புதுக்கவிதை : இலக்கண வரையறை உருவாக்க முயற்சிகள்
Keywords:
தமிழ்க் கவிதைமரபு சங்க காலம், சங்க மருவிய காலம், பக்தி இயக்கக் காலம், காப்பியக் காலம், பிரபந்தக் காலம், தற்காலம்Abstract
தமிழ்க் கவிதைமரபு சங்க காலம், சங்க மருவிய காலம், பக்தி இயக்கக் காலம், காப்பியக் காலம், பிரபந்தக் காலம், தற்காலம் என நீண்ட வரலாற்றைக் கொண்டு திகழ்கிறது. இவ்வரலாற்றைப் பார்க்கும்போது காலந்தோறும் கவிதையில் நிகழ்ந்துள்ள உருவ - உள்ளடக்க மாறுதல்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். சங்ககால கவிதைகள் ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடலையும், சங்க மருவிய காலக் கவிதைகள் வெண்பாவையும், காப்பியக் கால கவிதை, பத்தி இலக்கியக் கால கவிதை, பிரபந்த இலக்கியக் கால கவிதை முறையே தொடர்நிலைச் செய்யுள், விருத்தப்பா மற்றும் அனைத்துப் பாவகைகளையும் அதன் இனங்களையும் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கால மாற்றத்திற்கேற்பத் தமிழ்க்கவிதை வடிவத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின் பல மாற்றங்கள் தமிழ்ச் சூழலில் நிகழ்ந்தன. இம்மாற்றம் தமிழ்க்கவிதை அமைப்பிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலைத்தேயக் கவிதையிலாளர்களான வால்ட் விட்மன், எஸ்ரா பவுண்டு, டி.எஸ். எலியட் முதலியோரின் புதிய முயற்சிகள் தமிழ்க்கவிதை மரபிலும் அதன் பாதிப்பை உண்டாக்கின. இந்தப் பின்புலத்தில் வசன கவிதை, புதுக்கவிதை தோற்றம் பெற்றன. தமிழில் முதல் வசன கவிதை முயற்சியாகப் பாரதியாரின் காட்சிகள் கவிதையைக் குறிப்பிடலாம். பாரதி பல்வேறு யாப்பு வடிவிலான கவிதைகளை எழுதினாலும் அவ்வப்போது நிகழும் புது முயற்சிகளையும் தம் கவிதை வடிவத்தில் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார்.
பாரதியைத் தொடர்ந்து மணிக்கொடி பரம்பரை, எழுத்து பரம்பரை, வானம்பாடி பரம்பரை என மூன்று பரம்பரைகள் தோன்றின. இம்மூன்று பரம்பரையைச் சேர்ந்த கவிஞர்கள் - எழுத்தாளர்கள் புதுக்கவிதையை வளர்த்தெடுக்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இம்முயற்சிகளின் வழிப் புதுக்கவிதை பல பரிமாணங்களை அடைந்தது.
References
அரங்கராசு, தமிழ்ப் புதுக்கவிதைத் திறனாய்வு, சென்னை, 1987.
இராஜேந்திரன், புதுக்கவிதை இலக்கணம், சென்னை, 2005.
கந்தசாமி, சோ.ந., தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் முதற்பாகம் - முதல் தொகுதி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1989.
சரவணத்தமிழன்,ச., யாப்பு நூல் (பாவும் உரையும்), இயற்றமிழ்ப் பயிற்றகம், திருவாரூர், 1981.
செல்லப்பா,சி.சு., தமிழில் இலக்கிய விமர்சனம், எழுத்து பிரசுரம், சென்னை, 1984.
ஞானக்கூத்தன், கவிதைக்காக, மதி நிலையம், சென்னை, 2002.
தொல்காப்பியர், தொல்காப்பியம் செய்யுளியல் உரைவளம், க.வௌ;ளைவாரணன் (ப.ஆ.), மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, முதற்பதிப்பு, 1989.
மணி, சி. யாப்பும் கவிதையும், சந்தியா பதிப்பகம், சென்னை, 2006.
மணிகண்டன், ய., தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி, விழிகள் பதிப்பகம், சென்னை, 2001.
ரத்தினமூர்த்தி, வெ., தொல்காப்பியப் புதுக்கவிதையியல், சென்னை, 1998.
ராஜமார்த்தாண்டன், புதுக்கவிதை வரலாறு, தமிழினி, சென்னை, 2002.
வல்லிக்கண்ணன், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரிநிலையம், 2009.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.