அஹமத் லெப்பை அவர்களின் தலைமைத்துவ பண்புகளும் சமூகம் பற்றிய பார்வையும் The Leadership Qualities of Ahamed Lebbe and His Vision on the Society

Authors

  • எ.எல்.எம். முஜாஹித் | ALM. Mujahid Senior Lecturer, இஸ்லாமிய கற்கைகள் திணைக்களம், கலை மற்றும் கலாச்சார பீடம், கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை Department of Islamic Studies, Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka
  • எம்.எல். முகமது ஹெல்ஃபான் | ML Mohamed Helfan இஸ்லாமிய கற்கைகள் திணைக்களம், கலை மற்றும் கலாச்சார பீடம், கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை Department of Islamic Studies, Faculty of Arts and Culture, Eastern University, Sri Lanka

Keywords:

அஹமத் லெப்பை,, தலைமைத்துவப் பண்பு, மட்டக்களப்பு, தமிழ் - முஸ்லிம், சமூகப்பார்வை

Abstract

ஆய்வுச்சுருக்கம்

தந்தையின் திடீர் சுகயீனம் மர்ஹூம் அஹமத் லெப்பை அவர்களை மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கும் நிலைக்கு வழிவகுத்ததோடு, மாவட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்படவும் துணையாக அமைந்தது. இவ்வகையில் அஹமத் லெப்பை அவர்களின் தலைமைத்துவப் பண்புகளையும் அவர் சமூகத்தின் மீது கொண்ட அக்கரையையும் அதனால் சமூகம் பெற்ற அடைவுகளையும் வெளிக்கொணர்தல் இவ்வாய்வின் நோக்கமாகும். பண்புரீதியில் அமைந்த இவ்வரலாற்றாய்வு முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகளை மையப்படுத்தியதாகும். அஹமத் லெப்பை அவர்களுடன் மிக நெருக்கமுடைய முக்கியஸ்தர்கள் 08 பேரிடம் தொலைபேசி ஊடாக நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு கிடைக்கப்பெற்ற தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. மேலும் இவர் தொடர்பாக வெளியிடப்பட்ட நூல்கள், சஞ்சிகைகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் என்பன மீளாய்வு செய்யப்பட்டன. அதன்படி அஹமத் லெப்பை அவர்கள் தலைமைத்துவப் பண்புகளை தந்தை வழியாக முறையாகப் பெற்றமை, அதனை வளர்ப்பதற்கான அடிப்படைப் தகைமைகளைப் பூர்த்தி செய்தமை, தந்தையின் திடீர் சுகயீனம் சமூகத்திற்கு தலைமைதாங்கும் நிலைக்கு வித்திட்டமை என்பன அஹமத் லெப்பை அவர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான அம்சங்களாகும். 

தீர்மானங்களை மக்களுடன் இணைந்து மேற்கொண்டமை, பிறசமூகத்தவர்களையும் தனது தலைமைத்துவத்தில் இணைத்தமை, சமூகப் பிரச்சினைகளைத் துல்லியமாக ஆராய்ந்து அதற்குரிய தீர்வை பெற்றுக் கொடுத்தமை மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து சமூக சேவையை மேற்கொண்டமை என்பனவும் அவரது தலைமைத்துவ பண்புகளை கோடிட்டுக் காட்டுபவைகளாக அமைந்துள்ளதோடு, இவை அனைத்திலும் அவரது சமூகப் பார்வை வெளிப்பட்டுள்ளது. எனவே, இவர் போன்ற தனிமனித ஆளுமைகளின் தலைமைத்துவத்தின் அவசியம் வலியுறுத்தப்படுவதோடு, அதற்கான முன்னெடுப்புக்கள், வழிகாட்டல்கள் பற்றிய  முன்மொழிவுகளைத் தருவதாகவும், எதிர்காலத்தில் இவ்விடயத்தில் ஆய்வை மேற்கொள்வோருக்கு உதவுவதாகவும் இவ்வாய்வு அமைகிறது.

Abstract

This sudden illness of his father led him to provide a standard of leadership to Batticaloa district Muslim people it was also a pillar to light the bright of their lives. The main objective of this research is the exposure of his leadership qualities, the priority of the superintendent on society, attainment, and achievement of the community due to that. This historical research through the qualitative method is based on primary and secondary data systems. The date of the conversation over the phone call with 8 prominent personalities of his closest friends was carefully analyzed and also the published books, journals, and historical documents related to him were revised and anatomized. According to that the proper acquisition of leadership qualities through the heritage of his father and completion of essential skills to enhance it and unexpected sickness of his father which let him afford the leadership to community significant occurrence in his life. The underpinning of the highlights of his leadership qualities respectively considered as highest effective things such as making decisions together with people comprising of other religious people into his leadership providing adequate solutions after probing social issues and performing social services throughout the social security activities. Social vision has been revealed in all of these. Therefore, the necessity and importance of the leadership of individuals like him are emphasized and also this research is intended to give proposals about initiative guidelines and assist those who desire to research this matter in the future.

References

உசாத்துணைகள்

நூல்கள்

கோபால சிங்கம்> எஸ்., (2005). மட்டக்களப்பு வரலாறு ஓர் அறிமுகம், மட்டக்களப்பு: மனுவேதா.

புஹாரி> எம்.எச்.எம்., அப்துல் ஜவாத்> ஏ.எல்.> மற்றும் சுபைர்> எஸ்.எம்.எம்.> (2004). காத்தான்குடி வரலாறு ஓர் அறிமுகம்> காத்தான்குடி: பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்.

புஹாரி> எம்.எச்.எம்.> (2015). அஷ்ஷஹீத் அஹமத் லெப்பை ஹாஜியார் வாழ்வும் பணியும்> காத்தான்குடி: பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்.

றகுமான்> எம்.ஏ.சி.எ.> இஸ்ஸதீன்> ஏ.எஸ்.> தௌபீக் ஹஸன்> எம்.ஐ.எம்.> மற்றும் ஜஃபர் ஹூஸைன்> ஏ. (2005). ஏறாவூர் வரலாறு> ஏறாவூர்: ஏறாவூர் வரலாற்று ஆய்வு மையம்.

நடராசா> எப். எக். சி.> (2000). மட்டக்களப்பு மான்மியம்> மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவை.

மத்தியு> எஸ். ஏ. ஐ.> (2009). வரலாறு தரும் மட்டக்களப்பு> மருதமுனை: ஜெஸா கிறபிக்ஸ்.

நேர்காணல்கள்

அலியார்> முன்னாள் காழி நீதிபதி, 2021.04.20

அஹமட் லெப்பை மர்சூக்> முன்னாள் தவிசாளர்> 2021.05.30

அ. செல்வம்> சுகாதார மேற்பார்வையாளர்> 2021.05.12

க. தெய்வநாயகம்> விவசாயி> 2021.04.25

குப்பன் கோபால்> வியாபாரம்> 2021.04.20

தௌபீக்> ஓய்வு நிலை ஆசிரியர்> 2021.05.10

முபாரக்> நூலகர்> 2021.04.10

விஸ்வலிங்கம் நாகராஜா> விவசாயி> 2021.04.25

Buhary, M.H.M , Abdul Jawath .A.L and Zubair, S.M.M., (2004), Kattankudy Varalaru or Arimuham, Kattankudy Pallivayalkal Muslim Niruvanankalin Sammelanam

Buhary, M.H.M, (2015), As Shaheed Ahamed Lebbe Hajiyar ValVum Panium, Kattankudy Pallivayalkal Muslim Niruvanankalin Sammelanam.

Kopala singham, S., (2005), Mattakkalappu Varalaru or Arimuham, Mattakkalappu: Manuvetha.

Rahuma, M.A.C.A, Izzadeen A.S., Thowfeek Hasan, M.I.M, and Jahfer Hussain, A, (2005) Eravur Varalaru, Eravur Varalattru Aaivu Maiyam.

Natarasa, F.K.C., (2000), Mattakkalappu Manmiyam, Mattakkalappu Mawatta Kalasarapperawai.

Maththiu, S.A.I, (2009), Varalaru thrum Mattakkalappu, Maruthamunai Jesha Kirapiks.

Published

30.05.2023

How to Cite

அஹமத் லெப்பை அவர்களின் தலைமைத்துவ பண்புகளும் சமூகம் பற்றிய பார்வையும் The Leadership Qualities of Ahamed Lebbe and His Vision on the Society. (2023). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 9(34), 27-34. https://inamtamil.com/index.php/journal/article/view/230

Similar Articles

1-10 of 195

You may also start an advanced similarity search for this article.