கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கை வரலாறு
Keywords:
கவிக்கோலம், கிருஷ்ணமூர்த்தி, வாழ்க்கை, வரலாறுAbstract
இன்று வெண்பா பாடுவதில் ஆசுகவியாய் விளங்கும் கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இனிமை பயப்பதாகும். தமிழ் மொழியின்பால் பேரன்பு கொண்ட கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை நாம் அறிந்துகொள்வது, அவரது நல்ல கவிதைகளை அறிந்து சுவைப்பதற்கு வழிவகுக்கும்.
References
கவிஞரின் தேன்மழையில் சில சொட்டுகள்
உலகமறை பற்றி
உலக பொதுமறை உன்னதம் ஓதும்
நிலமுயர் நூல்கள் நிறைந்து - வலம்வரும்
வல்ல தமிழை உயிரெனக் கொண்டவர்
நல்ல தமிழர் நினை!
தமிழ்வழிக் கல்வி பற்றி
தாய்மொழி கல்வி தலையென எண்ணி
வாய்மொழி விடுத்தே உடனே செயல்பட
வேண்டும் என்று விரும்பி கேட்கிறேன்
மீண்டும் மீண்டும் மொழியவும் வேண்டுமோ?
தன்னம்பிக்கை பற்றி
ஊனம் தடையல்ல உண்டு உயர்வது
வானப் புகழை வளைக்கலாம்-நாணா
சரண்யா உழைத்தார் சரித்திரம் ஆனார்
சிறப்பை உரைத்தல் சிறப்பு!
பொதுத் தொண்டு பற்றி
காற்றதுவும் தனக்காக வருவ தில்லை
கதிரவனும் தனக்காக உதிப்ப தில்லை
ஆறதுவும் தனக்காகச் செல்வ தில்லை
அரும்மழையும் தனக்காகப் பொழிவ தில்லை
வேர்அதுவும் தனக்காக வளர்வ தில்லை
வெள்ளிநிலா தனக்காக ஒளிர்வ தில்லை
ஏரிகளும் தனக்காகப் பிறப்ப தில்லை
ஏன்மனிதா நீமட்டும் தனக்காய் இங்கே?
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.