அகராதியும் இலக்கணக் கோட்பாடுகளும்
Dictionary and Grammatical Theories
Keywords:
வேத அங்கங்கள்(parts of Vedas), கட்டமைப்பு (structure), பொருள்நிலை (condition of meaning), சொற்கருவூலங்கள் (Term Treasuries), அர்த்தசாமம் (mid-night), ஹஸ்தமயம் (Disappearing), அகர்ணம்(Deaf).Abstract
ஆய்வுச்சுருக்கம்
வேதமொழியை முழுமையாகப் புரிந்துக்கொள்வதற்காகத் தோன்றியவைதான் வேத அங்கங்கள் என்று சொல்லப்படுகின்ற ஆறு துறைகளான சிக்ஷா என்கின்ற ஒலியியல், வியாகரணம் என்கிற மொழி இலக்கணம், நிருக்தம் என்கிற சொல் பொருள் விளக்கம், ஜ்யோதிஷ்யம் என்கிற வானவியல், கல்பம் என்கிற சமயச் சடங்குகள். நிருக்தம் வேர்ச்சொற்களின் பொருளையும், இடமாற்றம் செய்து மாற்றியமைக்கும் முறையினையும், எழுத்துக்களை விளக்கும் முறைகளையும் எடுத்துரைக்கின்றன.
தமிழில் திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி நிகண்டு போன்ற பல சொற்கருவூலங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் செய்யுள் நடையிலேயே எழுதப்பட்டன. பிற்காலத்தில் அகர வரிசையில் சொற்களை அடுக்கிப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளன. இம்முறையில் 19 – ஆம் நூற்றாண்டிலிருந்தே பலர் அகராதிகளை உருவாக்கியுள்ளனர். காலத்திற்கேற்ப பழைய சொற்களுக்குப் புதிய விளக்கங்கள் தரப்படுகின்றன. அந்நிய மொழிச் சொற்கள் பல தமிழில் கலந்துவிட்டன. அவற்றுக்கு இடம்கொடுத்து விளக்கம் அளிக்கவேண்டிய கடமை அகராதிகளுக்கு உண்டு. அந்த வகையில் லிப்கோ பப்ளிஷர் 2008 – இல் நடைமுறைச் சொற் களஞ்சியமாக வெளியிட்டுள்ள தமிழ் – தமிழ் – ஆங்கிலப் பேரகராதியை முதன்மை ஆதாரமாகக் கொண்டு –
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்ற குறளுக்கேற்ப முதல் எழுத்தான அகர எழுத்தில் தொடங்கியுள்ள (அகர வரிசை மட்டும்) 2311 சொற்கள் மட்டுமே இந்த கட்டுரையின் தரவுகளாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்ட நிலையில், இதில் உள்ள சொற்கள் பெரும்பாலும் சமஸ்கிருத மொழிக்குரியனவாகவே அமைந்துள்ளன என்பதைக் கருதுகோளாகக் கொண்டு இந்த ஆய்வு அமைகின்றது. இவ்வகராதியின் அமைப்பு முறை, சொற்களின் வடிவம் மற்றும் பொருள்நிலையை சமஸ்கிருத இலக்கண மரபில் வந்த புத்தமித்திரரால் ஆக்கப்பட்ட வீரசோழிய இலக்கண நூலினை ஆய்வு செய்து வெளியிட்ட சு. இராசாராம் அவர்களின் வீரசோழிய இலக்கணக் கோட்பாடு என்ற நுலில் இடப்பெற்றுள்ள இலக்கணக் கோட்பாடுகளைக் கொண்டு ஆராயப்பட்டுள்ளது.
Abstract
There are many Dictionaries in Tamil like Divakaram, Pingalandai, Soodamani Nikandu. They were all written in verse style. Later words are stacked in alphabetical order. Many dictionaries have been created in this way since the 19th century. In that sense Lipco Publisher 2008 is a practical term as the primary source for the Tamil-Tamil-English dictionary published as a repository
Assuming that the words in it are mostly Sanskrit, the structure, form and semantics of the words were studied and published by veerachozhiya Grammar, a book written by Buddamittranaar in the Sanskrit grammatical tradition. S.Rajaram has explored the grammatical principles contained in his book Veerachozhiya kootpadu. In this connection the purpose of this article is to examine and match the Grand Dictionary with these principles.
References
…………, (2008), லிப்கோ தமிழ் – தமிழ் – ஆங்கிலப் பேரகராதி, சென்னை: லிப்கோ பப்ளிஷர்ஸ்.
இராசாராம் சு. (1992), வீரசோழிய இலக்கணக் கோட்பாடு, நாகர்கோவில்: இராகவேந்திரா பதிப்பகம்.
ஐயப்பன் கா., (2008), பெருந்தேவனாரின் வீரசோழிய உரைத்திறன், மயிலம்: காசி பதிப்பகம்.
கௌமாரீஸ்வரி எஸ்.(பதி.), (2007), தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சென்னை: சாரதா பதிப்பகம்.
கௌமாரீஸ்வரி எஸ்.(பதி.), (2005), தொல்காப்பியம் சொல்லதிகாரம் - இளம்பூரணர் உரை, சென்னை: சாரதா பதிப்பகம்.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.