ஜெர்மனிய புகலிடத் தமிழ் இலக்கியத்தில் புலம்பெயர் தமிழ்ச்சமூகம்

Tamil Diaspora Community in German Tamil Diaspora Literature

Authors

  • த.மேகராசா| T.Megarajah Ph.D. Scholar, Department of Language, Arts & Culture, University of Eastern, Sri Lanka.

Keywords:

Tamil Diaspora, Community, Culture, identity

Abstract

அறிமுகம்

காலனித்துவ காலத்திலும் அதற்குப் பின்னரும் இலங்கையிலிருந்து தமிழர்கள் வெவ்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றிருப்பினும் இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிய இனமுரண்பாட்டுச் சூழலே பெருந்தொகையான தமிழர்கள் ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிஸ், நார்வே, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா முதலான பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்லக் காரணமாக அமைந்தது. குறிப்பாக எண்பதுகளுக்குப் பின்னரான இலங்கையின் இனமுரண்பாட்டுச் சூழல் அரசியல் தஞ்சம் சார்ந்த புலப்பெயர்வுக்கு வித்திட்டது. இக்காலப்பகுதியில் மேலோங்கிக் காணப்பட்ட இராணுவ கெடுபிடிகள், அரச படைகளுக்கும் விடுதலை இயக்கங்களுக்கும் இடையிலான சண்டைகள், இடம்பெயர்வுகள், இயக்க முரண்பாடுகள், இவை காரணமாக நடைபெற்ற படுகொலைகள், கடத்தல்கள் வாழ்தலுக்கான சாத்தியப்பாட்டை இல்லாதொழித்தமையால் விரும்பியோ விரும்பாமலோ கூடுதலான தமிழர்கள் புலம்பெயர்ந்து செல்ல வேண்டியேற்பட்டது. மொழி, நிறம், கலாசாரம், காலநிலை, சட்டம், தொழில்முறை என்பவற்றால் மாறுபட்ட புதியதொரு சூழலில் வாழ முற்பட்டோரில் குறிப்பிட்ட சிலர், தமது வாழ்வியல் அனுபவங்களையும், தாயக உணர்வுகளையும் இலக்கியங்களினூடாக வெளிப்படுத்தினர். இத்தகைய இலக்கியங்கள் புகலிடத் தமிழ் இலக்கியம், புலம்பெயர் இலக்கியம், புலச்சிதறல் இலக்கியம் என்று வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இவை ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் புதியதொரு அனுபவத்தினையும் அகல நோக்கினையும் ஏற்படுத்தியதுடன் ஈழத்துத் தமிழ் இலக்கியங்களை மூன்றாம் உலக இலக்கியங்களுடன் ஒப்பிட்டு நோக்குவதற்குரிய வாய்ப்பினையும் வெளிப்படுத்தின. மேலும் தாயகச் சூழலில் மறுதலிக்கப்பட்ட எழுத்துச் சுதந்திரத்தின் எதிரொலியாகவும் இவ்விலக்கியங்கள் அமைந்தன. புகலிட இலக்கியங்கள் புலம்பெயர் சமூகத்தை அறிந்துகொள்வதற்குரிய முக்கிய ஆவணங்களாகவும் உள்ளன.

ஆய்வு நோக்கங்கள்

இக்கட்டுரை ஜெர்மனிய தமிழ்ச்சமூகத்தின் வாழ்வியலை எடுத்துரைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக அகதி வாழ்வுக்கு முகங்கொடுத்தல் முதற்கொண்டு பண்பாட்டுச் சிக்கலை எதிர்கொண்டிருக்கும் நிலை வரையான வாழ்வியலை எடுத்துரைக்க முனைகிறது.

அத்துடன் எதிர்காலத்தில் தமிழர் பண்பாட்டு அடையாளங்களையும் வேர்களையும் மெல்ல மெல்ல இழந்து விடக்கூடிய அபாயத்தையும் சுட்டிக்காட்ட முனைகிறது.

தவிர ஜெர்மனிய தமிழ் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் தமிழ்ச்சமூகத்தை எவ்விதம் பிரதிபலித்து எழுதப்பட்டுள்ளன என்பதை எடுத்துரைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Abstract

This article based on the literature of German diaspora writers and researches about life challenges of Tamil community who migrated from Sri Lanka and lives in German. It researches in analytical, sociological, and descriptive approaches.

In this respect, life issues related to Refugee life, career, culture, education, language and structure of family which were faced by Elam Tamils who tried to live in new environment have been presented. This research insists the situations of elderly people of Tamil diaspora worry about younger generation’s behaviour which is against to Tamil culture in present situation and impossibility of Tamils’ intention which is establishing the identity of Tamils in future. This article strongly says that trend of diaspora literature and their subjects would change in future and Tamil diaspora community which lives without identity is in danger of sinking into the culture of refuge countries.

References

கருணாகரமூர்த்தி, பொ. (2014), பெர்லின் நினைவுகள், காலச்சுவடு பப்ளிகேசன்: சென்னை

கருணாகரமூர்த்தி, பொ. (1996), கிழக்கு நோக்கிச் சில மேகங்கள், ஸ்நேகா: சென்னை

கருணாகரமூர்த்தி, பொ. (1996), ஒரு அகதி உருவாகும் நேரம், ஸ்நேகா: சென்னை

நிருபா, (2005), அச்சாப்பிள்ளை, கொழும்பு: ஈகுவாலிற்றி கிரபிக்ஸ்

பார்த்திபன், (1989), கல்லான கணவன், தூண்டில், ஜெர்மனி

பார்த்திபன், (1989), அத்திவாரமில்லாத கட்டிடங்கள், தூண்டில், ஜெர்மனி

பார்த்திபன், (2017), கதை, சுவிட்சர்லாந்து: தமிழச்சு

பார்த்திபன், (1988), கனவை மிதித்தவன், தூண்டில் சஞ்சிகை, ஜெர்மனி

பார்த்திபன், (1998), ஆண்கள் விற்பனைக்கு, மேற்கு ஜெர்மனி: தென்னாசிய நிறுவனம்

AKM Ahsan Ullah & Asiyah Az-Zahra Ahmad Kumpoh (2019), Diaspora community in Brunei: culture, ethnicity and integration, Diaspora Studies, 12:1, 14-33, DOI: 10.1080/09739572.2018.1538686

Gamlen,A. (2008), The Emigration state and the modern Geopolitical imagination, political Geography,27,no.8:840-856

Ishan Ashutosh (2013), Immigrant protests in Toronto: diaspora and Sri Lanka's civil war, Citizenship Studies, 17:2, 197-210, DOI: 10.1080/13621025.2013.780739

Michaelar.Told., (2014), Identity, Belonging and Political activism in the Sri Lankan Communities in Germany, London: University of East London

Thusinta Somalingam (2015), “Doing-ethnicity” – Tamil educational organizations as socio-cultural and political actors, Transnational Social Review, 5:2, 176-188, DOI: 10.1080/21931674.2015.1053332

Published

10.08.2020

How to Cite

ஜெர்மனிய புகலிடத் தமிழ் இலக்கியத்தில் புலம்பெயர் தமிழ்ச்சமூகம்: Tamil Diaspora Community in German Tamil Diaspora Literature. (2020). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 6(23), 4-18. https://inamtamil.com/index.php/journal/article/view/175

Similar Articles

1-10 of 111

You may also start an advanced similarity search for this article.