ஔவையார் பாடல்களில் பெண்ணியம்
Feminism in Auvaiyar songs
Keywords:
அச்சம், மடம், நாணம், பயிர்ப்புAbstract
பழங்கால இலக்கியங்களை நோக்கும் போதுஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்தாலும்பாரம்பரியமாகப் பெண்கள் பற்றி வழங்கி வருகின்ற புனைவுக் கருத்துகளைத் தகர்ப்பனவாக அமைந்தாலும் ஆணாதிக்கச் சார்பானவையாகவேகொள்ளப்படும். இதற்கு மாறாக அவை, ஆண் - பெண் சமத்துவத்தை ஏதோ வகையில் மறுப்பனவாக அமைந்தாலும், பெண்கள் பற்றி - அவர்களை அடிமையாக்கும் வண்ணம் - காலம் காலமாக வழங்கி வருகின்ற சமூகப் படிமங்களை மேலும் வலியுறுத்துவனவாக அமைந்தாலும்அத்தகைய இலக்கியங்கள் பெண்ணியத்திற்கு எதிரானவை என்றே கருதப்படும். சங்ககாலப் புலவர்களின் கவிதைகளை ஆராயும்போது இந்த அளவுகோல்களின் வாயிலாகவே அவர்தம் சிந்தனைகள் பெண்கள் சார்பானவையா அன்றிப் பெண்களுக்கு எதிரானவையா என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும் ஓரே ஆசிரியரே, ஒரு சமயத்தில் அல்லது ஒருசில கருத்துகளில் பெண்களுக்குச் சார்பானவராகவும், ஒரு சில கருத்துகளில் பிறிதொரு சூழ்நிலையில், பெண்களுக்கு எதிரான கருத்தமைவு கொண்டவராகவும் புலப்படுத்தல் கூடும். அவ்வாறு அமைந்தால் அவர்தமது காலத்தினாலும் சூழலினாலும் தம்மீது ஆதிக்கம் செலுத்துகின்ற சிந்தனைகளிலிருந்து எவ்வளவு விடுபட்டுள்ளார் அல்லது அதற்கு ஒத்துப்போயிருக்கிறார் என்பதை வைத்தும், மொத்தத்தில் அவரது சிந்தனைகள் பெரும்பான்மை அளவில் எவ்வாறு இயங்குகின்றன என்பதை வைத்தும் அவரை மதிப்பிட முடியும்.
References
சாமிநாதய்யர் உ.வே.(உரை.), 2009, குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சா.நூல்நிலையம், சென்னை.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.