தமிழ் ஆராய்ச்சி மரபில் பதினெண் கீழ்க்கணக்கு

Authors

  • முனைவர் ப.திருஞான சம்பந்தம் முதுமுனைவர் பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21.

Keywords:

தமிழ், ஆராய்ச்சி, மரபில், பதினெண் கீழ்க்கணக்கு, சோமசுந்தர தேசிகர், துடிசை கிழார் அ.சிதம்பரனார், ச.வையாபுரிப்பிள்ளை, மயிலை சீனி.வேங்கடசாமி

Abstract

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த ஆய்வுகள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க கட்டங்களில் விரிவாக முன்னெடுக்கப் பட்டுள்ளன. இவ்வாராய்ச்சியை முன்னெடுத்ததில் சி.வை.தா., உ.வே.சா. நாராயண சரணர், ரா.இராகவையங்கார், திருமணம் செல்வகேசவராய முதலியார், கா.ர.கோவிந்தராச முதலியார் உள்ளிட்ட செவ்விலக்கியப் பதிப்பாசிரியர்களுக்குத் தனித்த இடம் உண்டு. இதன் தொடர்ச்சியில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இவைதாம் என்ற தெளிவான கருத்து முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்துள்ளனர். சிலர் இம்முடிவுகளுக்கான தொடக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இவ்விரு நிலைப்பட்ட ஆய்வுப் புள்ளிகளை இணைத்து உரையாடுவதாக இக்கட்டுரை அமைகின்றது. குறிப்பாக இவ்விரு வகைப்பட்ட ஆராய்ச்சி முறையியலை முன்னெடுத்தவர்களாகத் திருவாரூர் சோமசுந்தர தேசிகர், துடிசை கிழார் அ.சிதம்பரனார், ச.வையாபுரிப்பிள்ளை, மயிலை சீனி.வேங்கடசாமி ஆகியோரைக் குறிப்பிடலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த இவர்களது ஆய்வுகள் தொடக்ககால முயற்சிகளை அடியொற்றிச் சென்றாலும்  குறிப்பிடத்தக்க சில ஆய்வு முடிவுகளைக் கண்டறிந்துள்ளன. முந்தைய பதினெண் கீழ்க்கணக்கின் பதிப்பாசிரியர்கள் சிலரிடம் காணப்பட்ட கருத்தியல் ரீதியான குழப்பங்கள் இவர்களிடத்தும் காணப்படுகின்றன. அதாவது கைந்நிலையைப் பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாகச் சேர்ப்பதா, அல்லது இன்னிலையை ஏற்பதா?. இவ்வகையான விவாதங்களைச் சோமசுந்தர தேசிகர், துடிசை கிழார் அ.சிதம்பரனார் ஆகிய இருவரிடத்தும் காணலாம். இவ்விருவர்களில் சோமசுந்தர தேசிகர் இன்னிலையை ஏற்றுக்கொள்ளபவராக இருப்பதை அவரது கருத்துகள் தெளிவுபடுத்துகின்றன. இவர்கள் இருவரிலிருந்து சில தெளிவான முடிவுகளை முன்வைத்தவர்களாகச்  ச.வையாபுரிப்பிள்ளை, மயிலை சீனி.வேங்கடசாமி ஆகிய இருவரையும் அடையாளப்படுத்தலாம்.

References

நல்லந்துவனார் கலித்தொகை, மதுரை பாரத்துவாசி நச்சினார்க்கினியர் உரை, பதிப்பாசிரியர்:சி.வை.தாமோதரம் பிள்ளை, Printed at the Scottish Press, by Graves, Cookson And Co, Madras.

அறுகால் சிறுபறவை பெருவாயின் முள்ளியார் அருளிச் செய்த ஆசாரக்கோவை, தி.செல்வகேசவராய முதலியார், இரண்டாம் பதிப்பு, மதராஸ் ரிப்பன் பிரஸ்.

எட்டுத்தொகையில் மூன்றாவதாகிய ஐங்குறுநூறும் பழையவுரையும், பதிப்பாசிரியர்: உ.வே.சாமிநாதையர், வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னப்பட்டணம்.

சுவாமிநாத தேசிகர். இலக்கணக்கொத்து மூலமும் உரையும், பதிப்பாசிரியர்: தி.வே.கோபாலையர், சரசுவதி மகால் நூல்நிலையம், நான்காம் பதிப்பு, தஞ்சாவூர், (முதல்பதிப்பு 1864).

செந்தமிழ் தொகுதி.24, பகுதி.3, சனவரி - பிப்ரவரி.

ஐந்திணையெழுபதும் கைந்நிலையும் பழையவுரையுடன், பிரயோக விளக்கமும் பதிப்பும்: இ.வை.அனந்தராமையர், நோபில் அச்சுக்கூடம், சென்னை.

திரிகடுகமும் சிறுபஞ்சமூலமும் (பழையவுரையுடன்), பதிப்பாசிரியர்:ச.வையாபுரிப்பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 21, பரல் -3.

எஸ்.வையாபுரிப்பிள்ளை, இலக்கிய மணிமாலை, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, முதற்பதிப்பு (இரண்டாம் பதிப்பு 1957, (மூன்றாம் பதிப்பு 1964).

வேம்பத்தூர் முத்துவேங்கடசுப்ப பாரதியார் (1849), பிரபந்த தீபிகை, பதிப்பாசிரியர்கள்: ச.வே.சுப்பிரமணியன், அன்னிதாமசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

எஸ்.வையாபுரிப்பிள்ளை, இலக்கியச் சிந்தனைகள் (முதல் தொகுதி), வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம், இன்ஸ்டிடியூட் ஆப் சவுத் இண்டியன் ஸ்டடீஸ், இரண்டாம் பதிப்பு, சென்னை (முதல் பதிப்பு 1989).

மயிலை சீனி.வேங்கடசாமி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் (1800-1910), பரிசல் புத்தக நிலையம், சென்னை, முதல் பதிப்பு 1969.

Published

10.05.2017

How to Cite

தமிழ் ஆராய்ச்சி மரபில் பதினெண் கீழ்க்கணக்கு. (2017). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 3(9), 15-27. https://inamtamil.com/index.php/journal/article/view/153

Similar Articles

1-10 of 186

You may also start an advanced similarity search for this article.