டோனி மொரிசனின் நாவல்களில் தலைமுறையினருக்கு இடையேயான முரண்பாடு

Generational Conflict in Toni Morrison’s Novels

Authors

  • கலாநிதி ஜீ. கென்னடி | Dr. J. Kennedy சிரேஸ்ட ஆங்கில விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

Keywords:

Generation, Conflict, Economic imbalance, Race, Class, Age தலைமுறை, முரன்பாடு, பொருளாதாரச் சமமின்மை, இனம், வர்க்கம், வயது

Abstract

ஆய்வுச் சுருக்கம்

பொருளாதாரச் சமநிலையின்மை, இன மற்றும் சாதி அல்லது வர்க்க வேறுபாடுகள், நிறப் பின்னணி, சிந்தனைக் கருத்தியல் மற்றும் ஏனைய பல காரணங்களின் நிமித்தமாக மக்கள் முரண்பாடுகளுக்கு உட்படுகின்றனர். முரண்பாடுகளைப் பற்றி நாம் பேசும்போது, அவை வீட்டுக்கு வெளியில் மட்டுமே இடம்பெறும் ஒரு விடயமாக வரையறுத்துக்கொள்ள இயலாது. வீட்டினுள்ளேயும் முரண்பாடுகள் எழுகின்ற அதேவேளை அவை வீட்டுக்கு வெளியில் எழுகின்ற முரண்பாடுகளைப் பார்க்கிலும் வலுவுடையனவாகக் காணப்படுகின்றன. இம்முரண்பாடுகளின் மத்தியில் தலைமுறைவழி இடைவெளி பிரதான வகிபங்கினை எடுத்துக் கொள்கின்றது. இரு பகுதி மக்களுக்கிடையிலான வயது வேறுபாடுகள் தலைமுறைவழி இடைவெளி என அழைக்கப்படும் அதேவேளை இந்த இடைவெளியானது ஒரு குழுவிற்கு 'இடையிலான' எந்தவொரு வகையிலான முரண்பாடுகள் உருவாவதற்கும் காரணமான பிரதான வகிபங்கினை வகிக்கின்றது. இங்கு 'இடையிலான' என்னும் பதமானது வீட்டுக்கு உள்ளே, வீட்டுக்கு வெளியே ஆகிய இரு பகுதிகளுக்குமான முரண்பாடுகளை விஸ்தரிக்கப்படத்தக்க நிலையை விளக்குவதாக அமையும்.  

டோனி மொரிசன் பல்வேறு தலைப்புக்களில் ஆக்கங்களைப் படைத்துள்ள ஒரு பெண் நாவலாசிரியர் ஆவார். இவருடைய தலைப்புகள் கறுப்பின மற்றும் வெள்ளை இன அமெரிக்கர்களுக்கிடையிலான முரண்பாடுகளை உள்ளடக்குகின்றன. அமெரிக்க ஐக்கிய இராச்சியத்தினுள் வாழும் கறுப்பினச் சமூகத்தினருக்குள்ளேயே பொருளாதாரம், சிந்தனைக் கருத்தியல், கௌரவம் மற்றும் ஏனைய பல விடயங்களின் காரணமாக முரண்பாடுகள் ஏற்படுகின்றன. அத்துடன் கறுப்பினச் சமூகத்தினரிடையே 'கறுப்பினத்தவர்கள்' மற்றும் 'அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள்' எனும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட இந்த முரண்பாடானது 'இன ரீதியான அல்லது இனத்தைத் தேடும் கறுப்பினத்தவர்கள்' மற்றும் 'அமெரிக்க அல்லது அமெரிக்க மயமாக்கப்பட்ட கறுப்பினத்தவர்கள்' என்பதாக இனங்காணப்பட முடியும். 

இந்த ஆய்வானது பிரதானமான மற்றும் முக்கியமான தலைப்புக்களில் ஒன்றான தலைமுறை முரண்பாடு என்னும் தலைப்பினை வெளிக்கொணரும் ஒன்றாக அமைகின்றது. மொரிசன் அவர்கள் கறுப்பின அமெரிக்க பெண் எழுத்தாளராக இருந்தபோதும், அவர் தன்னை ஒரு கறுப்பினத்தவராகவோ அல்லது அமெரிக்கராகவோ அல்லது பெண்நிலையியல் கொண்டவராகவோ மட்டுப்படுத்திக்கொள்ளவில்லை; மாறாக, அவர் உலகளாவிய நோக்கில் இந்த தலைப்பினை ஆராய்ந்து, ஒரு உலகளாவிய எழுத்தாளராகத் தன்னை வெளிப்படுத்தி நிற்கின்றார்.  

Abstract

People conflict for many reasons, such as economic imbalance, racial and cast or class differences, colour background, ideology, etc.  When we speak about conflicts, we must not confine ourselves outside the home.  Inside any home itself conflicts arise and they become more powerful that that of the conflicts outside homes.  Among the conflicts, generational gap takes a major role.  Age differences between two sets of people is called generation gap and this gap plays the main role for any kinds of conflicts “within” a group where the term “within” could be expanded inside and outside home. Toni Morrison is an American female novelist who deals with many themes.  Her themes include conflicts between Black and White Americans. Among the Black community inside the USA conflicts for many reasons such as economy, ideology, prestige, etc.  Further within the Black Community there are conflicts between the “Blacks” and “Americanized Blacks.” The above conflict could be identified as “ethnic or ethnicity-seeking Blacks” and “Americanized or American-adapted Blacks.” This research brings out one of the major and important themes; generational conflict.  Though Morrison is a Black American Female writer, she does not confine herself to Black or American or Feminine, instead she deals the theme as universal and makes herself as a universal writer.

References

உசாத்துணைகள்

முதன்மை உசாத்துணைகள்

Morrison, Toni. Song of Solomon. London: Vintage, 1977.

Morrison, Toni. Tar Baby. London: Vintage, 1981.

Morrison, Toni. Sula. New York: Penguin, 1982.

Morrison, Toni. Jazz. London: Vintage, 1992.

Morrison, Toni. The Bluest Eye. London: Vintage, 1999

இரண்டாம் நிலை உசாத்துணைகள்

Adcox, Susan. Looking at the Generation Gap Generational Differences and Their Causes. https://www.verywellfamily.com/looking-at-the-generation-gap-1695859. Pg. 3.

Feldman, Robert. S. Understanding Psychology (5th Ed). McGrawHill, USA, 1996. 432.

Frederick, Earl. “The Song of Milkman Dead.” The Nation 225. 19 November 1977. 536.

Grewal, Gurleen. ; “The Recolonizing Vision: The Bluest Eye.”Circles of Sorrow, Lines of Struggle – The Novels of Toni Morrison. 2000. 13.

Hawkes, David. Ideology. London: Routledge, 2003. 165.

Lester, Rosemarie K. “An Interview with Toni Morrison, Hessian Radio Network, Frankfurt, West Germany.” Mckay, Nellie. Y ed. Critical Essays on Toni Morrison. Boston: Hall, 1998. 54.

MaKay, Nellie Y. ed. Critical Essays on Toni Morrison. 2003. 183.

Russell, Sandi. “It’s Ok to Say Ok.” Critical Essays on Toni Morrison. ed. Nellie Y. MaKay. Boston: Hall, 1998.

Santrock , John W. Adolescence. Times Mirror Higher Education Group, USA. 1996. 21-22.

Published

10.05.2021

How to Cite

டோனி மொரிசனின் நாவல்களில் தலைமுறையினருக்கு இடையேயான முரண்பாடு: Generational Conflict in Toni Morrison’s Novels. (2021). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 7(26), 4-14. https://inamtamil.com/index.php/journal/article/view/117

Similar Articles

1-10 of 195

You may also start an advanced similarity search for this article.