பாடசாலையின் தரத்தை மேம்படுத்துவதில் டிஜிட்டல் திறனின் பங்களிப்பு தொடர்பாக ஆசிரியர்களது துலங்கல் Concepts of teachers about the contribution of digital skills in improving school quality

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலய கோறளைப்பற்று  கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கனிஷ்ட இடைநிலை வகுப்புப் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அளவை நிலை ஆய்வு. A Survey study based on selected junior secondary schools in Koralaipatu, Kalkudah education zone, Batticaloa District

Authors

  • Kanthasamy Abilash மட்/ககு/அக்குறாணை பாரதி வித்தியாலயம், கிரான், மட்டக்களப்பு, இலங்கை, BT/KK/Akkuranai Bharathy Vidyalayam. Kiran, Batticaloa, Srilanka https://orcid.org/0009-0009-8527-6359

Keywords:

டிஜிட்டல் திறன்,, பயிற்சி, தரமான பாடசாலை, வினைத்திறன், மேம்படுத்தல்

Abstract

சர்வதேச தொழிநுட்ப யுகத்தில் 21ம் நூற்றாண்டுக்கான ஆசிரியர்களது திறன்கள் தொடர்பில் அதிகம் பேசப்படுகிறது. ஆசிரியர்களுக்கான முறையான ICT பயிற்சியுடனான தொழில்முறை மேம்பாடானது தொழில்நுட்பத்தின் ஆற்றல்மிக்க தன்மையைக் கொண்டிருப்பதால் பாடசாலையின் தரத்தையும் மேம்படுத்துகிறது. மட்டக்களப்பு பிரதேசத்தில் ICT ஐ பாடசாலையுடன் இணைப்பதற்கான தரக் குறிகாட்டிகள், ஆசிரியர்களுக்கான பயிற்சித் தேவைகளின் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஆசிரியர்களின் டிஜிட்டல் திறனை மேம்படுத்துவதற்காகப் பாடசாலைகளில் பயிற்சித் திட்டத்தை உருவாக்குவதே ஆய்வின் அடிப்படை நோக்கமாகும். அதற்கிணங்க, “பாடசாலையின் தரத்தை மேம்படுத்துவதில் டிஜிட்டல் திறனின் பங்களிப்பு தொடர்பாக ஆசிரியர்களது துலங்கல்” எனும் தலைப்பில் அமைந்த இவ்வாய்வானது, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிரியர்களின் டிஜிட்டல் திறனை மேம்படுத்துவதற்கான பலம், பலவீனம் மற்றும் சவால்களும் ஆராயப்பட்டு பாடசாலைகளின் தர மேம்பாட்டிற்காகவும், ஆசிரியர்களின் டிஜிட்டல் திறனை(DS) வளர்ப்பதற்காகப் பாடசாலைகளின் தொழில்முறை மேம்பாட்டுத் திட்டத்தை வடிவமைத்தல், செயற்படுத்துதல், மதிப்பீடு செய்தல், ஆசிரியர்களின் டிஜிட்டல் திறனை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் முன்வைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ICT, விளைதிறன் பாடசாலையின் முக்கிய கூறாக அமைவதால் ஒட்டுமொத்த வகுப்பறைகளின் வினைத்திறனான பயன்பாட்டிலும், நடைமுறையில் பாடசாலையின் தரத்தை அதிகரிப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. இவ்வாய்வானது அளவைநிலை ஆய்வாக அமையும் வகையில் தரமான அணுகுமுறைக்கு உட்படுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்தில் உள்ள ஐந்து பாடசாலைகளில் இருந்தும் 05 அதிபர்கள் நோக்க மாதிரி அடிப்படையிலும், ICT பாடஆலோசகர்கள்/ISA 02 பேரும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் படையாக்கப்பட்ட எழுமாற்று மாதிரி அடிப்படையில் 150கனிஷ்ட இடைநிலை (தரம்6-9) ஆசிரியர்களும், படிமுறை எழுமாற்று மாதிரி அடிப்படையில் 120மாணவர்களும், 60பெற்றோர்களும் ஆய்விற்காகத் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து தகவல்களைப் பெறும் வகையில் ஆய்விற்கான தரவுசேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல், ஆவணங்கள் ஆகியன பயன்படுத்தப்பட்டன. மேலும், ஆசிரியர்களிடமிருந்து குழுக் கலந்துரையாடல் மூலமும் தரவுகள் பெறப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றின் மூலமாகப் பெறப்பட்ட தரவுகள் அளவுசார் மற்றும் பண்புசார் தரவுகள் பொருத்தமான SPSS மென்பொருள் முறைகளினூடாக வகைப்படுத்தல், வியாக்கியானம், கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டன.

There is a lot of talk about the skills of teachers for the 21st century in the age of international technology. Professional development with formal ICT training for teachers also improves school quality due to the dynamic nature of technology. The basic objective of the study is to develop a training program in schools to improve the digital competence of teachers based on quality indicators for connecting ICT to school in Batticaloa area, analysis of training needs for teachers. Accordingly, this study titled “Concepts of teachers about the contribution of digital skills in improving school quality” examines the strengths, weaknesses and challenges of improving digital skills of teachers in Batticaloa District and designs, implements and evaluates schools' professional development programs to improve the quality of schools and develop digital skills (DS) of teachers. Doing so was done on the basis of offering suggestions and methods for improving the digital competence of teachers. Thus ICT plays a vital role in the effective use of classrooms as a whole and in increasing the quality of the school as it is a key component of effective schooling. The study was subjected to a qualitative approach as a quantitative study. 05 Principals and 02 ICT Subject Advisors/ISA were selected from five schools in Kalkudah education zone in Batticaloa District based on purposive sampling. Also, 150 junior secondary (grades 6-9) teachers, 120 students and 60 parents were selected for the study based on stratified random sampling and systematic random sampling. Questionnaire, interview and documents were used as data collection tools for the study in order to get information from them. Also, data was collected from the teachers through group discussion and all the selected schools were observed. The data obtained through these quantitative and qualitative data were assimilated into the process of classification, interpretation and discussion through appropriate software SPSS method.

References

Alexander, J.O. (1999). Collaborative design, constructivist learning, information technology Immersion and electronic communities: acasestudy.Interpersonal computing and Technology:An Electronic Journal for the 21stCentury.7,1-2.

UNESCO (2011). Enfoques estratégicos sobre las TICs en educación en América Latina y el Caribe. Retrieved from http://unesdoc.unesco.org/images/0022/002232/223251s.pdf

UNESCO 2013. Enseñanza y aprendizaje: Lograr la calidad para todos (Report 2013/4).Retrieved from http://unesdoc.unesco.org/images/0022/002261/226159s.pdf

Unión Europea (2013). Comprender las políticas de la Unión Europea: Una nueva Revolución industrial. Retrieved from http://europa.eu/pol/pdf/flipbook/es/enterprise_es.pdf

Ali Covello, S. (2010). A review of Digital Literacy Assessment Instruments. IDE-712 Front-End Analysis Research. Analysis for Human Performance Technology Decisions. Syracuse University, School of Education. Retrievedfrom http://idmodule.com/research-on-digital-literacy-assessment-instrumentsfulltext/121

Larraz, V. (2013). La competència digital a la universitat(Doctoral dissertation, Universitat d'Andorra). Retrieved from http://hdl.handle.net/10803/113431

Barron, A. (1998). Designing Web-based training. British Journal of Educational Technology. 29(4), 355-371.

Choline,V.S. (2005). Study of the application of information technology for effective access To resources in Indian universities libraries. The International Information & Library Review. 37(3), 189-197.

Kozma, R. (2005).Nationalpoliciesthatconnect ICT based education reform toeconomic And social development. Human Technology.1(2),117-156

Long, S. (2001). Multimedia in the art curriculum:crossing boundaries.Journal of Art and Design Education.20(3),255-263.

Published

23.05.2025

How to Cite

பாடசாலையின் தரத்தை மேம்படுத்துவதில் டிஜிட்டல் திறனின் பங்களிப்பு தொடர்பாக ஆசிரியர்களது துலங்கல் Concepts of teachers about the contribution of digital skills in improving school quality: மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலய கோறளைப்பற்று  கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கனிஷ்ட இடைநிலை வகுப்புப் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அளவை நிலை ஆய்வு. A Survey study based on selected junior secondary schools in Koralaipatu, Kalkudah education zone, Batticaloa District. (2025). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 11(42), 13-18. https://inamtamil.com/index.php/journal/article/view/281

Similar Articles

11-20 of 202

You may also start an advanced similarity search for this article.