இரா.க.சண்முகம் செட்டியாரின் சிலப்பதிகார உரைப்பதிப்பில் தமிழுணர்ச்சி
Tamil sentiment in the Silappathikara text version of Ira K. Shanmugam Chettiar
Keywords:
தமிழுணர்ச்சி, உரைப்பதிப்பில், சிலப்பதிகார, இரா.க.சண்முகம் செட்டியாரின்Abstract
உரைக்களம்
இந்திய விடுதலைக்குப் பின்னர்ப் பதவியேற்ற இந்திய அரசின் முதல் நிதியமைச்சர். இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர். தனது அரசியந்திரத்தில் நேர்ந்த தவறுக்காக உயிர் துறந்த சிலப்பதிகாரப் பாண்டியன் நெடுஞ்செழியனைப் போன்று, தமது அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் செய்த விதிமீறல்களுக்குப் பொறுப்பேற்றுப் பதவியை துறந்தவர். தமிழிசை இயக்கத்தைத் தோற்றுவித்தவர் ஆகிய பெருமைகளுக்கு உரிய இரா. க. (ஆர்.கே.) சண்முகம் செட்டியார் (சண்முகனார்) சிலப்பதிகாரப் புகார்க்காண்டத்திற்கு உரை எழுதிய பெற்றியர். பலராலும் அறியப்படாத பதிப்பாகிய சண்முகனாரின் சிலப்பதிகார உரைப்பதிப்பு உணர்த்தும் தமிழுணர்ச்சியை எடுத்துக் காட்டுவது இவ்வுரையின் களமும் தளமும் ஆகும். இம்முயற்சிக்குச் சண்முகனாரின் சிலப்பதிகாரப் புகார்க்காண்ட உரை முதன்மைத் தரவாகும். சிலப்பதிகாரப் பழையவுரைகள், புத்துரைகள், ஆய்வுநூல்கள் போல்வன துணைத்தரவுகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. முதற்கண் சிலப்பதிகார உரைகளின் தோற்றம்; வளர்ச்சி ஆகியவற்றை அறிவோம்.
References
சண்முகம் செட்டியார். ஆர்.கே. (உரைஆ.). 1946. சிலப்பதிகாரம் – புகார்க்காண்டம். கோயம்புத்தூர்: புதுமலர் நிலையம்.
சாமிநாதையர். உ.வே. (பதி.ஆ.). 2008 (11ஆம் பதிப்பு). சிலப்பதிகாரம். சென்னை: உ.வே.சா. நூல்நிலையம்.
மணி.ஆ. 2010. செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள். புதுச்சேரி: தமிழன்னை ஆய்வகம்.
https://ta.wikipedia.org/wiki/ஆர்.கே._சண்முகம் செட்டியார். பார்த்தநாள்: 18.10.2016.
http://tamil.thehindu.com/tamilnadu/சுதந்திர-இந்தியாவின்-முதல்-நிதியமைச்சரின் - சிலை-திறப்பு/article6184822.ece. பார்த்தநாள்: 18.10.2016.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.