நற்றிணைப் பாடவேறுபாடுகளினூடாக வரலாற்று மீட்டெடுப்பும் வரலாற்றெழுதுதலும்
Naṟṟiṇaip pāṭavēṟupāṭukaḷiṉūṭāka varalāṟṟu mīṭṭeṭuppum varalāṟṟeḻututalum
Keywords:
நற்றிணைப் பாடவேறுபாடு, நற்றிணை, பாடவேறுபாடு, வரலாறு, வரலாற்று மீட்டெடுப்பு, மீட்டெடுப்பு, வரலாற்றெழுதுதல்Abstract
நமக்குக் கிடைக்கப்பெறும் அகப்புறச் சான்றுகளின் வழியாகப் பண்டுதொட்டு நம் தமிழ்ச்சமூக வரலாறு மீட்டெடுக்கப்பெற்றுக் கொண்டு வருகின்றது என்பதானது சிற்றிதழ்களிலும் சிறுபத்திரிக்கைகளிலும் மட்டுமே சுருங்கிப் போனதொரு பேருண்மை. வரலாறு என்பதும் வரலாறெழுதுதல் என்பதும் கீழிருந்து மேலெழுதல் என்ற தருக்கவடிவினதாக அமைந்திருத்தல் வேண்டும் என்பதே இன்றைய வரலாற்று மறுவாசிப்பாளர்களின் எதிர்பார்ப்பு. அகழ அகழக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பேழைகளை, தொல்லெழுத்துச் சான்றுகளை வெளிக்கொணர விடாமல் அருங்காட்சியகங்களின் தனியறைகளில் பூட்டிவைத்து நுண்அரசியல் செய்யும் இக்கட்டான சூழலில் பரந்துவிரிந்து கிடக்கும் தமிழிலக்கியச் சான்றுகளை இன்னும் சரிவரத் தூசு தட்டாமல் இருப்பது இந்த நிமிடம் வரை நாம் செய்யும் வரலாற்றுத் துரோகம். பண்டுதொட்டு இங்கிருந்த வரலாற்றுத் தொல்லெச்சங்களை மறைத்து எல்லாவற்றையும் தங்களுக்கானதாக அடையாளப்படுத்திப் புராண இதிகாசக் கருத்தாக்கங்களை இந்நிலத்திற்கான ஆதி வரலாறென நம்பவைத்த வரலாற்று மோசடியாளர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியையும் விட்டுவைக்கவில்லை. அவ்வகையில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பெற்ற செவ்விலக்கியப் பிரதிகளை மையமிட்டுப் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் எழுந்த உரைகளினூடாக அமைந்த பாட, உரை வேறுபாடுகளின் நுண்ணரசியலை அடையாளப்படுத்தி வரலாற்றுக் குறிப்புகளை மீட்டெடுப்புச் செய்வது இவ்வாய்வுரையின் நோக்கம். இவ்வாய்வுரைக்கு நற்றிணையின் முதற்பதிப்பான பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் உரையும் 1966, 1968களில் எழுந்த ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை உரையும் முதன்மையாகக் கொள்ளப் பெறுகின்றன. நற்றிணையின் 75, 77 ஆகிய இரு பாடல்கள் மட்டும் இங்கு ஆய்வெல்லையாக அமைகின்றன.
References
*கிருஷ்ணமூர்த்தி இரா., 2005 (ம.ப.), சங்ககாலச் சேரநாணயங்கள் கண்டுபிடிப்பு சில வரலாற்றுச் செய்திகள், கார்னெட் பப்ளிகேஷன், சென்னை.
*கிருஷ்ணமூர்த்தி இரா., 2010 (ம.ப.), சங்ககால மலையமான் நாணயங்கள், கார்னெட் பப்ளிகேஷன், சென்னை.
*துரைசாமிப்பிள்ளை சு., 1966 (மு.ப.), நற்றிணை மூலமும் விளக்கவுரையும், அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை.
*நாராயணசாமி ஐயர் அ., 1915 (மு.ப.), எட்டுத்தொகையுளொன்றாகிய நற்றிணை, சைவவித்யாநுபாலனயந்திரசாலை, சென்னை.
*புலியூர்க்கேசிகன், 1967 (மு.ப.), நற்றிணை, பாரிநிலையம், சென்னை.
*விநாயகமூர்த்தி அ., 1995 (மு.ப.), மூலபாட ஆய்வியல், பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.