யாழ்ப்பாணத்து இந்து சமுதாய வளர்ச்சியில் பெண்புலவர்களினதும் சமய பிரசாரகர்களினதும் வகிபங்கு

The role of women and religious propagandists in the development of the Hindu community in Jaffna

Authors

  • அ.வியாசன் | A. Viyasan விடுகை வருடமாணவன், இந்து நாகரிகத்துறை, இந்துக் கற்கைகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை
  • விக்னேஸ்வரி பவநேசன் | Vigneshwari Pavanesan தலைவர், சைவசித்தாந்தத் துறை, இந்துக் கற்கைகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை

Keywords:

யாழ்ப்பாணம், பெண்கல்வி, சமூகம், பெண்புலவர்கள், சமயப் பிரசாரகர்கள்

Abstract

ஆய்வுச்சுருக்கம்

பெண் என்ற எண்ணக்கரு உயிரியல் நிலை சார்ந்த இயல்பு மட்டுமன்றி சமூகக் கட்டுமைக்கும் உட்பட்டு நிற்கின்றது. அவற்றுடன் இணைந்து மேலெழும் பெண்கல்வி சமூக அடித்தளத்தை அடியொற்றிய மேலமைந்த செயற்பாடாகின்றது. யாழ்ப்பாணத்து இந்து சமுதாய வளர்ச்சியில் பெண்புலவர்கள் மற்றும் சமய பிரசாரகர்களின் வகிபங்கு என்ற தலைப்பில் அமைந்துள்ள இவ்வாய்வானது,  யாழ்ப்பாண இந்து சமூகத்தில் பெண்களின் கல்வி வளர்ச்சி மற்றும் பெண்கள் எதிர்கொண்ட சவால்களை வெளிக்கொணர்தல் என்பதை ஆய்வின் நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. யாழ்ப்பாண இந்து மரபிலே பெண்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கப்பட்டதா?, தீர்வாக இருக்குமென எதிர்பார்த்த கருத்துக்கள் எவை குடும்ப மட்டத்திலும் சமூக மட்டத்திலும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு எடுக்கப்பட்ட தீர்வுகள் எவை? பெண்ணின் பிரச்சினைகளுக்குக் கல்வியறிவின் வளர்ச்சி தீர்வாக அமையுமென சிந்திக்கப்பட்டதா? ஆணிற்குச் சமமாகப் பெண்ணை உயர்த்துவதற்குக் கல்வியறிவு உதவியாக அமையலாம் என்ற கருத்துக்கள் நிலவியதா போன்ற ஐயங்களுக்கு விடை காண வேண்டியுள்ளது போன்றன ஆய்வுப்பிரச்சினையாகக் காணப்படுகின்றன. இவ்வாய்வானது, விவரண ஆய்வாக அமைகிறது. பொருத்தமான சந்தர்ப்பத்தில் பகுப்பாய்வு, ஒப்பீட்டாய்வு மற்றும் வரலாற்று ஆய்வு முறையியல்களினூடாக நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது யாழ்ப்பாணத்து இந்து சமூகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கம் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்புலவர்கள் மற்றும் சமய பிரசாரகர்களை எல்லையாகக் கொண்டுள்ளது. ஆறுமுகநாவலரின் வருகையால் 19, 20ஆம் நூற்றாண்டிலே சமய வாழ்வியலுடன் கல்வியறிவு, ஆளுமை, தொழில் மேலாண்மை, பண்பாட்டுப் புலம் இவற்றிலும் உலகளாவிய நிலையிற் செல்வாக்குப் பெற்ற சீமாட்டி லீலாவதி இராமநாதன், மங்களம்பாள், இரத்தினா மா நவரத்தினம், பத்மாசனி இராசேந்திரம், தம்பு வேதநாயகி, தங்கம்மா அப்பாக்குட்டி, மங்கையற்கரசி திருச்சிற்றம்பலம் முதலான யாழ்ப்பாணப் பெண்புலவர்களும் சமய பிரசாரகர்களும் தம் புலமை சார்ந்த பணிகளை ஆற்றியுள்ளனர் என்பதையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண இந்து சமுதாயத்தில் கல்வியாளர்களும் சமூக சீர்திருத்தவாதிகள் வெவ்வேறு காலப்போக்கில் தோற்றம் பெற்றுத் தமது புலமை நுட்பத்தினால் சீர்திருத்தங்கள் மேற்கொண்டனர். பெண்கள் தொடர்பான ஆய்வுகள் பல்வேறு துறைகளின் ஊடாகப் பல கோணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும். யாழ்ப்பாணத்து பண்டைய பெண்கள் இந்து சமுதாயத்தில் பல்வேறுபட்ட விதங்களில் விதிக்கப்பட்ட கட்டுக்கோப்புகளுக்கு உட்பட்ட வகையில் வாழ்ந்து சிறப்பித்தனர் என்பதை எமது இன்றைய மற்றும் அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துக்காட்டுவதற்கு இத்தகைய ஆய்வுத்தேடல்களும் அவற்றின் வெளிப்பாடுகளும் உதவியாக அமையுமெனலாம்.

Abstract:

The notion of woman is not only biological in nature but also subject to social structure. Along with them, the emerging girl education is a superficial activity that underpins the social foundation. The study, entitled The Role of Women and Religious Evangelists in the Development of the Hindu Community in Jaffna, aims to address the educational development of women in the Jaffna Hindu community and the challenges faced by women. Was there any attempt to find a solution to the problems faced by women in the Jaffna Hindu tradition? Was it thought that the development of education would be the solution to the problems of women? The question of whether there is a perception that education can help raise women on an equal footing with men remains to be answered. This study forms a descriptive study. Performed as analysis, comparison and historical analysis as appropriate. This study covers the Hindu community in Jaffna from the nineteenth century to the twentieth century. Due to the arrival of Arumuganavalar, in the 19th and 20th centuries, Seematti Leelavathi Ramanathan, Mangalambal, Rathina Ma Navaratnam, Padmasani Rasendram, Thambu Vedanayakalam,T hangammayapakatti, who were religiously influential in the field of education, personality, career management and culture, were also present. It has also been clarified that tasks have been performed. Educators and social reformers in the Hindu community of Jaffna evolved over time and carried out reforms through their scholarly technique. Studies related to women should be conducted from different angles through different fields. Such research and their findings may help to illustrate to our present and future generations that the ancient women of Jaffna lived and excelled in the Hindu society subject to various restrictions.

References

வள்ளிநாயகி, இ., (2006), யாழ்ப்பாண சமூகத்தில் பெண் கல்வி ஓர் ஆய்வு, குமரன் புத்தக இல்லம், கொழும்பு.

சிவலிங்கராசா, என்., சரஸ்வதி,சி., (2008), 19ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்து தமிழ் கல்வி, குமரன் புத்தக இல்லம், கொழும்பு.

விக்னேஸ்வரி, ப., (2010), இலங்கையின் சமய சமூக வளர்ச்சியில் முன்னோடிகளான சில பெண்கள், சிவத்தமிழ் செல்வி வாசகம், ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம், தெல்லிப்பளை.

சிவத்தம்பி,கா., (2000), யாழ்ப்பாணம் சமூகம் பண்பாடு கருத்துநிலை, குமரன் புத்தக இல்லம், கொழும்பு.

கலைவாணி,இ., (2009), இந்துக்கல்வி மரபில் சமுதாய மேம்பாடு, இணுவில் பாராஜசேகரப் பிள்ளையார் கோவில் மகா கும்பாபிடேகச் சிறப்பு மலர், பாராஜசேகரப் பிள்ளையார் கோவில்.

வேலுப்பிள்ளை, க., (1918), யாழ்ப்பாண வைபவகௌமுதி, சாரதா பீடேந்திரசாலை.

கைலாசநாதகுருக்கள், (1985), லீலாவதி இராமநாதன் பெருமாட்டி நினைவுப்பேருரை, இந்துப்பண்பாட்டு சில சிந்தனை, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.

சிவத்தமிழ் ஆராய்ச்சிக்கட்டுரைகள், (1985), மணிவிழாச்சபை வெளியீடு, தெல்லிப்பளை.

சிவலிங்கம்,மூ., (2017), பெண் எனும் மகா சக்தி சாதனை படைத்த 51 குல மகளிர், இணுவில் சைவத்திருநெறிக்கழகம்.

கல்யாணசுந்தரனார், வி., (2011), பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை, பாரிநிலையம், சென்னை.

Published

22.08.2021

How to Cite

யாழ்ப்பாணத்து இந்து சமுதாய வளர்ச்சியில் பெண்புலவர்களினதும் சமய பிரசாரகர்களினதும் வகிபங்கு: The role of women and religious propagandists in the development of the Hindu community in Jaffna. (2021). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(27), 15-39. https://inamtamil.com/index.php/journal/article/view/1

Similar Articles

1-10 of 186

You may also start an advanced similarity search for this article.