புழங்குகருவிகளைக் குழந்தைகட்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் குழ.கதிரேசன் கவிதைகள்

Authors

  • முனைவர் ஜெ.ரஞ்சனி உதவிப் பேராசிரியர், கல்வியியல் துறை, சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

Keywords:

புழங்குகருவி, குழந்தைகட்கு, குழ.கதிரேசன், கவிதைகள்

Abstract

இயற்கையின் பேராற்றல் மிக்க இவ்வுலகத்தில் பிறந்தோம், வளர்ந்தோம், மடிந்தோம் என்றே இவ்வுலகத்தை நாம் கடந்து விட்டபோதும் அறிவை வளர்த்தோம் என்று சொல்லும் அளவிற்கு ஒரு சிலரே இவ்வையகத்தில் அறிவியல் சாதனை படைத்து,  இறந்தும் இறக்காமல் வாழ்ந்து வருகின்றனர். பூமியை அறிந்த நாளிலிருந்தே மனிதன் ஒவ்வொன்றையும் தன் அறிவால், அறிவியலைக் கவர்ந்தவனாய், அதனை நோக்கிச்  செல்லப் பயணித்தான். ”அவனின்றி அசையாது உலகம்” என்ற சான்றோர் பொன்மொழியைக் கூட ”அணுவின்றி இயங்காது உலகம்” என மாற்றிவிட்டான். அறிவியலைக் கொண்டு, நாகரிகத்தை மாற்றிக் கொண்டான். குறுகிய காலத்தில் தகவல்தொடர்பு, பொருளாதார பரிமாற்றம்,  விவசாயம், தொழில்நுட்பம் இப்படிப் பற்பல சாதனைகளைப் படைத்து, இன்று கடவுள் துகள் எனும் ஹிக்ஸ்போசான் துகள்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறான்.

குழந்தைப் பருவத்தில், அறிவியல் அவர்களின் சின்னஞ்சிறு மூளைக்குள்ளும் புகுந்து எண்ணற்ற புதிய சிந்தனைகளை உருவாக்கி விடுகின்றது. அந்த மழழைச் செல்வங்களிடத்தே ஆர்வம் பெருகி வருவதைத் தொடர்ந்து, அறிவியல் செய்திகளை உள்ளடக்கிப் பல்வேறு குழந்தை இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. அவ்வகையில், குழந்தைக் கவிஞர் குழ.கதிரேசன் அவர்களின் குழந்தை இலக்கியப் பாடல்களில் காணலாகும் அறிவியல் செய்திகளை இனங்காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.

References

குழ. கதிரேசன், பள்ளிக்கூட வெள்ளாடு

குழ. கதிரேசன், மழலைப் பூக்கள்

குழ. கதிரேசன், சிரிக்கும் மழலை

Published

10.08.2017

How to Cite

புழங்குகருவிகளைக் குழந்தைகட்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் குழ.கதிரேசன் கவிதைகள். (2017). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 3(10), 39-42. https://inamtamil.com/index.php/journal/article/view/193

Similar Articles

31-40 of 194

You may also start an advanced similarity search for this article.