பொறுமை : கருத்துவிளக்க முறையில் வள்ளுவரும் கபீரும்

Poṟumai: Karuttuviḷakka muṟaiyil vaḷḷuvarum kapīrum

Authors

  • த. சத்தியராஜ் | T.Sathiyaraj தமிழ் - உதவிப்பேராசியர், இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரி, கோவை, தமிழ்நாடு, இந்தியா, 9600370671

Keywords:

அறம், பொருள், இல்வாழ்வு, திருவள்ளுவர், கபீர், இந்திக் கவிஞர், இலக்கியக் கலைஞர்

Abstract

வள்ளுவர் தமிழ்ச் சமூகத்தில் நிகழும் குற்றங்களைக் கடிந்துரைத்தார். இது, கி.பி. முதல் நூற்றாண்டில் நிகழ்ந்த மாபெரும் புரட்சியாகும். அப்புரட்சியை ஒத்த புரட்சிப் பிற்காலத்தே தோன்றியதோ எனின் தோன்றவில்லை என்றே கூற முடியும். அதற்காக நற்கருத்துக்கள் அடங்கிய புரட்சிச் சிந்தனைகளை இலக்கிய அறிஞர்கள் கூறவில்லை என்பது பொருளன்று. திருவள்ளுவர் சிந்தித்த அளவிற்குச் சமுதாயத்தைப் பரந்துபட்ட நோக்குடனும் தொலைநோக்குடனும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. ஏனெனின் மாந்தன் பகுத்தறிவு உடையவனாக வாழ்ந்து காட்டுவதற்கு அறம் வேண்டும் என்கிறார். அவ்வறத்தினைத் திறம்பட செய்வதற்குப் பொருள் வேண்டும். அப்பொருள் நல்வழியில் ஈட்டினால்தான் நல்லறமாக அமையும் என்பதை அடுத்து முன்வைக்கின்றார். அறம் புரிவதற்குப் பொருளாதாரம் மட்டும் போதாது. அதனை முறைப்படிச் செய்வதற்கு இல்வாழ்க்கையே அடிப்படை என்கிறார், இறுதியாக. ஆக ஒரு மாந்தனுக்கு அறம், பொருள், இல்வாழ்வு இம்மூன்றும் அடிப்படையானவை என உலகுக்கு எடுத்துக் கூறியவர் திருவள்ளுவரே. இவரது சிந்தனைகளைப் போன்றே பல்வேறு மொழி இலக்கியக் கலைஞர்களும் முன்வைத்துள்ளனர். அவ்வரிசையில் வரக்கூடிய ஒருவரே இந்திக் கவிஞர் கபீர். இவரும் மாந்தன் பின்பற்ற வேண்டிய சமுதாய அறங்களை எடுத்துக் கூறுகின்றார். இவர் பொறுத்துக் கொள்ளும் பண்பைக் கூறுமிடத்து திருவள்ளுவரிடமிருந்து எங்ஙனம் வேறுபட்டு நிற்கின்றார் என்பதை முன்வைக்கின்றது இக்கட்டுரை. 

References

அறவாணன் க.ப., 2007, திருக்குறள் : தெளிவுரை, சிறப்புரை, விளக்கம், கருத்து, தமிழ்க் கோட்டம், சென்னை.

சக்திதாசன் சுப்பிரமணியன், 2008, கலித்தொகை, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.

சேஷாத்ரி தி.(மொ.ஆ.)., 1992, கபீர் அருள் வாக்கு, சாகித்திய அக்காதெமி, புதுதில்லி.

தேவநேயப் பாவாணர் ஞா., 2009, திருக்குறள் தமிழ் மரபுரை (அறத்துப்பால்), தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.

துரைசாமிப்பிள்ளை ஔவை சு., 2008, நற்றிணை (1, 4), தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.

……………………………., 2008, புறநானூறு (1), தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை.

நீலாம்பிகையம்மையார், 1938, வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.

மாதையன் பெ., 2007, சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.

முத்துரத்ன முதலியார் S., 1990, நாலடியார் உரைவளம் (1,2), சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

ஜகந்நாதராஜா மு.கு., 2005, வஜ்ஜாலக்கம் (வைரப்பேழை), தமிழினி பதிப்பகம், சென்னை.

http://www.muthukamalam.com/muthukamalam_katturai_special1.14.htm

https://sirippu.wordpress.com/2013/03/17/porumai/

http://thannambikkai.org/2014/03/03/18714/

http://www.valaitamil.com/naaladiyar-poraiyudamai_3145.html

http://www.tamilvu.org/slet/l41A0/l4130son.jsp?subid=2424

Published

10.11.2015

How to Cite

பொறுமை : கருத்துவிளக்க முறையில் வள்ளுவரும் கபீரும்: Poṟumai: Karuttuviḷakka muṟaiyil vaḷḷuvarum kapīrum. (2015). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 1(3), 39-45. https://inamtamil.com/index.php/journal/article/view/128

Similar Articles

1-10 of 186

You may also start an advanced similarity search for this article.