மகளிர் வா்ணனைவழி மிதவை மகளிரின் சமூகநிலை
Women's Vocabulary Float Social status of women
Keywords:
மகளிர், வா்ணனை, மிதவை, மகளிரின், சமூகநிலைAbstract
பெண்களின் தோற்றப் பொலிவினையும் உறுப்பு நலனையும் உவமை கூறிப் புனைந்துரைப்பது மரபு. காதலா் இன்பத்துக்கு ஏதுவாகும் கூற்றுக்களில் நலம்புனைந்துரைத்தல் சிறந்ததொன்று தலைவியினுடைய கண், முகம், இடை, அடி முதலிய உறுப்புகளின் அழகைத் தலைவன் பாராட்டிக் கூறுவான். சங்க இலக்கியத்தில் இத்தகைய பாடல்கள் பல காணக்கிடைக்கின்றன. இவைதவிர அரசமகளிர் பற்றிய வருணனைப் பகுதிகளும் மிதவை மகளிர் பற்றிய வருணனைப் பகுதிகளும் இடம் பெறுகின்றன.
ஏவல் மகளிர் வருணனைகள் இடம்பெற்றிருந்தாலும் அவை மிக அரிதாகவே (பொருநா் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு) இடம்பெறுகின்றன. மேற்குறித்த வா்ணனைகளின் வழி மிதவை மகளிர் பற்றிய சமூக நிலையை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
References
தாணம்மாள் இல., சங்க இலக்கியத்தில் மலா்கள் வானதி பதிப்பகம், சென்னை, டிசம்பா் 1981 (முதற்பதிப்பு).
பாலசுப்பிரமணியன் சி., சங்க கால மகளிர் நறுமலர்ப் பதிப்பகம், பாரிநிலையம், சென்னை, டிசம்பா் 1983 (முதற்பதிப்பு).
புலியூர்க் கேசிகன், தொல்காப்பியம், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை, சூன் 2010 (முதற்பதிப்பு).
மாயாண்டி இரா., சங்க இலக்கியத்தில் கற்பனை, எழிலகம், சென்னை, 1980 (முதற்பதிப்பு).
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.