தொல்காப்பியரின் திணைப் பாகுபாடும் இளம்பூரணர் உரையின் பொருத்தப்பாடும்
Tolkāppiyariṉ tiṇaip pākupāṭum iḷampūraṇar uraiyiṉ poruttappāṭum
Keywords:
பொருத்தப்பாடு, தொல்காப்பியரின், திணைப் பாகுபாடு, திணை, பாகுபாடு, இளம்பூரணர் உரை, இளம்பூரணர், உரைAbstract
தொல்காப்பியம், சங்கநூல்கள் எனச் சுட்டப்படும் தமிழ்நூல்களின் உரைபற்றி அவ்வப்போது தமிழறிஞர் பலர் ஆராய்ந்து தத்தம் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். கல்வெட்டுக்கள் வழியும் மேனாட்டு ஆராய்ச்சிமுறைவழியும் தமிழின், தமிழரின் பெருமைகள் வெளிப்பட்டுவரும் இக்காலத்தில், கிடைக்கும் புதிய சான்றுகளைக் கொண்டு முன்னோர் முடிவுகளுடன் பொருத்தி இனங்காணுதலும் தேவையான ஆய்வுமுறைகளுள் ஒன்றாகும். அதேவேளை, இம்முறை பற்றி ஆராய்ந்த பெருமக்களின் முடிவுகளை நினைவுகூரலும் அவசியமான ஒன்றே! காலம் செல்லச் செல்ல, புதிய சான்றுகள் வெளிப்பட வெளிப்பட முன்னோர் முடிவுகளும் மாற்றம் பெறலாம். ஆராய்ச்சியானது முடிவிலித்தன்மை கொண்டது. அகத்திணை, புறத்திணை என்ற இருதிணை வாழ்வியலைப் பேசும் நூலாகத் தொல்காப்பியம் திணை வாழ்வியலை அகம் – புறம் என இரண்டாகப் பகுக்கின்றது. அவ்வாறு அகம் - புறம் என இரண்டாகப் பகுத்தாலும் அவற்றுக்கிடையே நிலவும் ஓர் ஓர்மையை, ஒருமித்த இழையோடும் பாங்கை இளம்பூரணர் உரையே நமக்குத் தனித்து அடையாளப்படுத்திக் காட்டுகின்றது. அவ்வடையாளத்தை அடையாளப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.
References
தொல்காப்பியம் – பொருளதிகாரம் இளம்பூரணம், கழக வெளியீடு, முதற்பதிப்பு 1959.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.