கவிஞர் வெள்ளியங்காட்டானின் கடிதங்கள் KAVINGAR VELLIYANKATTANIN KADITHANGAL

ஒரு கவிஞனின் இதயம் எனும் நூலை முன்வைத்து ORU KAVINGANIN ITHAYAM ENUM NUULAI MUNVAITHTHU

Authors

  • MUNIYASAMY S MANNAR THIRUMALAI NAICKER COLLEGE, MADURAI

Keywords:

வெள்ளியங்காட்டான், வெள்ளியங்காடு, ஒரு கவிஞனின் இதயம், கடிதங்கள், நளினி, நவ இந்தியா

Abstract

ஆய்வுச்சுருக்கம்

எழுத்தாளன் மறைந்தாலும் எழுத்துக்கள் மறைவதில்லை என்பதற்கு வெள்ளியங்காட்டான் ஆகச் சிறந்த சான்று. இராமசாமி எனும் இயற்பெயர் கொண்ட இவர் தாம் பிறந்த ஊரான வெள்ளியங்காடு எனும் பெயரை வெள்ளியங்காட்டான் என மாற்றித் தம் பெயராக ஆக்கிக் கொண்டர். தனது வாழ்வின் இறுதிக்காலம் வரையிலும் ஒரு எழுத்தாளனாய் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துத் தடம் புரளாமல் நேர்மையாக வாழ்ந்துள்ளார். கொடிய வறுமையிலும் நெறி தவறாது தம் பிள்ளைகளை வளர்த்தது மட்டுமின்றி, தமிழ்ச் சமூகத்திற்குப் பல படைப்புகளைக் கொடுத்துள்ளார். யாராலும் கண்டு கொள்ளாத கவனிக்கப்படாத சிறந்த ஆளுமையாய்த் திகழ்ந்த இவர், தாம் உயிரோடு வாழ்ந்த காலங்களில் தனது பிள்ளைகளுக்குத் தனது வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்களை ஒவ்வொன்றாக 38 கடிதங்களாக எழுதியுள்ளார். அவற்றைச் சேகரித்து அவரது மகள் நளினி என்பவர் நூலாக வெளியிட்டுள்ளார். தொகுக்கப்பட்ட கடிதங்களில் காணலாகும் வெள்ளியங்காட்டனின் வாழ்வியலை விளக்கி எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

ABSTRACT

Velliyankattan is the best example that even if the writer passes away, his creations do not disappear. His birth name was Ramasamy, but he changed his name as Velliyankattan after his native town Velliyankadu. Even towards the end of his life, though he faced various crises as a writer, he lived an honest life. He not only brought up his children in extreme poverty but also gave many works to the Tamil community. He is an outstanding personality who was not noticed by anyone. He has written the experiences of his lifetime to his children as 38 letters. His daughter Nalini has collected those letters and has published them as a book. The objective of this  research article is based on explaining the life of Velliyankattan from those letters.

References

நளினி.இரா, ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான் கடிதங்கள், யதி வெளியிடு, கோயமுத்தூர்.

வெள்ளியங்காட்டான், நெஞ்சை உருக்கும் நீதிகதைகள், டிசம்பர், 2005, நளினி வெளியீடு கோயமுத்தூர்.

வெள்ளியங்காட்டான், வெள்ளியங்காட்டான் கவிதைகள், 2005, என். மகேந்திரன், யதி வெளியீடு, கோயமுத்தூர்.

Published

27.02.2024

How to Cite

கவிஞர் வெள்ளியங்காட்டானின் கடிதங்கள் KAVINGAR VELLIYANKATTANIN KADITHANGAL: ஒரு கவிஞனின் இதயம் எனும் நூலை முன்வைத்து ORU KAVINGANIN ITHAYAM ENUM NUULAI MUNVAITHTHU. (2024). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 9(37), 13-25. https://inamtamil.com/index.php/journal/article/view/261

Similar Articles

91-100 of 194

You may also start an advanced similarity search for this article.