கல்வியில் ஆராய்ச்சி

Research in Education

Authors

 • முனைவர் ப.தினகரன்| Dr. P. DHENAKARAN உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கொங்கு கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), ஈரோடு – 638107, அலைபேசி எண் :7010049779, மின்னஞ்சல் :[email protected]

Keywords:

கல்வியில் ஆராய்ச்சி, கல்வி, Education, ஆராய்ச்சி, Research, ஆய்வுச் சிக்கல், Problem in Research

Abstract

ஆய்வுச்சுருக்கம்

ஆராய்ச்சி என்பது ஓர் இனிமையான அனுபவம். ஆழ்கடலின் அடியில் ஆராய்ச்சிகளை நிகழ்த்துவோரும், இமயத்தின் உச்சியை எட்டியோர் அடையும் இனிய அனுபவத்தினை  அடைய இயலும். கேள்விகளின் வழியாக ஆராய்ச்சிகள் மலர்கின்றன. ஆய்வின் விளைவாக அறிவு மலர்கிறது. அறிவின் முதிர்ச்சியாக நாகரீகம் தழைக்கிறது. பண்டைய கற்காலம் முதல் இன்றைய கணிப்பொறிக் காலம் வரை கேள்விகளாலேயே உலகம் முன்னேறி வந்துள்ளது. ஆய்வு என்பது பிரச்சனைக்குத் தீர்வுகாண மேற்கொள்ளப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்பாடு ஆகும். ஆராய்ச்சியின் நோக்கமே அறிவினை விரிவாக்குதல் ஆகும். கல்விமுறையில் கல்விச் செயல்திட்டங்கள் மற்றும் அதனைச் செயல்படுத்தும் அமைப்புகள் அடங்கியுள்ளன.  கல்விச் செயல்திட்டங்களைச் செயல்படுத்துவதில் நிறுவன அளவில் ஆசிரியர், மாணவர் மற்றும் கற்பித்தல், கற்றல் செயல்பாடுகளைக் குறிப்பிடலாம். கல்வி ஆராய்ச்சியின் நோக்கங்களைக் கீழ்க்காணுமாறு தொகுத்துக் கூறலாம்.

 1. தீர்வு அடைதல்
 2. கருத்துக்களை மதிப்பிடல்
 3. சிறப்பு அறிவு பெறுதல்
 4. முற்கூறல்
 5. கோட்பாடுகளைச் சோதித்தல்

கல்வி ஆராய்ச்சியின் வரம்பு அல்லது எல்லை மிகவும் விரிவானது. கல்வியுடன் தொடர்புடைய அனைத்துப் பகுதிகளும் மற்றும் அம்சங்களும் இதில் அடங்கும்.

 1. ஆசிரியர் தொடர்பானவை
 2. மாணவர் தொடர்பானவை
 3. கலைதிட்டம் தொடர்பானவை
 4. கல்வி நிலையங்கள் தொடர்பானவை
 5. நிர்வாகம் தொடர்பானவை

இவ்வாறாக கல்வியின் ஆராய்ச்சி குறித்தும் சிறப்புக் குறித்தும் அறியலாம்.

Abstract 

Research is a pleasant experience. Those who explore the depths of the ocean and reach the summit of the Himalayas can enjoy the off experience.  Research flourishes through questions.  Knowledge blossoms as a result of research.  Civilization flourishes as knowledge matures.  The world has advanced with questions from the Stone Age to the computer age today. Research is a systematic study that is carried out to solve a problem.  The purpose of research is to broaden knowledge.  The education system includes educational programs and the organizations that implement them.  Teacher, student and teaching and learning activities can be specified at the organizational level in the implementation of educational action plans.  The objectives of academic research can be summarized as follows.

 1. Achieving the solution
 2. Evaluation of suggestions
 3. Gaining specialized knowledge
 4. Forecast
 5. Testing the principles

The scope of academic research is very broad.  This includes all areas and features related to education

 1. Teacher oriented
 2. Student Oriented 
 3. Project Oriented 
 4. Educational institutions Oriented 
 5. Administration oriented

In this way one can learn about the research and specialization of education.

References

மீனாட்சி சுந்தரம்.அ (2010) கல்வியில் ஆராய்ச்சி, காவ்யமாலா பப்ளிஷர்ஸ், திண்டுக்கல். ப.1

மீனாட்சி சுந்தரம்.அ (2010) கல்வியில் தத்துவமும் சமுதாயமும், காவ்யமாலா பப்ளிஷர்ஸ், திண்டுக்கல். ப.5

மீனாட்சி சுந்தரம்.அ (2010) கல்வியில் தத்துவமும் சமுதாயமும், காவ்யமாலா பப்ளிஷர்ஸ், திண்டுக்கல். ப.7

மீனாட்சி சுந்தரம்.அ (2010) கல்வியில் ஆராய்ச்சி, காவியமாலா பப்ளிஷர்ஸ், திண்டுக்கல், ப.2

சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி 1 : ப.236.

பேராசிரியர், தொல்காப்பியம் ,சொல்லதிகாரம், .330.

மு.வ , திருக்குறள் உரை, 792.

பேராசிரியர்,தொல்காப்பியம், பொருளதிகாரம், 582.

Published

26.02.2022

How to Cite

PALANISAMY, D. (2022). கல்வியில் ஆராய்ச்சி: Research in Education. இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies), 7(29), 197–208. Retrieved from https://inamtamil.com/journal/article/view/50