கண்ணகி மரபு: தமிழ் இன அடையாள உருவாக்கமும் அடையாள அழிப்பின் அரசியலும்

Kannaki tradition: Tamil ethnic identity formation and the politics of identity annihilation

Authors

  • முனைவர் சிலம்பு நா.செல்வராசு | Dr. Silambu N. Selvarasu தமிழ்த்துறை, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி, இந்தியா.

Keywords:

கண்ணகி மரபு, கண்ணகி, மரபு, தமிழ், தமிழ் இன, அடையாள உருவாக்கம், அடையாள அழிப்பின் அரசியலும், அடையாளம், அரசியலும்

Abstract

சிலப்பதிகாரம் எனும் பிரதி ஒற்றைப் பொருண்மை கொண்டதன்று. அது கண்ணகி தொன்மம் - இளங்கோவடிகளின் அரசியல் நிலைப்பாடு - காப்பியநிலை - எனப் பன்முகப்பட்டது. இம்மூன்றையும் ஒற்றைப் பொருண்மை உடையனவாகக் கருதும்போது பல முட்டுப்பாடுகள் தோன்றக் கூடும். புராதன தாய்ச்சமூக மரபிலிருந்து தோன்றி வழங்கி வந்த கண்ணகி தொன்மத்தை அரசியல் துறவியாகிய இளங்கோவடிகள் (கவனித்தல் வேண்டும் அவர் சமயத் துறவி அல்லர்) பேரரசு உருவாக்கம் என்னும் கருத்தியலின் அடிப்படையில் சிலப்பதிகாரம் எனும் காப்பியமாக உருவாக்குகின்றார். பேரரசு உருவாக்கத்தின் இலக்கிய ஆக்கமாகவும் சிலப்பதிகாரத்தைக் கருதுதல் வேண்டும். எனவேதான் கண்ணகி தெய்வமாகிய பின்னரும் சிலப்பதிகாரத்தின் கதை நீட்சி பெறுகின்றது. (விரிவிற்குப் பார்க்க: சிலம்பு நா. செல்வராசு.2006) பன்முகமாக நிலைகொண்ட இனக்குழு அரச மரபுகளை ஒற்றை நிலையிலான பேரரசு அமைப்பிற்குள் கொண்டுவரும் சமூக வளர்நிலையில் சிலப்பதிகாரம் அவ்வளர்நிலையை நியாயப்படுத்துவதாக அமைகின்றது. இளங்கோவின் அரசியல் துறவறமும் இந்த நியாயப்படுத்துவதன் கூறாகக் காணுதல் வேண்டும். இவ்வளர்நிலை தமிழ்ச் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஊடுபாவாக இழையோடுவதை உணர முடியும். குடும்பம், அரசு, சமயம் எனும் இச்சமூக நிறுவனங்களும் பன்மை நிலையிலிருந்து ஒற்றைப்பொருண்மை நிலை நோக்கி நகரத் தொடங்கின. ஒருகணவ மணமுறைக் குடும்பம் அல்லது பெருங்குடும்பம், பேரரசு, பெருஞ்சமயம் என்னும் சொல்லாடல்களாக அவை வடிவெடுத்தன. இவற்றை உள்கட்டுமானமாகக் கொண்டு சிலப்பதிகாரம் தம் அரசியலை நிகழ்த்தத் தொடங்கியது. இந்த அரசியல் எனும் நாணயத்தின் இன்னொரு பக்கம் தமிழ்த் தேசியம் எனும் கருத்தியலாக வடிவெடுத்தது. இதுபற்றிச் சிறிது விளக்கமாக அறியமுடியும்.

References

 அரசு, வீ. 2009. சிலப்பதிகாரப் பனுவலும் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் வரலாறும். சிலப்பதிகாரம் பன்முக வாசிப்பு. சென்னை: மாற்று

 அருணாச்சலம், ப.1971. சிலப்பதிகாரச் சிந்தனை. சென்னை: பாரிநிலையம்.

 அறவாணன், க.ப. 1972. புரட்சிப்பொறிகள். சென்னை: தமிழ்க்கோட்டம்.

 கைலாசபதி, க. 1996. அடியும் முடியும்.சென்னை: பாரிநிலையம்.

 சண்முகசுந்தரம், சு. 2011. திராவிடத் தெய்வம்: கண்ணகி. சென்னை: காவ்யா.

 சண்முகலிங்கன், என். 2013, “ஈழத்தில் கண்ணகை: மரபுகளும் மாற்றங்களும்”. சிலப்பதிகாரம்: கவிதையியல் பண்பாட்டியல் மொழியியல் அரசியல். புதுச்சேரி: புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.

 சிவஞானம். ம.பொ. 1977. சிலப்பதிகார யாத்திரை. சென்னை: பூங்கொடிப் பதிப்பகம்.

 1978, சிலப்பதிகார ஆய்வுரை. சென்னை: பூங்கொடிப் பதிப்பகம்.

 1979. சிலப்பதிகாரத் திறனாய்வு. சென்னை: பூங்கொடிப் பதிப்பகம்.

 சிறிகாந்தன், சண்முகராஜா. 2013. “பௌத்தமரபில் பத்தினி தெய்யோ” சிலப்பதிகாரம்: கவிதையியல் பண்பாட்டியல் மொழியியல் அரசியல். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.

 சீனிவாச அய்யங்கார், பி.டி.1929 (1989). தமிழர் வரலாறு. சென்னை: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

 சுப்பிரமணிய அய்யர், ஏ.வி.1959. தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி. சென்னை: அமுதன் நிலையம்.

 செல்வராசு, சிலம்பு. நா. 2006. பண்டைச் சமூக உருவாக்கமும் சிலப்பதிகாரத்தின் இலக்கிய அரசியலும். தஞ்சாவூர்: அகரம்.

 … 2013. கண்ணகித் தொன்மம்: சமூக மானுடவியல் ஆய்வு. நாகர்கோவில்: காலச்சுவடு.

 பக்தவத்சல பாரதி. 2012. மானிடவியல் கோட்பாடுகள். புத்தாநத்தம்: அடையாளம்.

 … 2013. பாணர் இனவரைவியல். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

 … 2015. இலக்கிய மானிடவியல். புத்தாநத்தம்: அடையாளம்.

 பஞ்சாங்கம், க. 1993. சிலப்பதிகாரத் திறனாய்வுகள்: ஒரு பார்வை. சிவகங்கை: அன்னம்.

 பெருமாள், அ.க. & செந்தீநடராசன். 2015. கேரளத்தில் கண்ணகி வழிபாடு. அச்சுவடிவம் பெறாதது.

 ரகுநாதன், சிதம்பர.1984. இளங்கோவடிகள் யார். மதுரை: மீனாட்சி புத்தக நிலையம்.

 இராகவையங்கார், மு. 1938. ஆராய்ச்சித் தொகுதி. திருச்சிராப்பள்ளி: பழனியப்பா பிரதர்ஸ்.

 வையாபுரிப்பிள்ளை. 1954(1991) காவிய காலம். சென்னை: பாரிநிலையம்

 Fynes, R.c.c.1993. Isis and pattini: The Transmission of a Religious Idea from Roman Egypt to India. JRAS, series 3.3.3 PP377-391.

 Obeyesekere, Gananath.1984.The cult of the Goddess pattini. Chicago: University of chiago press.

Published

10.08.2016

How to Cite

கண்ணகி மரபு: தமிழ் இன அடையாள உருவாக்கமும் அடையாள அழிப்பின் அரசியலும்: Kannaki tradition: Tamil ethnic identity formation and the politics of identity annihilation. (2016). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 2(6), 28-56. https://inamtamil.com/index.php/journal/article/view/152

Similar Articles

1-10 of 194

You may also start an advanced similarity search for this article.