வ.சுப.மாவின் அச்சேறிய நூல்களும் நிறைவேறா ஆசைகளும்

The sublime texts and unfulfilled desires of Va.Supa. Maa.

Authors

  • சேது.முனியசாமி | Sethu. Muniyasamy முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

Keywords:

வ.சுப.மா., அச்சேறிய நூல், நூல், நிறைவேறா, ஆசை

Abstract

‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் சங்க இலக்கிய அடியைப் பாடிய கணியன் பூங்குன்றனாரும், பாரியும் கபிலரும், பண்டிதமணி கதிரேசச் செட்டியாரும் பிறந்த மண்ணான பறம்பு மலையில் (தற்போது பிரான்மலை) உதித்த மற்றொரு சான்றோர் வ.சுப.மா. ஆவார். தொன்றுதொட்டுத் தமிழுக்குப் பெருமை சேர்த்த சான்றோர்களின் வரிசையில் புகழோடு தோன்றித் தமிழுக்கு அழகு சேர்க்கும் மாணிக்கமாகத் திகழ்ந்தார். இளம் வயதில் தன் பெற்றோரை இழந்தார். அவ்வப்போது தாய்வழிப் பாட்டி மீனாட்சி ஆட்சியும் தாத்தா அண்ணாமலை செட்டியாரும் கண்ணும் கருத்தாய் வளர்த்ததற்கு நன்றி மறவாது தன்னுடைய முதல் படைப்பில்

 ‘‘என்னை உடனையார் ஏங்காதே வாழ்வளித்த

அன்னை முதல்வர் அடிப்பணிந்தோம்

உறவினர் வாழ உவந்தளிந்தார்; ஆயுள்

 நிறையினர் நின்ற நெறி”       (மனைவியின் உரிமை)

எனும் அடிகளின் மூலம் வள்ளுவர் கூறும் நன்றி மறவாமையைப் புலப்படுத்துகின்றார்.

             தமிழாய்வு எனும் களத்தில் வ.சுப.மா. ஆற்றியுள்ள பங்களிப்பு அளப்பரியது. ’முனைவர்’,  ’மூதறிஞர்’, ’செம்மல்’, ’தமிழ்க் காந்தி’, ’தமிழ் இமயம்’ எனும் பல்வேறு புகழ்ப் பெயர்களைப் பெற்று விளங்கியவர். 1917ஆம் ஆண்டு இவ்வுலகக் காற்றினைச் சுவாசிக்கத் தொடங்கி, 1989ஆம் ஆண்டு சுவாசித்த காற்றை நுகர மறந்தார். பன்முகப் பரிமாணங்களில் தடம் பதித்த வ.சுப.மா. எழுத்துப்பணியில் தன்னை மூழ்கடித்துக் கொண்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவ்வகையில் இக்கட்டுரையானது, எழுத்துத் துறையில் தன்னைப் பதித்ததன் விளைவாயெழுந்த (அச்சேறிய) நூல்களையும், எதிர்காலத்தில் இன்ன பணி செய்ய வேண்டுமெனத் திட்டமிட்டு நிறைவேறா ஆசைகளையும் எடுத்து இயம்புவதாக அமைகின்றது.

References

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் உரைநடை, சக்திவேல்.சு, 2005, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்

கம்பர், மாணிக்கம் வ.சுப., 1990, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.

மாணிக்கச் செம்மல், சாரங்கபாணி இரா., 2016, நூற்றாண்டு வெளியீடு.

வ.சுப.மாணிக்கம், மோகன் இரா., 1999, சாகித்ய அகாதெமி, டெல்லி.

Published

10.02.2017

How to Cite

சேது.முனியசாமி ச. (2017). வ.சுப.மாவின் அச்சேறிய நூல்களும் நிறைவேறா ஆசைகளும்: The sublime texts and unfulfilled desires of Va.Supa. Maa. இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies), 2(8), 10–17. Retrieved from https://inamtamil.com/index.php/journal/article/view/165