மணிமேகலைக் காப்பியத்தில் ‘ஊழ்’, ‘ஊழ்வினை’ : படிநிலை வளர்ச்சி The Hierarchical Development of the concept of 'OOZH' and 'OOZHVINAI' in Manimegalai Epic

Authors

  • முனைவர் மு. முனீஸ்மூர்த்தி | Dr. M. Munees Moorthy Assistant Professor of Tamil, Bishop Heber College, Tiruchirappalli – 620 017. https://orcid.org/0000-0002-7878-0946

Keywords:

ஊழ், ஊழ்வினை, மணிமேகலை, தொல்காப்பியம்

Abstract

ஆய்வுச்சுருக்கம்

    தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் ‘ஊழ்’ எனும் சொல் இடம்பெற்றுள்ளது; ‘ஊழ்வினை’ எனும் சொல் இடம்பெறவில்லை. தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள ஊழ் எனும் சொல்லும் ஊழ்வினைக் கருத்தினை முன்வைக்கும் சமயச்சார்புப் பொருளில் வழங்கப் பெறவில்லை. அச்சொல்லானது ‘முறை’ எனும் இயல்பான பொருளிலேயே கையாளப் பெற்றுள்ளது. தமிழின் தொன்மையான இலக்கியத் தொகுப்புகளான சங்க இலக்கியப் பாடல்களில் ‘ஊழ்’ எனும் சொல் இடம்பெற்றுள்ளது; ‘ஊழ்வினை’ எனும் சொல் இடம்பெறவில்லை. சங்க இலக்கியப் பாடல்களில் இடம்பெற்றுள்ள ஊழ் எனும் சொல்லும் ஊழ்வினைக் கருத்தினை முன்வைக்கும் சமயச்சார்புப் பொருளில் வழங்கப் பெறவில்லை. அச்சொல்லானது ‘முறை’, ‘மலர்தல்’, ‘முதிர்தல்’, ‘உதிர்தல்’ எனும் இயற்கை சார்ந்த பொருளிலேயே கையாளப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழ்க் காப்பிய வரலாற்றில் முதன்மை பெறும் இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தில்தான், முதன்முறையாக ‘ஊழ்வினை’ எனும் சொல் கையாளப் பெற்றுள்ளது. தொடர்ந்து மணிமேகலையிலும் அச்சொல் இடம்பெற்றுள்ளது. மணிமேகலைக் காப்பியத்தில் 7 இடங்களில் ‘ஊழ்’ எனும் சொல் இடம்பெற்றுள்ளது. மேலும், மணிமேகலையில் இடம்பெற்றுள்ள ஊழ் எனும் சொல்லானது தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியப் பாடல்கள் முன்வைக்கும் இயற்கை சார்ந்த (முறை, மலர்தல், முதிர்தல், உதிர்தல் என்பன போன்ற) பொருளில் வழங்கப் பெறாமல், சமயச்சார்புப் பொருளான ‘ஊழ்வினை’ எனும் பொருளிலேயே வழங்கி வந்துள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதுதவிர, வினை எனும் சொல்லும் முன், பின் ஒட்டுக்களுடன் 90 இடங்களில் மணிகேலைக் காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது. வினையின் வகை, வினையின் இயல்புகள், வினைக்குரிய நிலைக்கலன்கள், வினையின் விளைவுகள் பற்றி மணிமேகலைக் காப்பியம் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைக்கின்றது.

காலந்தோறும் சமயவாதிகளும் இறைநம்பிக்கையுடையோரும் முன்வைக்கும் ‘ஊழ்வினை’ எனும் கருத்தாடலானது சிலப்பதிகாரக் காப்பியத்தின் அருவப் பாத்திரம் (உருவமில்லாப் பாத்திரம்) எனக் கூறும் அளவுக்குச் செல்வாக்குப் பெற்ற ஒன்று என்பது அறிவுலகம் அறிந்த ஒன்றே! அதேவேளை, மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெற்றுள்ள ஊழ், ஊழ்வினை குறித்த பதிவுகள் ஆய்வுநிலையில் அதிகம் விவாதிப்புக்கு உட்படுத்தப் பெறவில்லை. எனவே, இத்தகைய கண்ணோட்டத்தில் “மணிமேகலைக் காப்பியத்தில் ‘ஊழ்’, ‘ஊழ்வினை’ : படிநிலை வளர்ச்சி” எனும் இந்த ஆய்வுரை அமைகின்றது.

Abstract

The word 'OOZH' is mentioned in Tolkappiyam, an ancient grammar book of Tamil; The word 'OOZH' does not appear. The word 'OOZH' in the Tolkappiyam is not mentioned in the context of religion. The word has been treated in its natural sense of 'Order'. The Sangam literary hymns, the oldest literary collections of Tamil, contain the word 'OOZH'; The word 'OOZH' does not appear. The word ``corruption'' in Sangam literature is not presented in a religious context that presents the concept of 'OOZH'. The word has been used in the natural sense of 'pattern', 'blooming', 'maturity', 'falling off'.

In this case, it is the first ‘irattai kaappiyangal in the history of Tamil Epic literature It is in Silapathikaram that the word 'OOZHVINAI' is used for the first time. The word is also found in Manimegalai. The word 'OOZH' is used in 7 time in the Manimegalai. Also featured in Manimegalai The word 'OOZH' is presented in Tolkappiyam and Sangam literatures Present in natural (pattern, flowering, maturing, shedding etc.) material Instead of receiving it, they have been giving it in the form of 'life', which is religious Here is a notable one. Also, with affixes before and after the word ‘VINAI’ 90 places in Manimegalai are featured in Kappiyam. Kind the word ‘VINAI’ in Manimegalai about natures, fate, destiny, effects of the ‘VINAI’ The copy is detailed and descriptive.

One of the narrators of Thirukkural, Parimelazhagar, while explaining the official title of 'OOZH'', would mention, "Nyati, oozh, order, method, truth, deity, destiny are all one and the same". Although the word 'Vidhi' is present, the word is not given in ‘VINAI’ concept.

The intellectual world knows that the concept of 'OOZHVINAI' presented by religious people and theists from time to time has become so influential that it is said that it is an invisible character (characterless character) of the bureaucracy! At the same time, the entries of 'OOZH' and 'OOZHVINAI' contained in the Manimegalai file have not been discussed much in the research stage. Therefore, from such a perspective, this research is "The Hierarchical Development of 'OOZH' and 'OOZHVINAI' in Manimegalai Epic".

References

அருணாசலம் ப., (1969), பக்தி இலக்கியம், சென்னை : பாரி புத்தகப் பண்ணை.

சாமிநாதையர் உ.வே. (ப.ஆ.), (2008), மணிமேகலை, சென்னை : டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்.

முனீஸ்மூர்த்தி மு., (2011), தமிழ்ச் செவ்வியல் படைப்புகளில் ஊழ் : கருத்தியல் மாற்றம், காரைக்குடி : தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம்.

லட்சுமணன் கி., (2000), இந்திய தத்துவ ஞானம், சென்னை : பழனியப்பா பிரதர்ஸ்.

Published

28.11.2022

How to Cite

மணிமேகலைக் காப்பியத்தில் ‘ஊழ்’, ‘ஊழ்வினை’ : படிநிலை வளர்ச்சி The Hierarchical Development of the concept of ’OOZH’ and ’OOZHVINAI’ in Manimegalai Epic. (2022). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 8(32), 44-49. https://inamtamil.com/index.php/journal/article/view/212

Similar Articles

1-10 of 194

You may also start an advanced similarity search for this article.