தமிழ் நிகண்டுகள், இலக்கண நூல்களில் மருதநில மக்கள்
Maruthanila people in Tamil Nikands and grammar books
Keywords:
தமிழ், நிகண்டுகள், இலக்கண நூல், மருதநில மக்கள், மருதநில, மக்கள்Abstract
குறிஞ்சி - முல்லை - மருதம் எனத் தமிழ்மக்களின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்ததாக வரலாற்றாய்வாளர்கள் கருதுவர். இம்மருதநில மக்களே படிப்படியான வளர்ச்சி பெற்று உணவு தேடும் வாழ்க்கையிலிருந்து மானிட சமூகத்தை உணவு உற்பத்திக்கு மாற்றியவர்கள். வர்க்கப்பிரிவுகள் தோன்றினும் வேளாண் உற்பத்தி நிலைபெறச் செய்தது இந்நிலப்பரப்பில்தான். காட்டைத் திருத்திக் கழனியாக்கி, ஆற்றைத் திருப்பி நீரைத்தேக்கி குடும்பம் என்ற அமைப்பு உருவாகக் காரணமானதும் அரசு உருவாகக் காரணமாக இருந்ததும் இந்நிலப்பகுதியில்தான். அப்படிப்பட்ட மருதநிலத்தில் எத்தனை வகையான மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை நிகண்டுகள், இலக்கணநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மருதநில மக்கள் பற்றிய குறிப்புக்களை இலக்கியத்தோடு பொருத்திக்காட்டி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
References
ஆறுமுகநாவலர் (ப.ஆ),1969 , சூடாமணி நிகண்டு (மூலமும் உரையும்), திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை-18
கதிர்மகாதேவன் (உ.ஆ.), 2003 (மு.ப), நற்றிணை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.
சண்முகம்பிள்ளை.மு (ப.ஆ),1995 , தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணர் உரை, முல்லை நிலையம், சென்னை.
சுப்பிரமணியன்.ச.வே. (உ.ஆ.), 2003(மு.ப), பத்துப்பாட்டு, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.
புலியூர்க்கேசிகன்(உ.ஆ.), 2004(ம.ப), புறநானூறு (தெளிவுரை) பாரிநிலையம், சென்னை.
செயபால்.இரா. (உ.ஆ.), 2007, அகநானூறு (மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
கோவிந்தராச முதலியார் (உ.ஆ.), 1998, நம்பி அகப்பொருள் விளக்கம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை-18.
சோமசுந்தரனார் பொ.வே. (உ.ஆ.), 2002,2004, புறப்பொருள் வெண்பாமாலை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை-18
--- 2004, நிகண்டுகள் (தொகுப்பு), சாந்தி சாதனா பதிப்பகம், சென்னை.
---1994, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை-18
--- 1934, தமிழ் லெக்சிகன், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.