மணிமேகலையில் மொழிக்கூறுகள்

Maṇimēkalaiyil moḻikkūṟukaḷ

Authors

  • இரா.யசோதா | R. Yasodha தமிழ் - முனைவர் பட்ட ஆய்வாளர், பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி - 620 017.

Keywords:

மணிமேகலை, மொழிக்கூறுகள், மொழி, கூறுகள்

Abstract

மணிமேகலைக் காப்பியத்தைத் தொடக்கம்முதல் படிக்கும்போது வடசொற் கலப்பும் புத்தமதக் குறியீடுகளும் மிகுந்திருப்பதை எளிதில் காணலாம். தமிழில் பல்சமயக் கோட்பாடுகளை வாpசையாக எடுத்துக்காட்டும் முதல்நூல் மணிமேகலையே.        மணிமேகலையானவள் பிற மதங்களின் மெய்ப்பொருள்களைக் கேட்டறிந்து அவற்றைப் படிற்றுரைகள் என ஒதுக்கிப் பின் புத்தமதத்தைத் தெளிந்து தழுவினள் என்பதே கதைப்போக்காக அமைகின்றது. சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை, தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை, பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை என்ற மூன்றும் பிறமொழிச் சொற்கள் நிரம்பிய காதைகளாக உள்ளன. பிறகாதைகளிலும் அயன்மொழிச் சொற்கள் கலந்து கிடக்கின்றன. சாத்தனார் வடமொழி அளவை நூற்குறியீடுகளை மிகுதியும் எடுத்துக்காட்டியுள்ளார். 

                        பக்கப் போலி யொன்பது வகைப்படும்

                   பிரத்தி யக்க விருத்தம் அனுமான

                   விருத்தம் சுவசன விருத்தம் உலோக

                   விருத்தம் ஆகம விருத்தம் அப்பிர

                   சித்த விசேடனம் அப்பிர சித்த

                   விசேடியம் அப்பிர சித்த வுபயம்

                   அப்பிரசித்த சம்பந்தம்                     (மணி.29:147-53)

இக்குறியீடுகளும், இவை போன்ற மற்ற வடசொற்கள் இருந்தாலும் வடவெழுத்து காப்பியம் முழுவதும் பரவியுள்ளது.

                        வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

                   எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே  (தொல்.சொல்.401)

எந்த வடவெழுத்து எந்தத் தமிழ் எழுத்தாக மாற வேண்டும் என்று தொல்காப்பியம் விதந்து கூறவில்லை.  சாத்தனார் தம் மொழிநுட்பத்தால் அயலொலிகளை முறையோடு தமிழ்ப்படுத்திக் காட்டியுள்ளார்.

References

சிலப்பதிகாரம் பன்முக வாசிப்பு - கா.அய்யப்பன் (பதி.),டிசம்பர் 2009, மாற்று வெளியீடு, சென்னை.

சிந்தனைக்களங்கள் - வ.சுப.மாணிக்கம், முதற்பதிப்பு 1975, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு.

மணிமேகலை காலம் - மு.கோவிந்தசாமி, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு.

மணிமேகலை மொழியியல் - வ.சுப.மாணிக்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு.

மணிமேகலை - ந.மு.வேங்கடசாமி நாட்டார் (உ.ஆ.), தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 18.

Published

10.05.2016

How to Cite

மணிமேகலையில் மொழிக்கூறுகள்: Maṇimēkalaiyil moḻikkūṟukaḷ. (2016). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 2(5), 29-37. https://inamtamil.com/index.php/journal/article/view/146

Similar Articles

31-40 of 194

You may also start an advanced similarity search for this article.