அக இலக்கியங்களில் மிதவை மாந்தர்கள்
Keywords:
தலைவன், தலைவி, பரத்தைAbstract
அக இலக்கியங்கள் அக்காலத் தமிழரின் அகவாழ்வியலை எடுத்தியம்பும் தன்மையன. அக இலக்கியங்களில் மிதவை மாந்தர் என்போரின் பணி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்நிலையில், மிதவை மாந்தர்கள் ஆற்றிய பணிகளையும், தலைவன் தலைவியரிடையே கொண்ட உறவு நிலைகளையும் எடுத்துரைக்கும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.
தலைவன், தலைவி, பரத்தை ஆகியோரிடையே தூது செல்லும் வாயில்கள் பட்டியலில் மிதவை மாந்தர்களுக்கும் இடம் உண்டு. இவ்வாயில்களில் மிக நீண்ட தொலைவு பயணம் செய்து செய்தி உரைப்பதற்கு உரியவராகக் கூத்தரும் பாணரும் குறிக்கப்படுகின்றனர் என்பதைத் தொல்காப்பியம் சுட்டுகிறது.
தலைவனின் பரத்தமை ஒழுக்கம் காரணமாகச் சினம் கொண்ட தலைவியின் ஊடலைத் தணிக்கும் வாயில்களாக மிதவை மாந்தர்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றனர். மருதத்திணைப் பாடல்கள் பலவற்றில் இத்தகைய சூழலில் மிதவை மாந்தர்களைச் சந்திக்க முடிகிறது. பெரும்பாலும் தலைவியின் சின மொழிகளுக்கும், இகழ்ச்சிக்கும் உள்ளாகின்றவர்களாகவும், சில நேரங்களில் பரத்தையரால் கடியப்படுகின்றவர்களாகவும் மிதவை மாந்தர்கள் காட்சி தருகின்றனர். தலைவன் பொருள் தேடவோ வேறு வினை காரணமாகவோ வேற்று நிலங்களுக்குப் பிரிந்து சென்றிருக்கும் சூழலில், தலைவி தலைவனுக்கிடையில் தூதுவராக மிதவை மாந்தர்கள் செயலாற்றி உள்ளனர். முல்லை, நெய்தல் திணைப் பாடல்கள் இத்தகைய சூழல்களில் மிதவை மாந்தர்களைச் சித்திரிக்கின்றன. மேலும், தலைவன் தன் அகவாழ்வு அனுபவங்களை நெருங்கிய நண்பனிடம் பகிர்ந்து கொள்வதைப் போல், பாணனுடன் பேசி மகிழும் காட்சிச் சித்திரங்களையும் அகப்பாடல்களில் காண முடிகிறது. எனவே, மிதவை மாந்தர்கள் தலைவனிடம் கொண்ட உரிமையையும் உறவையும், தலைவியிடம் கொண்ட பணிவையும் இடைவெளியையும், தலைவியின் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் ஆட்பட்ட நிலையையும், அச்சூழலில் மிதவை மாந்தர்தம் எதிர்வினையையும் பற்றி எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
References
செல்வராசு அ., சங்க இலக்கியத்தில் குடிமக்களும் தலைமக்களும், முதற்பதிப்பு, 2007, எழில், திருச்சி-621 012.
மாதையன் பெ., சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும், நான்காவது பதிப்பு, டிசம்பர் 2012, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 014.
ராஜ்கௌதமன், பாட்டும் தொகையும் தொல்காப்பியரும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், முதல் பதிப்பு, நவம்பர் 2006, தமிழினி, சென்னை-14.
ஜெனிபாமேரி, இ., மகளிர் வர்ணனைவழி மிதவை மகளிரின் சமூக நிலை, இனம் - பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ், ஆகஸ்ட் 2016.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.