விமர்சன நோக்கில் அறிஞர் அண்ணாவின் ‘வேலைக்காரி’ நாடகம்

Scholar Anna’s play ‘The Maid’ in Critical Perspective

Authors

  • முருகையா சதீஸ் | Murukaiya Sathees உதவி விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம், இலங்கை. (Assistant Lecturer, Department of Tamil, University of Jaffna, Sri Lanka.)

Keywords:

அறிஞர் அண்ணா, வேலைக்காரி, நாடகம், விமர்சன நோக்கு, Scholar Anna, Maid, Drama, Critical Perspective.

Abstract

ஆய்வுச்சுருக்கம்

விமர்சனம் என்பது இலக்கிய இரசனை மற்றும் மதிப்பீட்டு முறைகளை உள்ளடக்கியதாகும். வாசிப்பின் போது கிடைக்கின்ற அனுபவங்களும் , பொருள்களும், உணர்வுகளும்தான் அதன் அடிப்படையாகும். எனவே விமர்சன அணுகுமுறையில் அண்ணாவின் “வேலைக்காரி” எனும் நாடகத்தைப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அறிஞர் அண்ணா தமிழ் இலக்கிய உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஒரு  படைப்பாளி. சமூக மேல்மட்டங்களை மையமாகக் கொண்டும், அரச மற்றும் இறை சிந்தனையுடைய கருப்பொருள் வெளிப்பாட்டு முறையிலும் நடிக்கப்பட்டு மேடையரங்கேற்றம் செய்யப்பட்டு வந்த நாடக உலகில் சமூகக் கீழ்மட்டப் பிரச்சினைகளையும் கொண்டு வந்து பேசிய பெருமை இவரையே சாரும். சமூகத்தில் நடக்கும் பிரச்சினையின் எதிரொலியாகவே அறிஞர் அண்ணாவின்  வேலைக்காரி எனும் நாடகம் அமைந்துள்ளது. அத்தகைய இவரின் வேலைக்காரி நாடகத்தினை வாசிப்பிற்கு உட்படுத்தி, மதிப்பீடு செய்து, வாசிப்பு அனுபவத்தினை விமர்சிப்புக்கு உட்படுத்தி, சமூகத்தில் இந்நாடகத்திற்குரிய வாசகப்பங்கீட்டை அதிகரித்து அதன் இருப்பினை நிலைநிறுத்திக்கொள்ளும் நோக்கிலேயே இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏழைகளின் கண்ணீரின் வலி, சாதி ஒழிப்பு, போலி வழிபாடு, பணக்கார ஆதிக்கம் என்பவற்றைக் கடுமையாகச் சாடுகிறார். பணம் மட்டுமே வாழ்வு என்று நினைப்பவர்களுக்குப் பணம் இல்லை மனம் கொண்ட வாழ்வுதான் வாழ்வு என்பதனை இந்நாடகத்தின் வழி விளக்குவதில் வெற்றியும் கண்டுள்ளார் என்றே கூறமுடியும். இவ்வாய்விற்கு, முதன்மைத்தரவாக அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி நாடகப் படைப்புப் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரின் அந்நாடகம் சார்ந்த  கட்டுரை நூல்கள் மற்றும் மின்னூடகக் கருத்துக்கள்  போன்றவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

Abstract

Criticism involves literary taste and evaluation methods. It is based on the experiences, objects, and feelings that are available during reading. So the purpose of this article is to look at Anna's play "The Maid" in a critical approach. Scholar Anna is a creator who caused a great revolution in the world of Tamil literature. He is credited with bringing social and grassroots issues to the world of drama, which has been staged with a focus on social upliftment and thematic expression of state and theological thought. Of the problem going on in the community; The echo is in the play Scholar Anna's Maid. The study aims to increase the reader's share of the play in the community by reading, evaluating, and critique the reading experience of the play. He laments the pain of the tears of the poor, caste annihilation, false worship and rich domination. For those who think that money is the only life, it can be said that he has succeeded in explaining the way of this play that life is a life with no mind. For this study, the scholar Anna's maid play has been used primarily. Essays on his play And electronic comments have also been used.

References

Sivathambi, K. (1982). Critical Thoughts. Chennai: Public Release.

Natarajan, T. S. (2003). Thiranaayvuk Kalai. Chennai: New Century Book House.

Annathurai, C. N. (1971). Annavin Naadakankal. Chennai: Parimalam Publishing House.

Scholar Anna. (2009). Maid. Chennai: Barry Publishing.

Scholar Anna. (2010). Maid. Chennai: Gayatri Publications.

https://www.bookmybook.in/product/velaikkari

http://www.annavinpadaippugal.info/annavin_nadagangal.htm

http://www.moolai.com/site/articleview.php?articlepagename=velaikkaari

https://tamil.trendingonlinenow.in/a-view-on-velaikkari-drama-by-c-n-annadurai

Published

26.02.2022

How to Cite

விமர்சன நோக்கில் அறிஞர் அண்ணாவின் ‘வேலைக்காரி’ நாடகம்: Scholar Anna’s play ‘The Maid’ in Critical Perspective. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(29), 152-158. https://inamtamil.com/index.php/journal/article/view/61

Similar Articles

91-100 of 196

You may also start an advanced similarity search for this article.