின் பண்பு விளக்கங்கள், உணர்வுப் போக்குகள் எளிதில் புரிகின்றன.  பாத்திரங்களுடன் ஒன்றியும், படர்க்கை நிலையிலும் நின்று அவற்றை அனுபவிப்பதால் அவர்களின் உணர்வுகளை உணர்வதால் செய்தக்கன, செயத்தகாதன புரிவதால் வாழ்வின் இடர்களில் 'மாற்றி யோசிக்க' உதவுகின்றன.

காப்பியங்கள் பல்கலைக்கழகமென பல்பாத்திரங்கள், நிகழ்வுகள் எனப் பரந்து காணப்படினும் ஆழ உழுவது போல கருத்தை ஆழமாகவும் உணர்த்துவதால்  வாழ்க்கையைப் புரிய வைக்கின்றன.

Abstract:

Literature that talks about human life. These can be said to be the scales that weigh the life we live. The epics that do not follow the subject illustrate and show the characteristics that are necessary for detailed life. Literature is the visual images of how to act on the events and how to deal with the consequences. They also serve as a guide to life as the literature suggests that the cultivator is not adaptable but inactive and ineffective.When we learn epics we begin to drain emotion  for pleasure but it is also a crutch for forgetfulness, suffering and endurance. One would say are the suffering not experienced by Sita and Chandramathy? Sing without Panchaali? While it may seem like  promoting slavery when viewed from a feminist perspective, there is no life without tragedies.

'Idukan Varungal Naguga'  should not be active in misery and should try to recover from it.Effort is life. Life should be a way of realizing that, Epics speak of four elements of Virtue,meaning,pleasure and Moksham and thus depict life as a whole.Realizing life in the form of a story stimulates reading, listening and acting with taste. The characters come so often, it is easy for us to travel with their character descriptions and emotions. Their character descriptions make it easier for us to travel with emotional tendencies. Characters can feel their feelings and pleasures as they come often. They provide an opportunity to experience our world even though natural descriptions sometimes seem to restrict the state we feel their beauty and richness through natural paintings. We live well in the world only with nature. If we all had an emotional connection with the natural world, would it be like destroying the forest unnecessarily or grieving that the rain did not come?

Isn't it unnecessary that the children would lose the natural life we enjoyed if we realized these and realize them to the students?Epics, because the intrinsic elements we spoke of arn and Educate.

References

சாமிநாதையர், உ.வே., Samynathaiyar, U.V., 2013, ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் (1-2) shree Meenakshi Sundaram pillai's History(1-2), சென்னை , டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்.

தண்டி Dhandi 2017, தண்டியலங்காரம் Dhandiyalangaram, இராமசுப்பிரமணியம், வ.த.(தெளிவுரை) Ramasubramaniyam, V.D,(Commentary)சென்னை ,முல்லை நிலையம்.

ஜகந்நாதன், கி.வா., Jagannathan, K.V.,1991, தமிழ்க்காப்பியங்கள்(ஆராய்ச்சி) Tamil Kappiyangal(Research), சென்னை, அமுத நிலையம் லிமிடெட்.

காசிராஜன், இரா., Kasirajan,R., 2004, உலகக் காப்பியங்கள், World Epics, சென்னை, நியு செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட் .

அரசுமணி, புலவர்(உரை)., Arasumani, pulavar(Commentary), 2018, திருக்குறள், Thirukkural, சென்னை, அருணோதயம்.

கௌமாரீஸ்வரி,எஸ்.(தொ.ர்), Gowmareeswari,S. (editor), 2015, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும் உரையும், சென்னை, சாரதா பதிப்பகம்.

ஞானசம்பந்தன், அ.ச., ஞானசுந்தரம், தெ., (பதி.ள்) , Gynasambandan,A.S., Gynasundaram,D., (editor), 2002, இராமாயணம், Ramayanam, சென்னை, கங்கை புத்தக நிலையம் .

ஸ்ரீசந்திரன்,ஜெ., shreeChandran ,J.,2004, ஐம்பெரும் காப்பியங்கள் (1-5) ,Imperum Kappiyangal(1-5) , சென்னை,வர்த்தமானன் பதிப்பகம்.

வீரன், நெல்லூர். ஆசுகவிராஜர். Veeran,Nelluoor. Asukavirajar,2001, அரிச்சந்திர புராணம், Aricchandira Puranam,சென்னை, குமார் அசோசியேட்ஸ்.

பாரதியார், Bharathiyar, 2018, பாரதியார் கவிதைகள்,Bharathiyar Kavithaikal,சென்னை, காளீஸ்வரி பதிப்பகம்.

சீனப் பழமொழிகள் - விக்கி மேற்கோள்கள், https://ta.m.wikiquote.org>wiki

நீர்-தமிழ் விக்கிப்பீடியா, https://ta.m.wikipedia.org>wiki>ந..

Published

26.02.2022

How to Cite

Srinivasan, D. M. S. (2022). காப்பியங்கள் : கற்றலும் கற்பித்தலும்: Epics : Learn and Educate. இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies), 7(29), 227–237. Retrieved from https://inamtamil.com/journal/article/view/46