இலக்கியம் கற்றலும் கற்பித்தலும் - பன்னோக்குப் பார்வை
Teaching and Learning Literature - Multifaceted view
Keywords:
இலக்கியம், அறிவியல், நம்பிக்கை, படைப்பாளன், Religion, Literature, Science, beliefAbstract
ஆய்வுச்சுருக்கம்
இலக்கியங்கள் பொதுவாக சமகாலச் சூழலைக் கருத்தில் கொண்டே படைக்கப்படுகின்றன. படைப்பாளர்கள் தாம் வாழும் காலத்திய மக்களின் பழக்கவழக்கம், பண்பாடு, சமூகப் பிரச்சினைகள் இவற்றைக் கருத்தில் கொண்டே இலக்கியங்களைப் படைத்து வந்துள்ளனர். அற இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் போன்றவை உலகம் முழுவதிலும் பரவி வாழும் மக்களின் நம்பிக்கைகள் சார்ந்தும் அவர்களின் வாழுமிடத்திற்குத் தகுந்த ஒழுக்கத்தைச் சார்ந்துமே அவ்வப் பகுதிகளில் வாழும் படைப்பாளர்களால் படைக்கப்பட்டு வந்துள்ளன. தற்கால நவீன உலகில் அத்தகு இலக்கியங்களை வாசிப்பதற்கு நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட பொதுவான கண்ணோட்டம் தேவையான ஒன்றாக உள்ளது. எனவே அவ்விலக்கியங்களைப் பிறதுறைகளான அறிவியல், உளவியல், வரலாறு, பொருளாதாரம், சமூகவியல் நோக்கில் மாணவர்களுக்கு வாசிக்கக் கற்றுக் கொடுக்கும்போது அவர்களிடையே கற்கும் ஆர்வம் அதிகரிக்கின்றது. இலக்கியத்தைக் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் இத்தகு பன்னோக்குப் பார்வை அவசியம்; இது தனிமனித நம்பிக்கை கடந்து மாணவர்களை ஆய்வு நோக்கில் அவ்விலக்கியத்தை அணுகச் செய்கிறது என்பதில் ஐயமில்லை. சமய இலக்கியங்கள் எப்பொழுதும் இறைவனை அடையும் பக்திநெறியையே போதிக்கும் என்ற பொதுவான கருத்து நிலவுவதால் அவ்விலக்கியங்களில் உள்ள பிற நல்ல கருத்துக்கள் பெரும்பாலும் அறிந்து கொள்ளப்படாமலேயே உள்ளன. பக்தி இலக்கியத்தைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியரும், கற்றுக்கொள்ளும் மாணவரும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு அந்த இலக்கியத்தை எப்படி அணுக வேண்டும் என்பதைப் பற்றியே இக்கட்டுரை விரிவாக ஆராய உள்ளது.
Abstract
Literature when written reflects the present, taking into account the customs, culture and social issues of the people of the time in which they live. Literators have written moral literatures, religious literatures, community-based folk literatures, etc., which have been written in different parts of the world, depending on the beliefs and morals of the place of residence. In today's modern world reading such literature requires a general outlook beyond one’s personal beliefs. Thereby, when students are taught to read literature in a different perspective, like focusing on other fields such as science, psychology, history, economics and sociology, the interest in learning increases. Such a multifaceted view is essential for learning and teaching literature as it transcends individual beliefs and enables students to approach in that manner for research purposes. This paper explores in detail ways in which a teacher who teaches religious literature and the student who learns it can approach that literature beyond their personal beliefs giving fresh perspective to religion which doesn’t only cater to worship and devotion.
References
கமலக்கண்ணன், இரா. வ (2019), நாலாயிர திவ்வியப் பிரபந்தம், தொகுதி1,2,3,4 வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
தேவி. இரா, (2021) “தேவாரத்தில் ஐம்பெரும் பூதத்து இயற்கை”, ஐம்பெரும் பூதத்து இயற்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு (ISBN 978-93-80426-04-4), பக். 208-215
“தமிழ் இலக்கியம் தொன்றுதொட்டு இன்று வரை’, பகுதி 5, .பக்திக்காலம், Krishnamurti.C.R. Dr.”) தமிழ்நேஷன் வலைத்தளத்திலிருந்து பெறப்பட்டது.
https://tamilnation.org/literature/krishnamurti/05bakthi.htm
பண்டைய தமிழ்ப் பாடல்களில் விஞ்ஞானம், பகுதி 3 of 6, கந்தையா தில்லை விநாயகலிங்கம், (2016, Dec 10) தீபம் வலைத்தளத்திலிருந்து பெறப்பட்டது.
http://www.ttamil.com/2016/12/03-of-06.html
பஞ்சபூதத்தில் அடக்கிய இந்த பிரபஞ்சமும் நம் சாஸ்திர வழிமுறைகளும், பகுதி-2, பார்வதி தேவி, (2019, ஜூன் 4), தினமணி கட்டுரையிலிருந்து பெறப்பட்டது.
https://www.dinamani.com/religion/religion-news
திருமூலர், திருமந்திரம், தமிழ் இணையக் கல்விக் கழக மின்னூல்
http://www.tamilvu.org/ta/library-l4100-html-l41A0res-136137
பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும் மின்னூல், தேவாரம் வலைத்தளத்திலிருந்து பெறப்பட்டது.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=1&Song_idField=1001&padhi=001
வசந்தாள். த, திருமங்கையாழ்வார் தமிழ் இணையக் கல்விக் கழக மின்னூல், பகுதி 5.4.
Downloads
Published
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.