இணையவழிக் குறுஞ்செயலி (Apps) உருவாக்கம்
App creation for E-Source
Keywords:
இணையவழி, குறுஞ்செயலி, Apps, உருவாக்கம்Abstract
இணையப் பயன்பாடு மிகுந்துவரும் இக்காலத்தில் அதனுடன் இணைந்து பயணிக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது. இப்பயணம் பல்வேறு நிலைகளில் அமைந்துள்ளது. அவற்றைச் சமூக வலைதளம் (Social Network), பொதுத்தளம் (Public Site), மின்நூலகம் (e-Library), மின்பதிப்பகம் (e-Publication), மின்னிதழ் (e-Journal), பிளே குறுஞ்செயலிக் கிடங்கு (Play Store) எனப் பல வகைகளில் காட்டலாம். இவற்றுள் குறுஞ்செயலிக் கடையைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். இதில் குறுஞ்செயலிகள் (Apps) நிரம்ப உள்ளன. குழந்தைகள் முதல் முதியவர் வரை வாசிக்கத் தகுந்தவையும் கற்கக் கூடியவையும் உள்ளன. அவற்றின் மூலம் சிந்தனைகளைச் செல்பேசிகளில் நிறுவிப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பிறமொழிகளுக்கான நூல்கள் குறுஞ்செயலிகளாகக் கிடைக்கப்பெறுகின்றன. தமிழுக்கு அவை மிகக் குறைந்தளவிலேயே உள்ளன. ஆயினும், நூல்கள் அனைத்தும் குறுஞ்செயலிகளாக உருவாக்கப்பட வேண்டும். அதற்கு, ஜாவா (Java) எழுதும் திறன் அவசியம். இதனைப் பூர்த்தி செய்வதற்குச் சில நிறுவனங்கள் பொது வடிவமைப்பை (Template) உருவாக்கி இணையத்தில் குறுஞ்செயலி உருவாக்கும் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளன. அதற்கான காணொளிகளும் (Video) யுடியூப் (Youtube) வலைப்பக்கத்தில் உள்ளன. அதனைப் பார்த்தும் உருவாக்க முயற்சிக்கலாம். இங்குக் குறுஞ்செயலியூற்று (AppsGeyser) எனும் நிறுவனத்தின் மூலம் குறுஞ்செயலி உருவாக்கும் முறை பற்றிக் கூறப்பெறுகின்றது.
References
சுந்தரம் இல., 2015, கணினித்தமிழ், விகடன் பிரசுரம், சென்னை.
www.appsgeyser.com
www.youtube.com
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 இனம் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam International E-Journal of Tamil Studies)
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.