சங்கஇலக்கியத்தில் தாய்வழிச்சமூகக் கூறுகள்

Caṅka'ilakkiyattil tāyvaḻiccamūkak kūṟukaḷ

Authors

  • முனைவர் ஆ.சாஜிதா பேகம் | Dr. A. Sajeetha Beham உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நவரசம் கலை அறிவியல் மகளிர் கல்லூரி, அறச்சலூர், ஈரோடு மாவட்டம்.

Keywords:

தாய்வழி, சங்கஇலக்கியத்தில், சமூகக் கூறுகள், கூறுகள், தாய்வழிச்சமூக

Abstract

சங்க இலக்கிய நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் சங்ககாலப் பெண்களின் தலைமை சான்ற இருப்புநிலையை நம் புலவர்கள் பதிவுசெய்துள்ளனர். தாய்வழிச்சமூகத்தில் மேற்கொண்ட இயற்கை வழிபாட்டில் பெண் முதன்மைப்படுத்தப்பட்டதும், பெண் தெய்வ வழிபாடுகளும், அத்தெய்வங்களுக்குரிய இயல்புகளும் பெண்ணின் சிந்தனையைப் பரந்துபட்ட நோக்கமாகக் காட்டியுள்ளன. தந்தைவழித் தலைமையில் நிலவுடைமைச் சமுதாயத்தின் தோற்றம் பெற்ற காலங்களிலும், பொதுவுடைமைச் சிந்தனையோடு திகழ்ந்த பெண்களின் தன்னியல்பு தெய்வத்தை முதன்மையாக வழிபட வைத்து, அவற்றுக்கான சடங்குகளில் அவளை ஈடுபடுத்தி ஆணைச் சார்ந்து வாழும் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டதனை அறிய முடிகின்றது. தந்தைவழிச் சமூகத்தில் அகவாழ்க்கையிலும், புறவாழ்க்கையிலும் சமூகக்கட்டமைப்புக்கு ஏற்ப தனது இருப்பை நிலைப்படுத்தியும், நிறைவு செய்தும் வாழ்ந்த பெண்களின் அடையாளங்கள் தாய்வழிமரபின் எச்சநிலைக் கூறுகளாக அமைந்துள்ளன என்பதற்குச் சங்கப்பாடல்கள் சான்று பகர்கின்றன. அத்தகைய தாய்த்தலைமைக்கான அடையாளங்களை எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

References

இலக்குமி ரதன் பாரதி சோ., நமது சமூகம், பழநியப்பா பிரதர்ஸ், சென்னை, 1979.

கைலாசபதி.க., பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 1999.

சந்திரா சு.யாழ்., தொன்மவியல் கட்டுரைகள், அறிவுப்பதிப்பகம், சென்னை, 2009 (முதல் பதிப்பு).

சேதுப்பிள்ளை ரா.பி., தமிழ் இன்பம், பூம்புகார் பதிப்பகம், சென்னை, 2010 (முதற்பதிப்பு).

பக்தவத்சலபாரதி, தமிழர் மானிடவியல், அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், 2008 (இரண்டாம் பதிப்பு).

பக்தவத்சலபாரதி, தமிழர் மானிடவியல், அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், 2008 (இரண்டாம் பதிப்பு).

மாணிக்கம் வ.சுப., தமிழ்க்காதல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2005 (இரண்டாம் பதிப்பு).

மாதையன் பெ., அகத்திணைக் கோட்பாடும் சங்கஅகக்கவிதை மரபும், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2009 (முதல்பதிப்பு).

மாதையன் பெ., தமிழ்ச்செவ்வியல் படைப்புகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2011 (இரண்டாம் அச்சு).

ரோஸலிண்ட் மைல்ஸ்., ராதாகிருஷ்ணன் வி., (மொ.பெ.), உலக வரலாற்றில் பெண்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2007 (மூன்றாம் அச்சு).

Published

10.08.2016

How to Cite

சங்கஇலக்கியத்தில் தாய்வழிச்சமூகக் கூறுகள்: Caṅka’ilakkiyattil tāyvaḻiccamūkak kūṟukaḷ. (2016). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 2(6), 57-70. https://inamtamil.com/index.php/journal/article/view/154

Similar Articles

91-100 of 195

You may also start an advanced similarity search for this article.