பெருங்கற்காலத் தமிழ்ச் சமூகமும் ‘தமிழி’ எழுத்துப் பொறிப்புகளும் (தொல்லியல் களஆய்வை முன்வைத்து)

Paleolithic Tamil community and ‘Tamil’ inscriptions (Presenting Archaeological Survey)

Authors

  • முனைவர் க.பாலாஜி | Dr.G.Balaji தமிழ் - உதவிப்பேராசிரியர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி, கோவைப்புதூர் - 641 042

Keywords:

பெருங்கற்காலம், கி.மு.1000, கி.மு.300, தமிழ்ச் சமூகம், தமிழி, எழுத்துப் பொறிப்பு, தொல்லியல்

Abstract

பெருங்கற்காலம் என்பது கி.மு.1000 - கி.மு.300 வரையிலான காலக்கட்டம். இவ்விடைப்பட்டதான காலக்கட்டத்தில் உலகெங்கிலும் ஒரே விதமான பண்பாடு நிலவியதெனத் தொல்லியல் அறிஞர்கள் தரவுகளை எடுத்துக்காட்டி நிறுவியுள்ளனர்.  தகவல் தொடர்புகளற்ற காலக்கட்டத்தில் கண்டங்கள் தாண்டி இப்பண்பாடு ஓர்மையுடையதாய் அமைந்திருந்தது என்பது வரலாற்றின் வியப்புக் குறியீடு. இனக்குழுப்போர், ஆநிரைகாத்தல், எல்லைப்போர், விலங்குகளோடு சண்டையிடல் என ஏதோவொரு காரணம் கருதி மாண்டு போன ஒருவனுக்கு (வீரன்) அல்லது வயது முதிர்ந்து இயற்கை மரணம் கொண்ட ஓர் இனக்குழுத் தலைவனுக்கு (Tribal leader) அமைக்கப் பெற்ற ஈமச்சின்னங்களாகவே பெருங்கற்காலத் தரவுகள் நமக்குக் கிடைக்கப் பெறுகின்றன.  ஒரு சில தரவுகள் மட்டுமே ஈமச்சின்னங்கள் அல்லாத தரவுகளாகக் கிடைக்கின்றன. பெருங்கற்களால் அமைக்கப் பெற்ற கற்பதுக்கை (cist), கற்குவை (cairn), பரல்உயர் பதுக்கை (cairn circle), கற்கிடை (dolmen), நெடுநிலைக்கல் (menhir), குடைக்கல் (umbrella stone), நடுகல் (Hero stone), முதுமக்கள் தாழிகள் (urns) முதலியனவற்றைப் பெருங்கற்கால ஈமச்சின்னங்களாகத் தொல்லியல் அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.  இப்பெருங்கற்கால நீத்தோர் சின்னங்கள் அமைவிடங்களையொட்டி அமைந்த சில குடியிருப்புப் பகுதிகளும் கண்டறியப் பெற்றுள்ளன. அவற்றிலிருந்து அகழாய்வு செய்யப்பெற்றுக் கொணரப் பெற்ற புழங்கு பொருட்களும் பெருங்கற்காலத் தரவுகளாகக் கருதப்பெறுகின்றன.  அப்பொருட்களில் எழுதப்பெற்றுள்ள எழுத்துப் பொறிப்புகள், கீறல் குறியீடுகள், முத்திரைக் குறியீடுகள் இவற்றைக் கொண்டே அச்சமூகத்தின் வரலாறும், தொன்மையும் கண்டறிந்து எழுதப் பெறுகின்றன. அதனூடாக அவ்வினக்குழுவினரின் இலக்கியப் பிரதிகளும் ஆய்விற்குட்படுத்தப் பெற்றுப் பண்பாட்டு அடையாளங்கள் மீட்டெடுக்கப் பெறுகின்றன. அத்தகைய பெருங்கற்காலத் தொல்லியல் தரவுகளையும் இலக்கியப் பிரதிகளில் அமைந்த தரவுகளையும் ஒப்பிட்டு நோக்கித் தமிழ்ச் சமூகப் பண்பாட்டின் தொன்மையினையும் உண்மை நிலைப்பாட்டினையும் ஆய்வு செய்யும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.  இவ்வாய்விற்குக் கொடுமணல் தொல்லியல் களமும் அங்குக் களஆய்வு செய்யப் பெற்றுக் கிடைக்கப்பெற்ற தரவுகளும் முதன்மைச் சான்றுகளாக அமைகின்றன.

The Stone Age period was BC. 1000 - BC 300 years. Archaeologists have established data showing that a similar culture existed around the world during this period. The astonishing mark of history is that this distinction has become more and more relevant across continents in a time of no communication. We have archaeological data about the persons who sacrifice his life during the war, hunting, and due to aging. They are considered as Hero of that particular region.  We have information in the form of cist, cairn, cairn circle, dolmen, menhir, umbrella stone, Hero stone, urns that have been classified by archaeologists. Some residential areas have recently been found in the vicinity of water bodies. The worm products that have been excavated from them are considered to be large-scale data. The inscription on scratch codes, stamp them out codes and history of communities, ancient detect are written. Thereby the literary copies of the group are retrieved from the study and the cultural identity. The article is aimed at examining the myth and reality of Tamil social culture, comparing such ancient archaeological data with those found in literary texts. The main source of evidence for this approach is the archaeological field and the data available for analysis.

References

இராசமாணிக்கனார் மா., (2008, மு.ப.), கல்வெட்டுகளும் தமிழ்ச்சமூக வரலாறும், சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

இராசவேலு.சு., (2008, மு.ப.), தொல்லியல் சுடர்கள், சென்னை: சேகர் பதிப்பகம்.

இராசவேலு.சு., (2010), “அரிக்கமேடு அகழ்வாய்வு”, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (மலர்), கோவை: தமிழ்நாடு அரசு.

இளங்கோ சி., “பெருங்கற்காலத் தமிழ்ச்சமூகம் தொல்லியல் தரவுகளை முன்வைத்து”, சென்னை: புதிய பனுவல் (தொகுதி : 03).

குருமூர்த்தி, செ., (2010), “பழம்பானைக் குறியீடுகளும் தமிழர் பண்பாடும்”. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை: தமிழ்நாடு அரசு.

மதிவாணன் இரா., “சிந்துவெளித் தமிழ் எழுத்துக்கள்”, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழ்நாடு அரசு, கோவை.

ராஜன் கா., (2010, மு.ப.), தொல்லியல் நோக்கில் சங்ககாலம், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

விசய வேணுகோபால் கோ., “தமிழகத்தின் எழுத்து வழக்கம் அசோகன் காலத்திற்கும் முந்தையது”, சென்னை: மணற்கேணி.

ஸ்ரீதர் தி., (ப.ஆ.), தமிழ்ப்பிராமி கல்வெட்டுகள், சென்னை: தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை.

Published

10.08.2015

How to Cite

பெருங்கற்காலத் தமிழ்ச் சமூகமும் ‘தமிழி’ எழுத்துப் பொறிப்புகளும் (தொல்லியல் களஆய்வை முன்வைத்து): Paleolithic Tamil community and ‘Tamil’ inscriptions (Presenting Archaeological Survey). (2015). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 1(2), 17-25. https://inamtamil.com/index.php/journal/article/view/112

Similar Articles

1-10 of 195

You may also start an advanced similarity search for this article.

Most read articles by the same author(s)