ஆலயங்களில் ஐந்தின் பங்கு

Ālayaṅkaḷil aintiṉ paṅku

Authors

  • மா.சிதம்பரேஸ்வரர் | M. ChidamparesVarR கௌரவ உதவிப்பேராசிரியர், கட்டடக்கலைத் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

Keywords:

ஆலயங்களில், ஐந்தின் பங்கு, பங்கு, ஐந்தின்

Abstract

ஆலயங்களில் ஐந்தின் பங்கு என்ற தலைப்பில் ஐந்து என்பது ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் ஆகும். ஆதிகாலத்தில் மிருகங்களை வேட்டையாடி வாழ்ந்து கொண்டிருந்த மனிதன் காலப்போக்கில் மிருகங்களை நண்பனாக்கி, பிறகு தெய்வமாக்கி வணங்கத் தொடங்கினான். நாகரிகத்தின் வளர்ச்சியால் கோயில்கள் உருவாகத் தொடங்கின. கோயில்கள் மூலம் இயல் இசை நாடகம் மட்டுமல்லாமல் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை மாபெரும் வளர்ச்சி பெற்றது. சங்ககாலம் பல்லவர்காலம் சேர, சோழ, பாண்டியர் காலம் நாயக்கர்காலம் என அத்துனை மன்னர்கள் காலத்திலும் கட்டிய ஆலயங்களில் விலங்குகளின் சிற்பம் அதிக அளவில் காணக்கிடைக்கின்றன. பாம்பைப் பார்த்துப் பயந்தவன் அதற்குச் சிலைகள் வைத்தான். பல்லியைப் பார்த்து சகுனம் பார்த்தவன் பாவுக்கல்லில் சிலை வடித்தான். எருமையை எமனுக்கு வாகனம் ஆக்கினான். மயிலைச் சுப்ரமணியனுக்கு வாகனமாக்கினான். எலியை விநாயகருக்கும் புலியை ஐயப்பனுக்கும் சிங்கத்தை அம்மனுக்கும் யானையை இந்திரனுக்கும் பசுவை பரமனுக்கும் கழுகை கருடனாக்கி பெருமாளுக்கும் வாகனமாக்கினான். குரங்கை அனுமனாக்கினான். உலகின் பண்டைய பண்பாட்டினைத் தாங்கி நிற்கின்ற முக்கிய நாகரிகங்களான எகிப்து மெசபடோமியா சீன நாகரிகங்களுக்கு இணையான நாகரிகமாகச் சிந்துசமவெளி நாகரிகத்தில் கிடைத்துள்ள நாணயங்கள் சின்னங்கள் சிலைகள் அனைத்திலும் விலங்குகளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளன. சிந்துசமவெளி நாகரிகம் நகரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு மாறாக வேதகாலப் பண்பாடு கிராமம் மேய்ச்சல் நிலம் இவற்றைச் சார்ந்திருந்தது. சிந்துவெளி இலச்சினைகளில் பல விலங்கினங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. ஆனால் குதிரை மட்டும் அவற்றில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலச்சினைகளின் சித்திரப்பதிவுகள் வெளிப்படுத்தும் சிந்து சமயம் என்பது எருமைக்கொம்பு அணிந்த ஆண்தெய்வம், தாய்த்தெய்வங்கள், அரசமரம், பாம்பு மற்றும் லிங்கச் சின்னம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இத்தகைய வழிபாட்டு முறைகள் இந்து சமயத்தில் ஆதிக்குடிகளின் வழிப் பெறப்பட்டவை. சிந்து சமயம் ரிக்வேதம் காட்டும் சமயத்திற்கு முற்றிலும் அன்னியமானது. இப்பகுதிகளில் கிடைக்கும் முத்திரைகளில் காட்டெருமையும் திமிலுடைய எருதும் மீன்களின் சின்னமும் கிடைத்துள்ளன. ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றிலும் நிலத்திற்குத் தகுந்த இயற்கைச் சூழலில் வாழ்ந்த விலங்குகள் பற்றிச் சங்க இலக்கியங்கள் எடுத்துரைத்துள்ளன. மனித உடலும் விலங்குகளின் தலையும் அல்லது மிருக உடலும் மனிதத் தலையும் கலந்து அதிகமான உருவங்கள் கிடைக்கின்றன.

References

பாறை ஓவியங்கள் -இராசு.பவுன்துறை மெய்யப்பன் பதிப்பகம்

அர்ச்சுனன் தபசு - சா.பாலுசாமி காலச்சுவடு பதிப்பகம் டிசம்பர் - 2009

கலையியல் ரசனைக் கட்டுரைகள் - குடவாயில் பாலசுப்பரமணியன் அகரம் பதிப்பகம் - 2014

ஸ்ரீதத்துவநிதி - ராஐஸ்ரீ கிருஷ்ணராஐமஹாராஜ அவர்களால் இயற்றப்பட்டது. ஸ்ரீரங்கம் ஸ்ரீவாணி விலாஸ பதிப்பகம்

Published

10.02.2017

How to Cite

ஆலயங்களில் ஐந்தின் பங்கு: Ālayaṅkaḷil aintiṉ paṅku. (2017). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 2(8), 90-96. https://inamtamil.com/index.php/journal/article/view/173

Similar Articles

151-160 of 194

You may also start an advanced similarity search for this article.