கோவலன் - கவுந்தியடிகள், மாடலமறையோன் உறவும் இன்னபிறவும் : ஒரு வாசிப்பு Kovalan - Kavunthiyadikal, Madalamaraiyon Relationship and etc.., – A Reading

Authors

Keywords:

சிலப்பதிகாரம், மணிமேகலை, கோவலன், கண்ணகி, மாடலமறையோன், கவுந்தியடிகள்

Abstract

செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார் என்பது காப்பியத்தில் ஒரு நியதியாகச் சுட்டப்பட்டுள்ளது. அதனால்தான் கோவலனின் தாயார், கண்ணகியின் தாயார் மாதரி முதலானோர் சொர்க்கம் அடையவில்லை என்று கூறப்படுகிறது. தன்னுடைய வினைப்பயனால்தான் சொர்க்கம் சென்றதுடன் தன் மனைவி கண்ணகியையும் உடன் அழைத்துச் சென்றான் கோவலன்.

கோவலன் இறந்தான், சாமியாக வரவில்லை. கோவலன் கண்ணகிக்கு வழித் துணையாக வந்த கவுந்தியடிகள் கோவலன் இறப்பை நினைத்து வருந்தி உண்ணாநோன்பு இருந்து இறந்தாள். அவளும் சாமியாக வரவில்லை. ஆனால் கண்ணகி சாமியாக வருகிறாள்.

இஃது ஒருபுறம் இருக்க, மாலதியின் மாற்றாள் மகவு பால்விக்கி இறக்க, பல்வேறு கோயில்களைத் தேடிச் சென்ற அவள் இறுதியாகப் பாசண்டச்சாத்தன் என்பவன் மூலமாகக் குழந்தையை மீண்டும் (சாத்தனே குழந்தையாக) பெறுகிறாள். குழந்தையாக வருகின்ற அப்பாசண்டச் சாத்தன் பின்னாளில் வளர்ந்து வாலிபனாகித் தேவந்தி என்ற பார்ப்பனியைத் திருமணம் செய்து கொள்கிறான். சில அண்டுகளுக்குப் பிறகு அவன் தீர்த்த யாத்திரை சென்று விடுகிறான். இப்படிச் சென்ற அவனும் பின்னர் தேவந்தியின் மீது சாமியாக வருகிறான். இந்த இரண்டு இணைவுகள் நடைபெறுவதன் பின்புலத்தில் உள்ள முரண்பாடுகள் குறித்தும் அவற்றிற்கான காரணங்கள் குறித்தும் விரிவான விளக்கங்களை அறிய வேண்டியுள்ளது. அவை குறித்து விரிவாக அறிய முயல்கிறது இந்தக் கட்டுரை.

It is written as a canon in the Kappiyam that God gives grace to those who have no works. That is why it is said that Kovalan's mother Kannagi's mother Mathari etc. did not reach heaven. Kovalan went to heaven due to his actions and took his wife Kannaki with him.

Kovalan died and did not come as Sami. The Counties who accompanied kovalan Kannagi mourned the death of kovalan and died fasting. She also did not come as Sami. But Kannagi comes as Sami.

Apart from this, after searching various temples to kill Malathi's substitute Magau Palviki, she finally gets the child back (as Satan himself) through Basanta Satan. Appasanda Satan, who comes as a child, later grows up and marries a seer named Devanti. After a few years he goes on a pilgrimage. Having gone like this, he also later comes as Sami on Devanti. The contradictions behind these two mergers and their reasons need to be explained in detail. This article tries to know about them in detail.

References

இளவழுதி வீ., சிலப்பதிகாரம் (மூலமும் உரையும்), 2015 (முதல் பதிப்பு), கவிதா பப்ளிகேஷன்ஸ், தி.நகர், சென்னை - 600 017.

இறைக்குருவனார், சிலம்பில் பிழையா (ம.பொ.சி.க்கு மறுப்பு), 1983 (மறுபதிப்பு - 1) தமிழ்க்கொடி பதிப்பகம் , 88 தம்புசெட்டித் தெரு, சென்னை - 600 001.

சிதம்பரனார், சாமி., சிலப்பதிகாரத் தமிழகம், 2008 (முதல் பதிப்பு), அறிவுப் பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை – 600 014.

சீனிச்சாமி. து., தமிழ் காப்பிய கொள்கை, 1985 (முதல் பதிப்பு) தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 010.

சுப்பிரமணிய ஆச்சாரியார் வெ.சு. , சிலப்பதிகார ஆராய்ச்சி, 1917, முனுசாமி முதலியார் நா., பத்திராதிபர் 'ஆனந்தபோதினி,' சென்னை.

சுப்பிரமணியன் ச.வே., கானல் வரி, 2002 (முதல் பதிப்பு), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 600 113.

திரிகூட சுந்தரம், பொ., சிலப்பதிகாரம் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்), 1967 (முதல் பதிப்பு), அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் நூல் வெளியீடு.

நடராசன், தி.சு., சிலப்பதிகாரம் மறுவாசிப்பு, 2015 (முதல் பதிப்பு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை - 600 098.

பஞ்சாங்கம், க., இலக்கியத் திறனாய்வு (பஞ்சாங்கம் கட்டுரைகள் II), 2010 (முதல் பதிப்பு), காவ்யா வெளியீடு, கோடம்பாக்கம், சென்னை – 600 024.

மாணிக்கம் ஞா. (உ.ஆ)., சிலப்பதிகாரம் தெளிவுரை, 2019 (பத்தாம் பதிப்பு), உமா பதிப்பகம், சென்னை – 600 001.

மீனாட்சி சுந்தரனார், தெ.பொ., சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் தெ.பொ.மீ களஞ்சியம் - 4, 2005 (முதல் பதிப்பு), காவ்யா வெளியீடு, கோடம்பாக்கம், சென்னை - 600 024.

வேங்கடசாமி மயிலை சீனி., பௌத்தமும் தமிழும், 1942, கழக வெளியீடு, சென்னை – 600 018.

இரட்டைக் காப்பியங்களில் மணிமேகலை பற்றிய செய்திகளின் பின்புல அரசியல், இனம் பல்துறை பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ், மலர்- 9, இதழ் -35, ISSN 2455 - 0531, https://inamtamil.com/journal/article/view/229

சிலப்பதிகார வாசிப்பில் உள்ள முரண்பாடுகளும் இடைவெளிகளும், ஜூலை - 2021, Shanlax International Journal of Tamil Research Volume: 6 Issue:1 P-ISSN: 2454- 3993 http://www.shanlaxjournals.in/journals/index.php/tamil/article/view/4035

தேவந்தி – மாடலமறையோன் பயணங்களில் உள்ள முரண்களும் அவற்றின் பின்னணியும், மார்ச் - 2023, புதிய அவையம், pp: 253 – 261, ISSN : 2456-821X http://www.shcpub.edu.in/shc/publish_paper/?name=Puthiya+Avaiyam

Published

29.05.2024

How to Cite

கோவலன் - கவுந்தியடிகள், மாடலமறையோன் உறவும் இன்னபிறவும் : ஒரு வாசிப்பு Kovalan - Kavunthiyadikal, Madalamaraiyon Relationship and etc.., – A Reading. (2024). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 10(38), 19-32. https://inamtamil.com/index.php/journal/article/view/263

Similar Articles

31-40 of 194

You may also start an advanced similarity search for this article.