இலங்கை முஸ்லிம் கிராமியப் பெண்களின் துன்பியல் 'கவி'கள்: சமூக, உளவியல் நோக்கு

Tragic ‘Kavi’ of Sri Lankan Muslim Village Womens: Social and Psychological view

Authors

  • கலாநிதி சி. சந்திரசேகரம் | Dr.S.Santhirasegaram தலைவர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

Keywords:

Kavi, Ritual communication, Tragic, Tradition

Abstract

அறிமுகம்

கவி என்னும் சொல் பாடல் அல்லது கவிதைகள் அனைத்தையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாக இருப்பினும், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியப் பாடல் வகைகளில் ஒன்றைக் குறிக்கும் சிறப்புச் சொல்லாக வழங்குகிறது. இக்கவிகளில் கணிசமானவை காதல் சார்ந்தவையாகும். இதன் காரணமாகப் பலரும் கவியைக் காதலை வெளிப்படுத்தும் பாடல்வடிவமாகக் கருதி வந்துள்ளனர். ஆயினும், கிழக்கிலங்கை முஸ்லிம்கள் மத்தியிலே காதல் சாராத பொருளை உள்ளடக்கமாகக் கொண்ட ஏராளமான கவிகள் வழக்கில் உள்ளன. அந்த அடிப்படையில் அது பொருள் அடிப்படையிலன்றி வடிவ அடிப்படையிலேயே ஏனைய பாடல் வகைகளில் இருந்து வேறுபடுகிறது என்பார் எம். ஏ. நுஃமான் (1980: 131).

நான்கு வரிகளைக் கொண்ட கவி, ஈரடிக் கண்ணி அமைப்புடையது. அதாவது, ஈரடி இசையமைப்பு வாய்பாட்டைக் கொண்டது. கவிகள் உயர் தொனியுடன் பாடப்படுபவை. அவை பெரும்பாலும் கூற்றுமுறையாகவும் மாறுந்தரமாகவும் அமைவன, உரையாடல் தன்மையில் வருவன.

கவிகளின் வடிவ இறுக்கம், உள்ளுறைப் படிமம், குறியீட்டுத் தன்மை, இதமான இசைப்பண்பு முதலான சிறப்புக்கள் காரணமாக உணர்வுகளை உருக்கமாகவும் ஆழமாகவும் புலப்படுத்துவதற்குச் சிறந்ததொரு வடிவமாகக் கவி வடிவம் கையாளப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, பிற்காலத்திலே சற்று எழுத்தறிவுள்ள முஸ்லிம் கிராமிய மக்கள் சமூக நிகழ்வுகள், பிரச்சினைகள் பற்றிப் பாடுவதற்குக் கவி வடிவத்தைக் கையாண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தகைய கவிகள் பெண்களால் அதிகம் பாடப்பட்டுள்ளன என்பது கள ஆய்வின்மூலம் அறியப்பட்டது.

ஆய்வுச் சிக்கல்

கவிகள் பாவனையான காதல் உணர்வுகளைக் கூறுவன, பெரும்பாலும் ஆண்களால் பாடப்பட்டவை என்பது பொதுவான கருத்தாகும். கவி வடிவம் ஒரு மகிழ்வளிப்புக்கான வடிவமாகவே நோக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இக்கவிகளில் ஒரு பகுதி பாவனையற்ற வகையில் சொந்தப் பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்ற – அவற்றிற்கு முகங்கொடுத்த பெண்களால் பாடப்பட்டவையாக உள்ளன. அந்தக் கவிகள் ஊடாகத் தொடர்பாடல் கொள்ளும் மரபொன்று இருந்து வந்திருக்கின்றது. ஆயினும், இந்தப் பண்பாட்டு மரபு மறைக்கப்பட்டுள்ளது.

ஆய்வு நோக்கம்

கிழக்கிலங்கை முஸ்லிம் பெண்கள் தமது சொந்த வாழ்வில் அனுபவித்த பிரச்சினைகள், துயரங்களில் இருந்து விடுபடுவதற்கு அல்லது மன அழுத்தங்களைப் போக்குவதற்குக்  கவிகளை எவ்வாறு ஊடகமாகப் பயன்படுத்தினர் என்பதையும் சமூகத்திலே பெண்கள் எத்தகைய பிரச்சினைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் முகம்கொடுத்து வந்துள்ளனர் என்பதையும் வெளிப்படுத்துவது இவ்வாய்வின் நோக்கமாகும்.

Abstract

‘Kavi’ is the one kind of folk Songs of Eastern Sri Lankan Muslims. Most of the Kavis were sung by women. Specially it is a tradition in Muslim community when the women face the problems and tragedies, they create and sing as Kavis and convey them to the persons who cause the problems. The women conduct this type of ritual communication when they abandoned by men, neglected by their children, separated from their children and being childlessness. Due to written by affected women, their mood is exposed in these Kavis.

They have fabricated and sung the Kavis as a way of relief from life issues which they faced. They are trying to get mental comfort through fabricating their tragedies as Kavi and singing in solitude or send those Kavis to the persons who cause the tragedies. The purposes of this communication were sharing the tragedies with others, get mental comfort by sharing and solve the conflict.

References

துணைநின்றவை

உதுமான் ஸாஹிப்,எம்.வை. (தொகு.), 2006, கிழக்கிலங்கை முஸ்லிம் கிராமியக் கவிகள், அக்கரைப்பற்று: முஹம்மது அப்ராஸ் வெளியீட்டகம்.

நுஃமான்,எம்.ஏ., 1980, 'கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கை முறைகளும் நாட்டார் வழக்குகளும் ஒரு பயன்நிலை ஆய்வு', சிவத்தம்பி,கா.,(பதி.), இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்கியல், யாழ்ப்பாணம்: தமிழ்த்துறை வெளியீடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

யோகராசா,செ., (தொகு.), 2002, ஈழத்து வாய்மொழிப் பாடல் மரபு, திரிகோணமலை: பண்பாட்டுத் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சு.

Esta, Powell, n.d., Catharsis in Psychology and Beyond: A Historic Overview, http://primal-page.com/cathar.htm.

கையெழுத்துப் பிரதிகள்

முஸ்லிம் வயோதிபப் பெண்ணின் மகள், 1991, ராத்தாவுக்கு எழுதிய கவிகள்.

முஸ்லிம் வயோதிபப் பெண், 1991, மூத்த மகளுக்குப் பாடிய கவிகள்

……………… .1991, இளைய மகளுக்குப் பாடிய கவிகள்.

றஹ்மத்தும்மா,எம்.எச்.எம்., 2000, அஷ்ரப் ஒப்பாரி.

Published

10.08.2020

How to Cite

இலங்கை முஸ்லிம் கிராமியப் பெண்களின் துன்பியல் ’கவி’கள்: சமூக, உளவியல் நோக்கு: Tragic ‘Kavi’ of Sri Lankan Muslim Village Womens: Social and Psychological view. (2020). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 6(23), 32-45. https://inamtamil.com/index.php/journal/article/view/177

Similar Articles

11-18 of 18

You may also start an advanced similarity search for this article.