வரலாற்று நோக்கில் இராமநாதபுரம் மாவட்டம் [தமிழகக் குறுநில வேந்தர்களை முன்வைத்து]

Authors

  • சே. முனியசாமி முனைவர்பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

Keywords:

வரலாறு, நோக்கில், இராமநாதபுரம், மாவட்டம், தமிழக, குறுநில, வேந்தர்

Abstract

பாண்டிய நாட்டுத் தொன்மை

தமிழகத்தின் ‘தென்புலம்’ என விளங்கிய ஆட்சிப் பகுதி ‘பாண்டிய மண்டலம்’ என அழைக்கப்பெறுகிறது. பாண்டிய மண்டலத்தைப் பன்னெடுங்காலம் ஆண்ட பாண்டியர்கள், படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வரும் தொல்குடியினர் என வரலாறு புலப்படுத்துகின்றது. இதனைப் பின்வரும் கருத்து விளக்கும்.

வடமொழியாளர் ஆதிகாவியமெனக் கூறும் வால்மீகி இராமாயணத்திலும் கி.மு.நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த காத்யாயனர் நூலிலும் பாணினி வியாகரணத்திற்கு வரைந்த வாத்திகம் என்ற உரையிலும் இலங்கையின் வரலாறு கூறும் பண்டைய நூலான மகாவம்சத்திலும் அசோகப் பெருவேந்தனின் கல்வெட்டிலும் மெக்சுத்தனீசின் குறிப்புகளிலும் காணப்பெறும் பாண்டியர் குறித்த செய்திகள் அவர்தம் தொன்மையை மெய்ப்பிக்கும் (தமிழ்நாட்டு வரலாறு பல்லவர் - பாண்டியர் காலம், 1990:401).

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டைப் ‘பாண்டிய நாடே பழம் பதி’ எனக் கூறுகின்றார். இப்பாண்டிய நாட்டில் தமிழ்மொழி செழித்து வளரப் பலர் பங்காற்றியுள்ளனர். அதனால் ‘செந்தமிழ் நாடு’ என்றும் அழைக்கப்பட்டது.

References

அண்ணாமலை பழ., செட்டிநாடு ஊரும் பேரும், 1986, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.

அமிர்தகவிராயர், ஒருதுறைக்கோவை, 1977, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

இராகவையங்கார் ரா., தமிழகக் குறுநில வேந்தர்கள், 1994, பாரதி பதிப்பகம், சென்னை.

உ.வே.சா., ஐங்குறுநூறு பழைய உரை, 1957.

கமால் எஸ்.எம்., சேதுபதி மன்னர் வரலாறு, 2003.

கமால் எஸ்.எம்., முகம்மது செரீபு.நா., இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள், 1984, பாரதி அச்சகம், மானாமதுரை.

கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள், (பிற குறிப்புகள் இல்லை)

புலனத்தகவல்.

தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு, தமிழ்நாட்டு வரலாறு (பல்லவர்-பாண்டியர் காலம்), 1990, தமிழ்நாடு அரசு வெளியீடு, சென்னை.

மணிமாறன், தமிழ் ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி I, 2016, சரசுவதி மகால் நூலகம், தஞ்சை.

மனோகரன் மீ., கிழவன் சேதுபதி, 2012, அகரம் பதிப்பகம், தஞ்சாவூர்.

Published

10.05.2017

How to Cite

சே. முனியசாமி ச. ம. (2017). வரலாற்று நோக்கில் இராமநாதபுரம் மாவட்டம் [தமிழகக் குறுநில வேந்தர்களை முன்வைத்து]. இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies), 3(9), 47–61. Retrieved from https://inamtamil.com/journal/article/view/187