சி.கணேசையரின் உரைத்திறன் (அகநானூறு)

Authors

  • மு.கனிக்குமார் முனைவர்பட்ட ஆய்வாளர், அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

Keywords:

சி.கணேசையரின், உரைத்திறன், அகநானூறு, சொற்பொருள், அறிவுரை, பழிப்புரை, பொன், நூல், புகழ், மாற்று, எழுத்தின் ஒலி, புகழுரை, விரிவுரை, விடை

Abstract

மொழியின் தோற்றமானது உயிரினப் பரிணாமங்களில் மனிதனைத் தனித்து அடையாளம் காட்டியது. அத்தகு மனித இனம் கண்ட அனுபவித்த நுகர்ந்தவைகளையெல்லாம் தமது எழுத்தாக்கத்தின் மூலம் உலகிற்கு எடுத்தியம்பினான். அவ்வாறு எடுத்துரைத்த எழுத்தாக்கங்களின் பொருளினை, கல்வியில் நாட்டமுடையோர் கற்று ஐயங்களை நீக்கித் தெளிவுறும் பொருட்டு எழுந்தவையே உரைகளாகும். உலக மொழிகளில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவிற்குப் பலவகையான சிறந்த உரைகள் காலந்தோறும் தொடர்ச்சியாகப் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் தமிழில் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. உரைகள் தமிழ் மக்களின் சிந்தனையில் வேரூன்றிப் பண்பாட்டில் தழைத்து வளர்ந்து செயல்களில் சிறந்து விளங்குகின்றன. தலைமுறை தலைமுறையாக நூல்களுக்கு உரைகேட்டுப் பழகியவர்களும் தொடக்கத்தில் விரிவான உரையோ விளக்கமோ எழுதவில்லை. முதன்முதலில் தோன்றிய உரையின் வடிவமானது அருஞ்சொற்களுக்குப் பொருள் கூறும் முறையிலேயே அமைந்ததென்பர். இத்தன்மை சிறப்புப் பொருந்திய உரையினைக் கணேசையர் கையாண்ட முறை குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

References

ச.மெய்யப்பன், கழகத்தமிழகராதி.

தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையர் உரை, வேற்று.நூ.74.

தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சினார்க்கினியர் உரை, அகத்.நூ.41.

மு.வை. அரவிந்தன், உரையாசிரியர்கள்.

Published

10.05.2017

How to Cite

மு.கனிக்குமார் ம. (2017). சி.கணேசையரின் உரைத்திறன் (அகநானூறு). இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies), 3(9), 28–31. Retrieved from https://inamtamil.com/journal/article/view/131